This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Sunday, February 26, 2017
மனச்சோர்வு எனும் கொடு நோய் *********************மன நல மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கு அறிவுறுத்தப்பட்டாலே ‘மன நோயாளி’ என்பதாக எடுத்துக்கொள்ளப்பட்ட காலமொன்று இருந்தது. அறிவுரை தேவைப்படுகிறவர் மட்டுமல்லாமல், அவரது குடும்பத் தினரும், இதனால் சமூகத்தில் தங்களைப் பற்றியஇளக்காரமான பார்வை ஏற்படுமே என்ற கவலையோடு, அந்த ஆலோசனையைத் தவிர்த்ததுண்டு. இன்றும், பெரும்பகுதி மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு பரவ வேண்டியிருக்கிறது என்றாலும் கூட, இதை ஒரு களங்கமாகக் கருதுகிற சமூகப் பார்வையில் ஓரளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் உள்பட மன நலப் பிரிவு களை வைத்திருக்கின்றன. ஆலோசனை நாடிவருவோரில் பெரும்பாலோர் டிப்ரஸ்ஸன் எனப்படும் மனச்சோர்வு என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் தெரிவித் திருக்கிறார்கள்.உலகம் முழுவதுமே இயலாமையை ஏற்படுத்துகிற காரணிகளில், மனச்சோர்வு முதலிடத்தில் இருக்கிறது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை, 2005க்கும் 2015க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகாலத்தில், மனச்சோர்வால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்து விட்டதாகத் தெரிவிக்கிறது. வளரும் நாடு களில்தான், இந்நோயின் பாதிப்பு 80 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. இந்தியாவில் 2015ல்மனச் சோர்வுக்கு சிகிச்சை தேடி மருத்துவர்களைநாடியவர்கள் 5,66,75,969 பேர். இது நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதமாகும். இதேகாலகட்டத்தில், கவலை தரும் எதிர்பார்ப்பு அல்லது பரபரப்பு காரணமாக மனச் சோர்வடைந்தவர்கள் 3,84,25,093 பேர் -அதாவது3 சதவீதத்தினராவர். மனதளவில் மட்டு மல்லாமல் உடல் சார்ந்த இயலாமையும் மிகப் பெரிய அளவுக்கு மனச்சோர்வு ஏற்படுத்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.மிகுந்த கவலைக்குரிய தகவல் என்ன வென்றால், தற்கொலையால் ஏற்படும் மரணங் களுக்கு மனச்சோர்வுதான் மையமான காரணி என்பதாகும். ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 8 லட்சத்தைத் தொடுகிறது. உலகில் 20ல் ஒருவருக்கு இப்பிரச்சனை இருப்பதாக மேற்படி ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. வேலை உள்ளிட்ட தங்களது ஈடுபாடுகளில் ஆர்வம்இழப்பது, என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் விழுவது, சமூகம் என்ன செய்யுமோ என்ற கவலையில் மூழ்குவது உள்ளிட்டவை மனச்சோர்வின் சில விளைவுகளாகும். இத்தகையவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு ஒரு சுமையாகிவிடுவதோடு, நாடும் சமுதாயமும் இவர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய அரிய பங்களிப்பை இழக்க நேரிடுகிறது.உலக சுகாதார நிறுவன ஆய்வாளர்கள், இன்றைய சூழலில் இதற்கான ஒரு மையக் காரணியாக இருக்கும் பின்னணி பற்றி எதுவும் கூறவில்லை. அந்த மையக் காரணி, உலகமயப் பொருளாதாரச் சுரண்டல்தான். மன நல ஆலோசனைகளை நாடுவோரில் கணிசமானோர் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களாக இருப்பது தற்செயலானதல்ல. எவ்வளவு ஊதியம் பெற்றாலும் பாதுகாப்பற்ற வேலைதான் என்பதும், உலகமயமாக்கல் நடவடிக்கைகளால் மனிதர்கள் மேலும் மேலும் தனித்தீவுகளாக மாற்றப்படுகிறார்கள் என்பதும் மனச்சோர்வுக்கு முக்கியக் காரணங்களாகும். தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பாதுகாப்புகள் மறுக்கப்படுவதோடும் இதை இணைத்துக் காணலாம். சங்க உணர்வு, கூட்டுச் செயல்பாடு ஆகிய இரண்டும் மனச்சோர்வு நோய்க்கான அடிப்படையான, வலுவான மருந்துகளாகும். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR