SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, February 27, 2017

பத்திரப் பதிவு தடையை விலக்க நீதிமன்றம் மறுப்பு ********* சென்னை, பிப். 27 - புதிய வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், தமிழகஅரசு தனது கொள்கை முடிவை அறிவிக்காததால், பத்திரப் பதிவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது, கட்டுமானத் தொழிலாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொதுநல வழக்கில், கடந்த 2016 செப்டம்பர் 9 அன்று, விளை நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றக் கூடாது என சென்னைஉயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதிலிருந்து இப்போது வரை இப்பிரச்சனைக்கு தீர்வில்லை.விளைநிலங்களை வீட்டடிமனைகளாக மாற்றுவது தொடர்பாகவும், மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும் இரண்டு கோணங்களில் இவ் வழக்கை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.பலகட்ட விசாரணைக்குப் பின் இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதால், விளைநிலங்களின் பரப்புகுறைவதாக முறையிடப்பட்டது. மறுபுறம் அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் மட்டுமே வீட்டுமனைகளாக மாற்றப்படுவதாகவும், பத்திரப்பதிவுக்கான தடை நீடிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் தரப்புவழக்கறிஞர்கள் வாதிட்டனர். பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.விசாரணையின்போது, பத்திரப் பதிவு விவகாரத்தில், தனது கொள்கைமுடிவை விரைவில் தெரிவிப்பதாக ஏற்கெனவே தமிழக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டதை நினைவுபடுத் திய நீதிபதிகள், இன்னும் ஏன் அரசு தனது முடிவை அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு, இவ்விவகாரத்தில் மத்திய அரசுதான் சட்டத் திருத்தத்தை கொண்டு வரமுடியும்;அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த மட்டுமே முடியும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தற்போது நிலங்களை விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், பயன்பாட்டில் இல்லாத நிலங்கள் எனதமிழக அரசு வகைப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இதில் நடைமுறை ரீதியான காலதாமதம் ஏற்பட்டு வருவதால், முடிவை அறிவிக்க மேலும் கால அவகாசம் வேண் டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விசாரணையை மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை விளைநிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப் பதிவு செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அறிவித்தனர்.விளை நிலங்களை வரையறை செய்வதிலும், புதிய மனைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதிலும் தெளிவான கொள்கை நிலைபாட்டை எடுக்காமல், ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்துவருவதால், கட்டுமானப்பணிகள் முற்றிலுமாக முடங்கியுள் ளன. இத்தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் சுமார் 6 மாதகாலமாக வேலையின்றி தவிக் கின்றனர். 150 நாட்களுக்கும் மேலான தடையாணையால் பத்திரப் பதிவகங்கள்வெறுமனே திறந்து மூடப்படுகின் றன. ஒரு பத்திரமும் பதிவாகவில்லை. பதிவுத் தடையால் வீடு, மனைகளை வாங்க- விற்க முடியவில்லை. கட்டுமானங்கள் நின்றுவிட்டன. கட்டுமானங்கள் நின்றுவிட்டதால் கட்டுமானத் தொழிலாளர்களின் வீடுகளில் அடுப்புகள் அணைந்துவிட்டன. வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.இடம் விற்பவர்- வாங்குபவரில் தொடங்கி கொத்தனார், சித்தாள்,நிமிர்ந்தாள், கம்பி கட்டுவோர்,பலகையடிப்போர், கல்பதிப்பவர், சுண்ணமடிப்பவர், சுமைப் பணி தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/