SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, February 28, 2017

பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்த வழிகள்... கணினிக்கதிர் எம்.கண்ணன், என்.ராஜேந்திரன் **************************** இணையத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நம்முடைய இணையப் பயன்பாட்டிற்கு பின்புலத்தில் நாம் அறியாத பல கோடி டாலர் பெருமானமுள்ள வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் இணையக் கணக்குகள் ஒவ்வொன்றின் செயல்பாடும் கண்காணிக்கப்பட்டு வர்த்தக வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சிறு துளி பெரு வெள்ளமாய் மாறுவதுபோல, நம்முடைய தகவல்களும், நாம் தொடர்பில் வைத்திருக்கும் நபர்களின் தகவல்களும், அவர்கள் தொடர்பில் இருக்கும் நபர்களின் தகவல்கள் எனப் பல்கிப் பெருகும் மிகப்பெரிய சமூக வலைப்பின்னலின் எண்ணங்கள், ஆசைகள், கனவுகள் ஆகிய பலவும் தரவுகளாகப் பதியப்பட்டு, தேவைக்கேற்ப ஆய்வுகளாக தரம் பிரிக்கப்பட்டு நுகர்வோரின் தேவை அறியும் வர்த்தக செயல்பாடுகளுக்காக விற்கப்படுகின்றன.இத்தகைய செயல்பாடுகளைத்தான் முன்னணி இணையதளங்கள் பலவும் காலம்காலமாக செய்துவருகின்றன. ஆனால், அதே நேரத்தில், இத்தகவல்களைக் கொண்டு ஏமாற்றும் வழிகளைக் கையாள, ஏமாற்றுபவர்களுக்கு இந்தத் தொழில் நுட்பம் மிகுந்த அளவில் உதவி வருகிறது. இச்செயல்பாடு ஹேக்கிங், பிஷ்ஷிங் எனப் பல வடிவங்களிலும், பாஸ்வேர்ட் இன்றி பயன்படுத்தப்படும் திறந்தவெளி ஒய்ஃபி நெட்வொர்க்குகள் ((open wi-fi networks) மூலமாகவும்தான் பெரும்பாலான ஏமாற்று வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இணைய உளவு ஹேக்கிங் செயல்பாட்டை விட பிஷ்ஷிங்தான் எளிதில் பலரையும் சிக்க வைக்கக் கூடியதாக இருக்கிறது. இது நமக்குப் பழக்கப்பட்ட மின் அஞ்சல், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது இணைய இணைப்பு முகவரி போல் நம்மிடம் அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த இணைய லிங்க்கை கிளிக் செய்திட ஆவலைத் தூண்டச் செய்கிறது. கிளிக் செய்தால், இணைய தளம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். அந்தத் தளம் பார்ப்பதற்கு உண்மையான, நம்பிக்கை தரக் கூடிய நிறுவனத் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால், அது போலியானது மட்டுமல்லாமல், நம்முடைய தகவல்களைத் திரட்டும் பல்வேறு வழிமுறைகளையும் கொண்டிருக்கும். நாம் பயன்படுத்தும் வங்கிப் பெயர், கிளை விபரம், யூசர் நேம், பாஸ்வேர்ட் உள்ளிட்ட பல விபரங்களையும் கேட்கும். நம்பிப் பதிந்தால், அடுத்த நிமிடமே உங்கள் கணக்கில் எந்தப் பணமும் இருக்காது. வேறு சில இணைய இணைப்புகளில் மேற்கண்ட விபரங்களு­க்கு பதிலாக சிறு உளவு நிரல் மென்பொருள்கள் வழங்கப்படுகின்றன. இணைப்பை கிளிக் செய்த நொடியில் இம்மென்பொருள் செயல்பட்டு உங்கள் கணினியில் அல்லது பிரவுசரில் ஒட்டிக்கொண்டு உங்கள் இணையச் செயல்பாட்டைக் கண்காணித்துத் தகவல் அனுப்பத் தொடங்கிவிடும்.2015 ஆம் ஆண்டில், இந்தியாவில், இதுபோன்ற திருட்டு முயற்சிகள் 11,592 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது ஆண்டு தோறும் 20ரூ அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.எனவே, இந்த வகைத் திருடர்களிடமிருந்து தப்பிக்க, மின் அஞ்சலில் அல்லது சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் வரும் இணைய இணைப்புகளை உடனே கிளிக் செய்து பார்க்காமல், அந்த முகவரியை, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் டைப் செய்து பார்க்கவும். டெக்ஸ்ட் கோப்புகள் வந்தால் அவற்றில் கொடுக்கப்படும் எந்த இணைய முகவரி இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். வங்கி மற்றும் வர்த்தக இணையதளங்கள் அனைத்தும் ‘hவவயீள’ என்ற பாதுகாக்கப்பட்ட இணையத்திற்கான சான்றிதழைப் பெற்றிருக்கின்றன. எனவே, நீங்கள் தட்டச்சு செய்த இணைய முகவரிக்கு முன்பாக இந்த செக்யூரிட்டி சான்றிதழும் பூட்டுப் போன்ற ஐகானும் காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு பயன்படுத்துங்கள்.ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களை பதியும்போது நேரடியாக அந்நிறுவன இணையதளங்களிலிருந்து பதிவிறக்கி பயன்படுத்தவும். கட்டணமின்றி மென்பொருளைத் தரும் பிற மூன்றாம் நபர் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்குவது வைரஸ், ஹேக்கிங் செயல்பாடுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடிய போலி மென்பொருள்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை அப்டேட்டாக வைத்துக் கொள்வதும் அவசியமாகும்.பாப் அப் திரைச் செய்திகளில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்திட வேண்டாம்; அதே போல, அந்தக் கட்டங்களில், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பதிய வேண்டாம்.பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், எட்ஜ், ஓபேரா போன்ற அனைத்து பிரௌசர்களிலும் பிரைவேட் பிரௌசிங் அல்லது இன் காக்னிடோ (Private Browsing or Incognito)) என்ற வசதி உள்ளது, அதைப் பயன்படுத்துங்கள். கூகுள், பிங், யாகூ போன்ற தேடியந்திரங்களில் உங்கள் தேடல் தகவல்கள் சேமிக்கப்படுவதைத் தவிர்க்க, அவற்றிற்குப் பதிலாக டக்டக் கோ (னுரஉமனுரஉமழுடி) மற்றும் ஸ்டார்ட் பேஜ் ( (DuckDuckGo)) போன்ற இணையதளங்களைப் பயன்படுத்தலாம். திறந்த நிலை இணையப் பயன்பாடு இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் எனப் பல இடங்களிலும் இலவச ஒய்ஃபி வசதி வழங்கப்படுகிறது. இத்தகைய திறந்த நிலை இணையப் பயன்பாட்டின் மூலமாகவும் பல திருட்டுகள் நிகழ்த்தப்படுகின்றன.இத்தகைய இடங்களில் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட் போன்களின் தகவல்களை இதே நெர்வொர்க்கில் இணையும் மற்றொரு கணினி மூலமாக ஹேக் செய்யும் வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய இலவச நெட்வொர்க்குகளில் வங்கி மற்றும் வர்த்தக செயல்பாடுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது அவசியமாகும். உங்கள் லேப்டாப், டேப்ளட், ஸ்மார்ட் போன் சாதனங்களை அவற்றிற்கு உரிய பாதுகாப்பு செயல்பாடுகள் சரியாக இருந்தால் மட்டுமே இத்தகைய நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் டேட்டாக்களை என்கிரிப்ட் செய்து வைத்துக் கொள்வதும், பாஸ்வேர்டு, பேட்டன் லாக் , டாக்குமெண்ட் லாக் போன்ற பாதுகாப்புகளை உருவாக்கிக் கொள்வதும் முக்கியமானதாகும். http://epaper.theekkathir.org/