SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Saturday, February 25, 2017

பிழைக்கத் தெரியாதவர்கள் அல்ல; பிழை செய்யத் தெரியாதவர்கள் சென்னை கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பெருமிதம் ************************சென்னை, பிப். 25 - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிபிஎம் ஊழியர்கள் தி.சிவக்குமார், எம்.முகமது அலியார் ஆகியோரை பொய் வழக்கில் சிறையில் அடைத்ததை கண்டித்தும் வெள்ளியன்று (பிப். 24) கோடம் பாக்கம் ரயிலடியில் பொதுக் கூட் டம் நடைபெற்றது.சிபிஎம் ஆயிரம் விளக்கு பகுதிக் குழு சார்பில் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேசியதன் சுருக்கம் வருமாறு:ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த பாஜக அரசின் நடவடிக்கையால் குறுந்தொழில்கள் அழிந்துவிட்டன. சிறு தொழில்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 40 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட்டு வாங்குவதற்காக தாங்கள் பதுக்கி வைத்திருந்த கறுப்பு மற்றும் கள்ளப்பணத்தை கொண்டு 60 லட்சம் வரைக்கும்கொடுத்து சீட்டு வாங்கினார்கள்.மத்திய அரசின் நடவடிக்கை யால் தற்போது எம்பிபிஎஸ் சீட்டுஒரு கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை காசோலையாகப் பெறும் கல்லூரி நிர்வாகங்கள் அதற்கான வரியை கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை எடுத்துக்கொள்ள பதுக்கல் பேர் வழிகளுக்கும் பணக்காரர்களுக்கும் மோடி அரசு வழிவகை செய்து கொடுத்துள்ளது.இதுபற்றியெல்லாம் பேசினால் பிழைக்கத் தெரியாதவர்கள் என்கிறார்கள். பிழைக்கத் தெரியாதவர் கள் அல்ல; பிழை செய்யத் தெரியாதவர்கள் நாங்கள். எனவேதான் 3 மாநிலத்தில் ஆட்சி செய்தும், ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எங்கள் மேல் இல்லை.மகாபாரதத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று ஒன்று உண்டு. திருதராஷ்டிரன் பீமனை அழைத்து கட்டிப்பிடிக்க முயற்சிப் பான். சூழ்ச்ச்சியை உணர்ந்த கிருஷ்ணன் பீமனை விலக்கிவிட்டு இரும்புச் சிலையை திருதராஷ்டிரனிடம் தள்ளி விடுவான். திருதராஷ்டிரன் அணைத்ததும் அந்த இரும்புசிலை நொறுங்கி விழும். அதுபோல் ஜெயலலிதா சாவுக்கு வந்த மோடி, சசிகலா தலையில் கைவைத்தார் அதிமுக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்டிப் பிடித்தார். இப்போது தமிழக அரசுக்கு முழு ஆதரவு என்று கூறி ஓ.பன்னீர்செல்வத்தை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். அதிமுகவை உடைக்க 2 மத்திய அமைச்சர்கள் வேலை செய்வதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமியே ஒப்புக் கொண்டுள்ளார்.தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தண்ணீர்ப் பஞ்சத்தால் உற்பத்தி பாதிக்கப்படும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். குற்றச் செயல்கள் அதிகரிக்கும். வேலைதேடி நகரங்களை நோக்கி மக்கள் வருகிறார்கள். இடப் பெயர்வு அதிகமாகும். இதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு கட்சி எம்எல்ஏக்களை அடைத்து வைப்பதும், மற்றொரு கட்சி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதுவும்தான் நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளை திசைதிருப்புகின்றனர். மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே போராடி வருகிறது.ரேசன் கடைகளை வேகமாக ஒழிப்பதோடு, மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு மறைமுக வரி 20 ஆயிரம் கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் வறட்சிக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நிலையான அரசு அமைய வேண்டும், வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும் இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். திசைதிருப்பும் ஆளும் வர்க்கம் “சென்னை நகரில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு, 3.50 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கம், ரேசன் பொருட்களுக்கான மானியம் ரத்து, லட்சக்கணக்கானோருக்கு 6 மாத காலமாக சமையல் எரிவாயு மானியம் வழங்காதது, அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் குற்றம் சாட்டினார். “மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே மக் கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடுகிறது. எனவே, காவல்துறை மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்ளை தாக்குகிறது, பொய்வழக்குகளைப் போடுகிறது. இதனை எதிர்கொள்வோம் முன்னேறுவோம்” என்றும் பாக்கியம் கூறினார்.பொதுக்கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் இ.மூர்த்தி தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் அ.வெங் கட் வரவேற்றார். பகுதிச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ், பகுதிக் குழு உறுப்பினர்கள் வெ.இரவீந்திரபாரதி, தி.சிவக்குமார், வாலிபர் சங்கத்தலைவர் மு.ப.மணிகண்டன், மாதர் சங்கத் தலைவர் வி.செல்வி, ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர். பார்த்தசாரதி புரம் கிளைச் செயலாளர் நன்றி கூறினார். http://epaper.theekkathir.org/