This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, February 23, 2017
ஊழல் ராஜ்யங்கள் முடியட்டும்; மாற்று அரசியல் மலரட்டும் ஆர்.பத்ரி மக்களை நோக்கிய பயணத்தின் அறைகூவல் ‘அறம்’ இழக்கும் அரசியல்..? தமிழகத்தில் அரங்கேறும் காட்சிகளை பார்க்கும் போது அரசியல் தனது அறத்தை இழந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனை மேலிடுகிறது.. எளிமையாய் மக்களோடு மக்களாக பழகிய அரசியல் தலைவர்கள் கோலோச்சிய தமிழக அரசியல் களம் இன்றுசுயநல வாதிகளால், அதிகாரப் பசி கொண்டவர்களால் களங்கப்பட்டு வருகிறது.. ஊழலில் திளைப்பவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் என அனைவருமே கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்தமுகத்தோடு வலம் வருகிறார்கள்.. ஆளும் கட்சி இரண்டு பிரிவாக பிளவு பட்டு நின்று நாங்கள் தான் அம்மாவின் உண்மையான வாரிசு எனவாரிசு சான்றிதழை நீட்டுகிறார்கள்.. உச்சநீதிமன்றமோ தனது தீர்ப்பில் முதல் குற்றவாளியே ஜெயலலிதாதான் என ஓங்கி அடிக்கிறது.. கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் இன்று தனித்தனியாக கொள்ளை அடிக்கவே அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறார்கள்.. ஆளும் கட்சி, எதிர்கட்சி என அரை நூற்றாண்டாய் தமிழகத்தை மாறி மாறி ஆண்டவர்களால் நாம் பெற்றதை விட இழந்ததே அதிகம்.. பொறுத்தது போதும்.. ஊழல் ராஜ்யங்கள் முடியட்டும்.. மாற்று அரசியல் மலரட்டும் எனமொத்த தமிழகமும் உரத்து முழக்கமிட வேண்டிய நேரம் இது.. சர்வம் ‘ஊழல்’ மயம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததான ஒரு வழக்கின் தீர்ப்பு மட்டுமே தற்போது வந்திருக்கிறது.. ஆனால் முறையாக விசாரிக்கப்பட வேண்டிய, சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய ஊழல்கள் தான்எத்துனை.. எத்துனை.. ஒரு லட்சம் கோடிக்கும்அதிகமாக இழப்பை ஏற்படுத்திய கிரானைட்கொள்ளை, ஆண்டுக்கு 19,800 கோடி அளவில் முறைகேடாக கொள்ளையடிக்கப்படும் ஆற்று மணல், பல நூறு கோடி அளவில் திருடப்பட்ட தாது மணல், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அலைக்கற்றை ஊழல் வழக்கு,டி.பி. ரியாலிட்டி எதிர்கட்சி தொலைக்காட்சிக்கு வழங்கிய ரூ.200/- கோடி வழக்கு.. என சுற்றிலும் ஊழல் மயம் தான்.. பிரதான அகில இந்திய கட்சிகளின் நிலையோ இதை விட மோசம்.. பல மாநிலங்களில் இவர்கள் அடித்த கொள்ளை சந்தி சிரிக்கிறது.. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் கொள்ளை அடிப்பதில் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்பது தானே உண்மை.. ஆட்சி அதிகாரத்தை இவர்கள் கைப்பற்ற துடிப்பது மக்களுக்கு சேவை செய்ய அல்ல மேலும் மேலும் கொள்ளையடிக்கவே என்பதைத் தானே அவர்களின் கடந்த காலவரலாறு நமக்கு உணர்த்துகிறது.. தமிழகத்தில்ஊழல் பரிவர்த்தனைகளின் அளவு சுமார் 61.4சதவீதம் என ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.. சிங்கார சென்னையிலோ ஆண்டுக்கு ரூ.75கோடி அளவில் லஞ்சம் புழங்குவதாகவும், ஊழல் அதிகமான முதல் பத்து இந்திய நகரங்களில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் மற்றொரு விபரம் தெரிவிக்கிறது.. இது தான் இவர்களால் நமக்கு கிடைத்த பெருமை.(!) காயும் நிலம்.. கதறும் தமிழகம் 1876 ஆம் ஆண்டில் வந்த வறட்சியை போன்று 140 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தின் மழை அளவு 62 சதவீதம் குறைந்திருக்கிறது.. பெரும்பாலான நீர் நிலைகள் தூர்ந்தநிலையில் இருக்க,,, இருப்பு இருக்கும் நீர் நிலைகளிலோ நீர் அளவு 20 சதவீத அளவே உள்ளது.. தமிழகத்தின் காய்ந்த நிலங்கள் விவசாயிகளின் உயிரை அறுவடை செய்கின்றன.. 200 க்கும் மேல் செத்துப் போயிருக்கிறார்கள்.. ஒரு குடம் தண்ணீர் ரூ.10/- என வாங்கி தாகம் தீர்க்கிறது தமிழகம்.. நாங்கள் தான் எல்லா சாதனைகளுக்கும் பொறுப்பு என மார் தட்டுபவர்கள் இதற்கும் பொறுப்பேற்பார்களா.. அரை நூற்றாண்டு காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் இந்த காலங்களில் ஒரு அணைக்கட்டை கூட கட்டவில்லை.. சுமார் 9000 ஏரிகளை காசு வாங்கிக் கொண்டு ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி விட்டார்கள்.. ஆற்றுநீரை பாட்டிலில் அடைத்து விற்க பலருக்கும் லைசன்ஸ் வழங்கி விட்டார்கள்.. என்னே இவர்கள் சாதனை.. வேலையுமில்லை.. உணவுமில்லை.. கிராம ஊராட்சிகளில் நாளொன்றுக்கு குறைந்தது நூறு பேருக்கு ரூ.180/ - கூலியில் ஆண்டுக்கு 100 நாட்களுக்காவது வேலை தர வேண்டும் என மகாத்மா காந்தியின் பெயரிலான சட்டம் சொல்கிறது.. காந்தியை போலவே இந்த சட்டத்தையும் காலி செய்துவிட்டார்கள். பல ஊராட்சிகளில் வேலையுமில்லை.. வேலை செய்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் கூலிக்கான வரவும் இல்லை என்பதே மத்திய அரசின் சாதனை.. அனைத்திற்கும் ஆதார் ஆதார் எனக் கேட்டு மக்களின்ஆதாரங்களை காவு கொடுப்பதே மோடி ஜீ யின் சாதனை போலும்.. ரேசனில் அரிசிஇல்லை, சமையல் எரிவாயுவிற்கு மானியமில்லை, குடும்ப அட்டை இருந்தாலும் கூடபொது விநியோகத்தில் எதுவுமே இல்லை என்பதே மத்திய - மாநில அரசுகள் கூட்டானஅறிவிப்பு.. வாக்களித்த மக்களுக்கு வாய்க்கரிசி போடுவதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறார்கள்.. மாற்றுப் பாதையைத் தேர்வு செய்வோம்! இத்தகைய அவலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி தான் எப்போது.. ஒருவருக்கு மற்றொருவர் மாற்று என அரசியல் போட்டிஇருக்கும் வரை இந்நிலைமைகள் நீடிக்கும்.நபர்களோ, கட்சிகளோ அல்ல.. கொள்கைகளே மாற்றாக இருக்க முடியும்.. அவலங்களுக்கு காரணமான முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைகளை முன்வைத்து போராடுகிற இடதுசாரி அரசியலே உண்மையான மாற்று.. கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கும் அரசுகள் இருக்கும் வரை ஊழலும் லஞ்சமும் நீடிக்கும்.. எளியமக்களுக்கான அரசு அமையாமல் துன்பங்களுக்கு முடிவு கட்ட முடியாது.. இந்தியாவின் மூன்று மாநிலங்களில் எளிமையான, ஊழல் கறை படியாத 9 முதல்வர்களை அளித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமிதத்தோடு உங்களை அத்தகைய மாற்று பாதைக்கு அழைக்கிறது.. இடதுசாரி அரசியலை ஆதரிப்போம்.. மாற்று அரசியலை வென்றெடுப்போம்.. இடது புறப்பயணம் என்பது சாலைக்கு மட்டுமல்ல… சமூகத்திற்குமே… http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR