SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, February 23, 2017

விளையாட்டுப் பொம்மையாக மாறியதோ ரிசர்வ் வங்கி? புதுதில்லி, பிப். 23- பிப்ரவரி 6ந்தேதி இரவு 7.45 மணிதெற்கு தில்லியின் சத்தல்பூர் பகுதியில் ஒரு கால்சென்டரில் கஸ்டமர் கேர் அலுவலராக பணிபுரியும் ரோகித் என்பவர் அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். 8 ஆயிரம் ரூபாய் கேட்டு பொத்தான்களை அழுத்தி காத்து நின்றவரின் கைகளில் புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் நான்கு வந்து விழுந்தது. புத்தம் புதிதாக இருந்த அந்த ரூபாய் தாள்களை பார்த்து ரோகித் அதிர்ச்சியில் உறைந்தார். நான்கு தாள்களிலும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக சில்ரன் பேங்க் ஆப் இந்தியா என்று பொறித்திருந்தது. அது கள்ள நோட்டு என்று கூட சொல்ல முடியாது. குழந்தைகள் வைத்து விளையாடும் ஒரு பொம்மை தாள். ஏடிஎம் மையத்தில் அதிகாரப்பூர்வமாக வந்து விழுந்த இந்த தாள்களை வைத்துக் கொண்டு அவர் எதுவும் செய்ய முடியாது.காவல்நிலையத்திற்கு சென்றார். அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். முதலில், இப்படியெல்லாம் போலியான தாள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். பின்னர் நேரடியாக ஆய்வு செய்த போது அது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்கள். பிப்ரவரி 6ந்தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து பிப்ரவரி 22ந்தேதி தான் வெளி உலகிற்கு தெரியவந்தது.நவரச நாயகன் பிரதமர் மோடி இந்திய தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுகொண்டிருப்பதன் லட்சணம் இவ்வளவுதான்.உலகின் மிகப்பிரம்மாண்டமான மத்திய வங்கிகளில் ஒன்றான இந்திய ரிசர்வ் வங்கியை இதைவிட வேறு எந்தவிதத்திலும் கேவலப்படுத்த முடியாது. எப்படி இந்த தாள்கள் ஏடிஎம் இயந்திரத்திற்குள் சென்றன என்பது குறித்து காவல்துறையினரும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் கறுப்புப் பணமோ, கள்ளப் பணமோ குறைவதற்கு பதிலாக இருமடங்கு ஆகியிருக்கிறது என்ற உண்மை விபரங்களும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.இவையெல்லாம் ஒரு புறம் இருக்க கடந்த நவம்பர் 8ந்தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி இந்தியாவின் அனைத்து தளங்களிலும் மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏழைகள், நடுத்தர மக்கள்தான் புலம்புகிறார்கள் என்று பாஜக அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் விதவிதமாக மறுப்புரையும், பதிலுரையும் தந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் பஜாஜ் இந்தப் பிரச்சனையில் மோடியை விலாசித் தள்ளியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். கடந்த பிப்ரவரி 17ந்தேதி கார்ப்பரேட் நிறுவனங்களின் அமைப்புகளில் ஒன்றான நாஸ்காமின் ஆண்டுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ராஜீவ் பஜாஜ் ‘‘ஒரு பிரச்சனைக்கு சொல்லப்படுகிற தீர்வு மிகச் சரியானது என்றால் அது வெண்ணெய்யில் கத்தி இறங்குவது போல மிக எளிதாகச் செல்ல வேண்டும்; ஆனால் அப்படி நடக்கவில்லை என்றால் அதைவிட ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இல்லை என்று பொருள், பண மதிப்பு நீக்கத்தைப் போல....’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக நாடு முழுவதும் இருசக்கர வாகன துறையில் விற்பனை பெருமளவில் சரிந்திருக்கிறது என்ற எரிச்சலில்தான் ராஜீவ் பஜாஜ், பிரதமரின் முடிவை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார்.இந்திய கார்ப்பரேட்டுகளில் மோடியை விமர்சிக்கத் தயங்காத குழுமம் என்று பெயர் பெற்றது பஜாஜ் குழுமம். 2002ம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத்தில் நடந்த மிகக்கொடிய இனப்படுகொலையால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அப்போதைய பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கடுமையாக விமர்சித்தார். இதனால் எரிச்சலடைந்த மோடி, ஓராண்டு கழித்து 2003ல் இந்திய தொழிற்கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பேசும்போது குஜராத்திற்கு தொழில்துவங்க வாருங்கள்; சட்டம் - ஒழுங்கை சீர்செய்து காட்டுகிறேன் என்று சவால் விடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.பணமதிப்பு நீக்கத்தால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள அளவிட முடியாத நெருக்கடியே நாடு முழுவதும் இருசக்கர வாகன விற்பனையில் பிரதிபலித்துள்ளது என்கிறார் ராஜீவ் பஜாஜ். கடந்த டிசம்பரில் மட்டும் 22.04 சதவீதத்திற்கு இருசக்கர வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.இதைப்பற்றி கூறும்போது ‘‘இந்தியாவில் தயாரிப்போம்(ஆயனந in ஐனேயை) என்றார்கள்; ஆனால் இன்றைக்கு நிலைமை ‘‘பைத்தியக்கார இந்தியாவாக’’ (ஆயன in ஐனேயை) இருக்கிறது என்று ராஜீவ் பஜாஜ் கடுமையாக சாடியிருக்கிறார். தொழில்துறையின் லட்சணம் இதுவென்றால் கிராமப்புற விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை கடந்த மூன்று மாதத்தில் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. வறட்சி ஆண்டுகளைவிட 2016-17ம் ஆண்டில் நெல், கோதுமை, பருப்பு வகைகளின் உற்பத்தி 8 சதவீதம் அளவிற்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு கூறினாலும், கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களின் உண்மை வருமானம் எந்தவிதத்திலும் உயரவில்லை என்று ‘தி மின்ட்’ பத்திரிகை கூறுகிறது. கிராமப்புற மக்களின் கைகளில் பணம் புழங்குகிறது என்பதையும் அவர்களிடம் வாங்கும் சக்தி ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவர்கள் பெறுகிற கூலியின் மதிப்பை வைத்துதான் கணக்கிட முடியும்; அப்படி பார்க்கும்போது உண்மைக் கூலியின் மதிப்பு முன்பு இருந்ததைவிட வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதையே நிலைமை என மின்ட் பத்திரிகை விவரித்துள்ளது. அதுவும் கூட 2016-17ம் ஆண்டில் கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.53 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்ட போதிலும், நிலைமை இதுதான்; கிராமப்புற வேலை உறுதித்திட்டம் இல்லாமல் இருந்திருந்தால் பண மதிப்பு நீக்கத்திற்கு பிறகான இந்த மூன்று மாதங்களில் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் மரணத்தை தழுவியிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. 2016 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் அல்லாத இதர தொழிலாளர்களின் தினக்கூலியில் 6 சதவீதம் அளவிற்கு உயர்வு ஏற்பட்டுள்ளதாக அரசின் கணக்கீடுகள் கூறுகின்றன. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக வறட்சி ஆண்டு என ஒப்புக்கொள்ளப்பட்ட 2015 டிசம்பருடன் ஒப்பிடும்போது குறைவே ஆகும்; அது மட்டுமல்ல, 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் குறைவு; 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவீதம் குறைவு என மின்ட் ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.தொழிலும் விவசாயமும் பணமதிப்பு நீக்கத்தால் இப்படி சீரழிவின் பிடியில் சிக்கியிருக்க, அதன்தொடர் விளைவாக விலைவாசி உயர்வு மிகக்கடுமையானதாக மாறி வருகிறது. தலைநகர் தில்லியில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது இன்னும் தீவிரமாகி நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது.வங்கிகளிலும் ஏடிஎம் மையங்களிலும் தற்போது நிலைமையை சீராக்கிவிட்டதாக ரிசர்வ் வங்கியின் நிர்வாகிகளும் மத்திய அரசின் பொருளாதார துறை செயலாளர்களும் இடைவிடாமல் பேட்டி அளித்து வருகிறார்கள். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு வீழ்ச்சியின் தீவிரம் புரியும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தது இப்போதுதான் நிரூபணமாகத் தொடங்கியிருக்கிறது. வீழ்ச்சியின் பிடியில் இந்தியா வேகமாக பயணிக்கத் துவங்கியிருக்கிறது. http://epaper.theekkathir.org/