SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, February 24, 2017

பாஜக அரசை பணிய வைத்த விவசாயிகளின் போராட்டம் ************************** ஜெய்ப்பூர், பிப். 24- ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு அதிகாரத்தில் உள்ளது. வசுந்தரா ராஜே அம்மாநிலத்தின் முதல்வராக உள்ளார். அம்மாநில அரசு கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மிகக் கடுமையான முறையில் மின் கட்டணங்களை உயர்த்தி உத்தரவிட்டது. இந்த கட்டண உணர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பும் போராட்டங்களும் வெடித்தன. இப்போராட்டங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். நாளுக்கு நாள் இப்போராட்டம் தீவிரமடைந்ததையொட்டி வேறு வழியில்லாமல் வசுந்தராராஜே தலைமையிலான பாஜக அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இப்போராட்டம் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் உறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.ராஜஸ்தான் மாநில அரசு கடந்த 2016 செப்டம்பரில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவித்தது. குறிப்பாக விவசாயிகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.90 பைசாவிலிருந்து ரூ.1.15 பைசாவாகவும், உயர் மின்னழுத்தத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 85 பைசாவிலிருந்து 120 பைசாவாக உயர்த்தப்பட்டது. சாதாரணமாக அனைவருக்குமான வீட்டு பயன்பட்டிற்கான மின்சாரக் கட்டணம் 11.71 சதவீதம் உயர்த்தப்பட்டது. 50 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள் போன்ற அமைப்புகளுக்கு 12.1சதவீதம் கூடுதலாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.இந்த மின்கட்டண உயர்வு அம்மாநில மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.கட்டணத்தை கட்ட மறுத்த விவசாயிகள்மின் கட்டண உயர்வுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ராஜஸ்தான் மாநிலக்குழு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. குறிப்பாக மாநிலம் முழுவதும் விவசாயிகள் மின் கட்டணங்களை கட்ட வேண்டாம் என அழைப்பு விடுத்தது. விவசாயிகள் இயக்கத்தின் அழைப்பை ஏற்று மாநிலம் முழுவதும் விவசாயிகள் மின் கட்டணத்தை செலுத்தவில்லை. ஏற்கெனவே விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் முழுவதும் ஆழ்குழாய் மின்சார பம்புசெட் ஒன்றே விவசாயத்தை காத்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. சாதாரணமாக 400 அடி 500 அடி ஆழ்குழாய் அமைத்துதான் விவசாயம் செய்து வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே விவசாயத்தை மேற்கொண்டு வரும் நிலையில் அரசின் இந்த மின் கட்டண உயர்வு மேலும் விவசாய நெருக்கடிக்கு வழிவகுக்கும். எனவே அகில இந்திய விவசாயிகள் சங்கம் கட்டண உயர்வை திரும்பப் பெறும் வரை போராடுவதற்கு மாநில விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பின் பெயரில் விவசாயிகள் மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மறுத்தனர். மாநிலம் முழுவதும் தாலுகா அளவிலான முதற்கட்ட போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.முதற்கட்டப் போராட்டம் கடந்த ஜனவரி 16இல் துவங்கியது. அடுத்த கட்ட போராட்டத்தை பிப்ரவரி 2இல் மாவட்ட தலைநகரில் நடத்திட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ராஜஸ்தான் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேமாராம் அறிவித்தார். இந்த போராட்ட அறிவிப்பிற்கு மாநிலம் முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிய அளவில் ஆதரவளித்தனர். வேறு வழியில்லாமல் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாயிகள் பிரிவும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் விவசாயிகள் பிரிவு இயக்கமான அகில பாரதிய கிசான் சபாவும் இப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.எழுச்சிமிக்க போராட்டம்உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 2இல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் லட்சக்கணக்கில் விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டதால் அரசு நிர்வாகம் அதிர்ந்து போனது.முடங்கிப் போன செக்காவட்டி மண்டலம்மின்கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய செழிப்புமிக்க பகுதிகளை உள்ளடக்கிய செக்காவட்டி மண்டலத்தில் அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் போராட்டமாக மாறியது. குறிப்பாக பிக்கானீர் மாவட்டத்தில் 30,000 பேரும், நகோத் மாவட்டத்தில் 25,000 பேரும் ஜின்ஜினு மாவட்டத்தில் 30,000 பேரும், சுரு மாவட்டத்தில் 40,000பேரும் சிகார் மாவட்டத்தில் ஒரு லட்சம் பேரும் திரண்டனர். மற்ற மாவட்டங்களில் 10,000 முதல் 20,000 பேர் வரையிலும் திரண்டனர். மாநிலம் முழுவதும் இப்போராட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டதால் பாஜக அரசு எதிர்ப்பினை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. விவசாயிகள் மற்றும் வெகுமக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தை வழக்கமான அரசு எந்திர அடக்குமுறையால் எதிர்கொள்ள முடியவில்லை.கட்டண உயர்வை திரும்பப்பெற்றதுவிவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எழுச்சிமிக்க இந்த போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத வசுந்தரா ராஜே அரசாங்கம் உயர்த்தப்பட்ட விவசாயிகளுக்கான மின் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மாநில அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இந்த அரசின் இத்தகைய அறிவிப்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ‘‘உறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி’’ என்று விவசாயிகள் இயக்கத்தின் அகில இந்திய தலைவர் அம்ராராம் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் முன் வைத்த இதர கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.மார்ச் 2 லட்சக்கணக்கான விவசாயிகளின் சட்டசபை முற்றுகைவிவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி 150 நாட்களாக நீட்டிக்கப்பட வேண்டும்.ராஜஸ்தான் மாநிலத்தில் வேலையின்மை மிகப்பெரும் சமூகப் பிரச்சனையாக மாறியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் ஆண்டுக்கு 15லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக கூறியவர்கள் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்புகளை தரவில்லை. பல்வேறு அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், அவுட்சோர்சிங் முறையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் பணிகளை மாற்றி, அரசின் பல்வேறு கேந்திரமான துறைகளையும் அத்துறைகளில் அரசு பணியிடங்களையும் அழித்துவிட்டது. பாஜக மாநில அரசு என்றும் விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளனர். 3 முனைகளில் பிரச்சாரப் பயணங்கள் இன்று துவக்கம்இந்நிலையில் விவசாயிகள் அல்லாத மற்ற பயனாளிகளுக்கும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டுமென விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள், இளைஞர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் பிப்ரவரி 25 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரச்சார பயணங்கள் மாநிலத்தின் மூன்று முனைகளிலிருந்து துவங்குகிறது.நாகோரில் இருந்தாலும் விவசாய இயக்கத்தின் தலைவர் அம்ராராம் தலைமையில் ஜின்ஜினு மாவட்டத்திலிருந்து விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஜெகன் ஜோதிரி, தலைமையிலும் சிகர் நகரிலிருந்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேமாராம் தலைமையிலும் பிரச்சார பயணங்கள் துவங்குகின்றன.சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் மார்ச் 2 அன்று 2லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி மற்றும் முற்றுகை நடத்திடவும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ராஜஸ்தான் மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.அடுத்தாண்டு ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. -தமிழில்: ஜோ.ராஜ்மோகன் http://epaper.theekkathir.org/