SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, February 23, 2017

சமவேலைக்கு சமஊதியம் பெற அணி திரள்வோம் வி.குமார் இன்றைய தினம் தொழிலாளி வர்க்கத்தின்முகத்தோற்றமே மாறிக் கொண்டிருக்கிறது. நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கைவெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. நிரந்தரமில்லாத இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தனியார் துறையில் மட்டுமல்ல முன்னுதாரணமாக திகழ வேண்டியஅரசுத் துறையிலேயே நிலவுகிறது. குறிப்பாககடந்த 25 ஆண்டுகளில் நவீன தாராளமய கொள்கை அமலாக்கத்திற்குப் பிறகு இதுதீவிரமடைந்துள்ளது. இந்நிகழ்ச்சிப் போக்குஎதைக் காட்டுகிறது? முதலாளித்துவ நெருக்கடிநிலைமையில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கவே இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது. எப்படியும் மனித உழைப்பு சக்திதேவைப்படுகிறது. அப்போதெல்லாம் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தினக்கூலித்தொழிலாளர்களாகவும், காண்ட்ராக்ட் தொழிலாளர்களாகவும் அமர்த்தப்படுவது பரவலாகி விட்டது. உரிமையற்ற ஊழியர்களாகவும், உயிரற்ற நடைபிணங்களாகவும் லட்சக்கணக்கில் இத்தகைய தொழிலாளர்கள் உள்ளனர்.இன்றைய காலக்கட்டத்தில் நிரந்தரமற்ற - உரிமைகள் ஏதும் இல்லாத இளம் தினக்கூலித் தொழிலாளர்கள் பிரச்சனையில் அக்கறைகாட்டி செயல்படுவதும், அவர்களை அணிதிரட்டுவதும் நமது முக்கிய கடமையென சிஐடியு தொடர்ந்து வலியுறுத்துகிறது.இன்றைய தினம் முதலாளித்துவம் உரிமையற்றவர்களாக நிற்கும் தினக்கூலிகளை அப்படியே வைத்திருப்பது மட்டுமல்ல, அவர்களை நிரந்தர ஊழியர்களுக்கு எதிராக தூண்டும்நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது. இதே பாணியில் தான் ஆட்சியில் இருக்கும் முதலாளித்துவகட்சி ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய காலத்தில் வேலையற்ற இளைஞர்களை தூண்டியதை தமிழகம் கண்டது.எனவே வேலையில்லாதிருக்கும் இளைஞர்கள், உரிமையற்ற தினக்கூலித் தொழிலாளர்கள் ஆகியோரையும் நம்மில் ஒருவராய் நினைத்து நிரந்தர தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை நடத்தவில்லையானால், அப்படிப்பட்ட அமைப்பே நாளாவட்டத்தில் இல்லாமல் போய்விடும் என்று சிஐடியு அறிவுறுத்துகிறது. இந்த அடிப்படையில் தான் ஒரு இயக்கப் பிடிப்போடு, உரிமையற்ற இளம் தொழிலாளர்களின் உற்ற நண்பனாக கடந்த பலஆண்டுகளாக சிஐடியு செயல்பட்டு வருகிறது.இந்தப் பின்னணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை திரட்டி அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து களத்திலும் வழக்கு மன்றத்திலும் போராடி வருகிறது. அரசுத்துறை தமிழக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கும் உயரிய நோக்கோடு1971ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டது. இதன் சீரிய செயல்பாடுகளின் காரணமாகபாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களில் இந்தியாவிலேயே முதன்மையான நிறுவனமாக மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. தற்போது 520க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களை பராமரித்து இதன் மூலம் கோடிக்கணக்கான பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறது.மக்கள் தொகை அதிகரிப்பு, புதிய,புதியதொழிற்சாலைகள், அலுவலக விரிவாக்கம், மருத்துவமனைகள், கல்லூரி நிறுவனங்கள் என நாள்தோறும் குடிநீர் தேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய திட்டங்களை பராமரிக்க நிரந்தர பணியாளர்களை பணி நியமனம்செய்யாமல் ஒப்பந்ததாரர் மூலம் பராமரிப்புபணியாளர்களை நியமனம் செய்து வருகிறது. அவ்வாறு நியமனம் செய்கின்ற போது இவர்களுக்கு மிக சொற்ப ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இவ்வூழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.கடந்த காலங்களில் என்எம்ஆர், தொகுப்பூதியம்,மதிப்பூதியம் என்ற பெயரில் கடுமையான உழைப்பு சுரண்டல் நடைபெற்று வந்ததைசிஐடியு கடுமையாக எதிர்த்தது, அதோடு எண்ணற்ற போராட்டங்களை மக்கள் மன்றத்திலும், வழக்கு மன்றத்திலும் நடத்தி 1200க்கும்மேற்பட்ட தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி குடிநீர் வடிகால் வாரியத்தில் புதிய சாதனையை படைத்தது. வாரியத்தை நிர்மூலமாக்கவும், குடிநீரை வியாபார பொருளாக மாற்றவும் வாரியமும்-தமிழக அரசும் திட்டமிட்டு செயல்படுகிறது. இதன் விளைவாக தான் நிரந்தரப்பணிகளை படிப்படியாக ஒப்பந்ததாரரிடம் விடும் நிலை 2007ம் ஆண்டிலிருந்தே ஒப்பந்ததாரர் மூலம் வாரிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதேபோன்று மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கிராமப்புற மக்கள் பயன்படுத்திவரும் குடிநீரை வருடத்திற்கு 2 முறை பாசோதிக்க வேண்டும் என்ற அறிவுரையை ஏற்று மாநில அரசு கொள்கை முடிவெடுத்து குடிநீர்வடிகால் வாரியம் மூலமாக கடந்த 5ஆண்டுகளாக மாவட்டந்தோறும் நீர்பரிசோதனை கூடங்களை அமைத்து செயல்படுத்தியது. இப்பரிசோதனை கூடங்களில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒப்பந்தமுறையில் பணியில் அமர்த்தியது. நிரந்தரத்தன்மையோடு செயல்பட வேண்டிய இப்பணிகளில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தியது சட்ட விரோதமானது ஆகும். 2015ம் ஆண்டு திடீரென இப்பணியாளர்களை வாய்மொழி உத்தரவின் மூலம் பணிநீக்கம் செய்து பட்டப் படிப்பு படித்த இஞைர்களை வீதியில் நிறுத்தியுள்ளது.ஒரு தொழிலாளி 480 நாட்கள் வேலைசெய்திருந்தால் அவர்பணியை உறுதிப்படுத்தவேண்டும் என்று ஒரு சட்டமே (உடிகேசைஅயவiடிn ஹஉவ) இருக்கிறது. ஆண்டில் 240 நாட்கள் வேலை செய்திருந்தால் அந்த தொழிலாளி நிரந்தரம் செய்யப்படுவார் என்று தமிழக அரசும்-போக்குவரத்து துறையும்-தொழிலாளர்களும் ஒப்பந்தமே செய்துள்ளார்கள் இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டியுள்ளது வாரியம்.மக்களின் அத்தியாவசிய துறைகளை நாசமாக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அரசின் சூழ்ச்சிகளை முறியடித்த வரலாறு சிஐடியு விற்கு உண்டு.நவீன தாராளமய, தனியார் மய, உலகமய கொள்கைகளுக்கு எதிராக போராடிவரும் சிஐடியு இதர மத்திய தொழிற்சங்கங்களோடு இணைந்து 17 முறை நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொண்டது. கடந்த 2016-ல்செப்டம்பர் -2 வேலைநிறுத்தத்தில் 18 கோடிக்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றதன் விளைவாக போனஸ் சட்டத்தின் திருத்தம்அதோடு மத்திய அரசின் கீழ் நடக்கும்தொழில்களில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு தினம் ஒன்றுக்கு ரூ.350 (26 நாட்களுக்குரூ.9100) குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்படுவதாக செப் -2 வேலைநிறுத்தத்தின்போது பெரும் விளம்பரம் அரசால் மேற்கொள்ளப்பட்டது. மத்திய தொழிற்சங்கங்கள் ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் கோருகின்றன. சமவேலைக்கு சமஊதியம் இந்நிலையில் கடந்த 2016 அக்டோபர் 26ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் சமவேலைக்கு சமஊதியம் பற்றி முக்கியமான தீர்ப்பை தந்துள்ளது. தற்காலிகத் தொழிலாளர்கள், தினகூலிகள், காஷூவல் தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் எந்த வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்களோ அந்த வேலையை செய்து கொண்டிருக்கும் நிரந்தர தொழிலாளிக்குரிய குறைந்தபட்ச ஊதியத்தை அகவிலைப்படியோடு பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள் என கூறியுள்ளது.எனவே சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட்பாடு இந்த தற்காலிகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதில்எந்த சந்தேகமும் இல்லை. இதே பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு பணியாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்துக்கு நிகரானசம்பளத்தை பெற அவர்களுக்கு முழு உரிமைஉள்ளது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காலித் கமிஷன் மின்வாரியத்தில் குழிதோண்டுவது முதல் கேபிள் போடுவது, பழுதுபார்ப்பது வரைஅனைத்தும் நிரந்தரப்பணிகள். இவை ஒரேசமயத்துடன் முடிவடைவது அல்ல தொடரக்கூடியவை. நிரந்தரத் தன்மையுள்ள பணிகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை அமர்த்தக்கூடாது அமர்த்தினாலும் நிரந்தரமாக்க வேண்டும் என்பது சட்டம்.மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) 1990ல் இந்த அநீதியை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மின்வாரியத்துக்கே உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர்களை அத்துக்கூலிகளாக-ஒப்பந்த தொழிலாளராக நடத்துவது தவறு எனஓங்கி வாதிட்டது. இதன் விளைவு முன்னாள் நீதிபதி காலித் தலைமையில் உச்சநீதிமன்றம் ஒரு கமிஷனை அமைத்தது.காலித் கமிஷன் விரிவான விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் 1992க்குள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டங்கள் வரலாற்றில் மறக்க முடியாதவை.இந்த பின்னணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் நலன் காக்கவும், வேலை மறுக்கப்பட்டு வீதியில் நிற்கும் பரிசோதனைக் கூட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை பெற்றுத்தரவும் பொள்ளாச்சியில் பிப்ரவரி 25 அன்று நடைபெறும் ஒப்பந்த தொழிலாளரின் 3வது மாநில மாநாடு வியூகம் வகுத்து, களம் அமைத்து போராட்டத்திற்கு நாள் குறிக்க திட்டமிட்டுள்ளது. கட்டுரையாளர்: சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் http://epaper.theekkathir.org/