SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, February 24, 2017

தமிழகம் தலை நிமிர இடதுசாரிப் பாதையில் நடைபோடட்டும் சோழவந்தான் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு ********************* சோழவந்தான். பிப்.24- தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கஇடதுசாரி பாதையில் நடைபோடட்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் கலந்துகொண்டு டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:-மோடி அரசின் 1000 ரூபாய் 500 ரூபாய் பண மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கையால் 86 சதவீதம் அளவிற்கு பணப்புழக்கம் அற்றுப் போய்விட்டது. இதன் தாக்கம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.பண மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கைக்குப் பின்னர் வாடிப்பட்டி, திருவேடகம், செக்கானுரணி, கருமாத்தூர், விக்கிரமங்கலம் பகுதிகளில் நடைபெற்றுவரும் சந்தைகளில் பெருமளவிற்கு வர்த்தகம் நடைபெறவில்லை. குறிப்பாக வாடிப்பட்டியில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் கூட வியாபாரம் இல்லாமல் போய்விட்டது. ஆனால்மோடியோ கள்ளப் பணத்தை, கறுப்புப்பணத்தை ஒழிக்க, லஞ்சத்தை ஒழிக்க, பயங்கரவாதிகளுக்கு பணம் செல்வதை தடுக்கபண மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறுகிறார்.மோடியின் நடவடிக்கை மூலம் சோழவந்தான் பகுதியில் கள்ளப்பணம், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யாராவது பிடிபட்டார்களா? இப்பகுதியில கள்ளப்பணம், கறுப்புப் பணம் புழக்கத்தில் இருக்கிறதா என்றால் இல்லை. கள்ளப்பண பேர்வழிகளை பிடிப்பதற்குப் பதில் ஒட்டுமொத்த நாட்டையே வஞ்சிப்பது எப்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.பணமதிப்பிழக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் உரம்வாங்க முடியாத நிலை ஏற்பட் டது. சிறு வர்த்தகங்கள் நடைபெறவில்லை. முறைசாரா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைப்பற்றியெல்லாம் மோடி அரசு கவலைப்படவில்லை.தமிழகம் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை இப்போதுகண்டுள்ளது. காவிரி பாசனப்பகுதிகள் உள்ளிட்டு தமிழகத் தின் எந்தப் பகுதியிலும் விவசாயம் நடைபெறவில்லை. குடிதண்ணீர் குடம் 5 ரூபாய் முதல்10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விவசாயிகள் தற்கொலைஎன்பது 200-ஐ தாண்டிவிட்டது.திமுகவும் அதிமுகவும் மக்கள்பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுகிறது. தமிழகத்தின் தரம் இவர்களால் தாழ்ந்து வருகிறது. எல்லா வளமும் இருந்தும் தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. கிராமப்புற வேலையின்மையும் நகர்ப்புற வேலையின்மையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். பி.இ., படித்த ஒரு இளைஞர்கார் கழுவும் வேலை பார்க்கிறார் என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் தலைகுனிய வேண் டாமா?1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டுவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தகாலத்தில் அவர் பெற்ற மாதச் சம்பளம் ஒரு ரூபாய் மட்டுமே. ஆனால், அவர் இந்தக் காலத்தில்தான் 66 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்தார் என்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இணைந்து கூட்டுச்சதி செய்தனர் என்றும் உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.20 ஆண்டுகளுக்கு பின்னர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட் டுள்ளார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறை தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/