This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Wednesday, February 22, 2017
அனுமதி இல்லாத ஆதிசிவனை திறக்க வராதீர் பிரதமரே! ஆன்மீகத்தின் பெயரால் சட்டவிரோதம்: இடதுசாரிகள், நீதிபதி குற்றச்சாட்டு *****************சென்னை, பிப்.22- ஆன்மீகத்தின் பெயரால் வனப் பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதையும் பழங்குடியினர் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டதையும் விலங்குகளின் வாழ்நிலை சீர்குலைக்கப்பட்டதையும் அங்கீகரிக்கலாமா என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல் வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடதுசாரித் தலைவர்களும், நீதிபதி அரிபரந்தாமனும் கேள்வி எழுப்பியுள்ளனர். கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமரும் முதல் வரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 13 லட்சம் சதுர அடி பரப்பில் ஈஷாயோகா மையம் சார்பில் அதன் தலைவர் ஜக்கிவாசுதேவ் பல்வேறு கட்டடங்களை சட்டவிரோதமாகக் கட்டிவருவது பற்றிக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது தெரிந்ததே. அந்தக் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்ற அரசாணையையும் அவர் மதிக்கவில்லை என்ற நிலையில், பிப்.24 அன்று இங்கு மகாசிவராத்திரி விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.இதுதொடர்பாக புதனன்று (பிப்.22) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிஅரிபரந்தாமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் “ஒரு பகுதிமக்களின் ஆன்மிக விழாவை நாங்கள் எதிர்க்கவில்லை. இயற்கை வளம் பாதிக்கப்படக் கூடாது என்பதே நோக்கம். மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருக்கிறபோது, இந்த விழாவில் பிரதமரும் முதலமைச்சரும் பங்கேற்பது, விதி மீறல்களை அங்கீகரிப்பதாகிவிடும். எதிர்காலத்தில் வேறு அமைப்புகளும் இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபடத் தூண்டுவதாகிவிடும்,” என்று கூறினர். வழக்குகள் உள்ள நபரின் விழா 2012 நவம்பர் 5ல் நகரம் மற்றும் ஊர் திட்டத் துறை துணை இயக்குநரால் பிறப்பிக்கப்பட்ட, பணிகளை நிறுத்திவைக்கும் ஆணை, கட்டுமானங்களைப் பூட்டி ‘சீல்’ வைத்து இடிப்பதற்காக என அதே ஆண்டு டிசம்பர் 24 அன்றுபிறப்பிக்கப்பட்ட ஆணை, இந்தக் கட்டுமானங்களால் வனப்பகுதியில் மனிதர் - விலங்குகள் முரண்பாடு ஏற்படும் அபாயம்இருப்பது பற்றி வனத்துறையின் கோவை மாவட்ட அலுவலர் அக்டோபர் 12 அன்று வனத்துறை தலைவருக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றின் நகல்களை செய்தியாளர்களுக்குக் காட்டினார் நீதிபதி அரிபரந்தாமன். “இதுபோன்ற வழக்குகள் உள்ள இடத்திற்கு பிரதமர் வருவது சரியல்ல. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது,” என்றார் அவர். மனைவியைக் கொன்ற ஜக்கி? ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜி என்றவிஜயலட்சுமியைக் கொலை செய்ததாக பெங்களூரு காவல்துறை பதிவு செய்த வழக்கு கோவை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டாரா என்பதும் தெரியவரவில்லை, விசாரணை என்ன ஆனதுஎன்பதும் தெரியவில்லை. அது தொடர்பானரிட் மனுவுக்கு பதிலளித்து ஈஷா மையம் தாக் கல் செய்த மனுவில் அந்தக் குற்றச்சாட்டை அவர்மறுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அரிபரந்தாமன், “இப்படிப்பட்ட வழக்குகள் உள்ளஒருவரது விழாவுக்கு பிரதமர் வருவது முறையல்ல,” என்றார்.இது போல் பல சாமியார்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால் பிரதமரே விழாவுக்கு வருவது சட்டத்திற்குப் புறம்பான செயல்களை அரசாங்கமே ஆதரிப்பதாகிவிடும். தமிழக அரசுதான் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது என்பதால் முதலமைச்சர் பங்கேற்பதும் சரியல்ல என்றும் அவர் விமர்சித்தார். தொடரும் சட்டமீறல்கள் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “பல ஆண்டுகளாகவே ஈஷா மையம் இப்படிப்பட்ட சட்ட மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உரிய சட்டப்பூர்வ அமைப்புகளின் அனுமதி பெறாமலே கட்டுமானங்கள் நடந்துள் ளன,” என்றார்.“வனப்பகுதியில் 44 ஏக்கர் நிலம் பினாமியாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பல அமைப்புகள் அதை எதிர்த்து வந்துள்ளன. ஆனால் அந்த இடத்தில்தான் தற்போது விழாவுக்கான வரவேற்பு வளைவு கட்டப்பட் டுள்ளது,” என்றும் தெரிவித்தார்.இது போன்ற கட்டுமானங்களுக்கு மாவட்டஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்றவிதியே, சுற்றுச் சூழல் பாதுகாப்பு நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான். ஈஷா மையத்தின் அத்துமீறலால் இப்பகுதியின் நீராதாரம், வாழ்வாதாரம் ஆகியவையும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்றும் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். ஆக்கிரமிப்புகள் ஊக்குவிக்கப்படும் “மதத்தின் பெயரால் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு நடைபெற்றிருக்கிறபோது நிச்சயமாக அதில் பிரதமரும் முதலமைச்சரும் கலந்துகொள்ளக்கூடாது,” என்றார் நல்லகண்ணு.தமிழகத்திலே சுவையான, நல்ல குடிநீர் சிறுவாணி நீர்தான். அதைச் சுற்றிதான் ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது. வன விலங்குகளுக்குத் தீங்கு ஏற்படும். யானைத் தடம் மறிக்கப்படுவது பிரச்சனைகளை ஏற்படுத்தும். காருண்யா, சின்மயா உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளும் நடந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளால் நீர்ப்பிடிப்புப் பகுதி மொத்தமும் பாழாகிவிடும். மற்ற அமைப்புகளும் ஆக்கிரமிப்புகளில் ஈடுபட முயல்வார்கள் என்று எச்சரித் தார் அவர்.‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் சுந்தரராஜ், வழக்குரைஞர் சுந்தரராசன் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் சட்டவிரோதத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் பிரதமர் நடந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும், ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வலியுறுத்தியும் நாளை (பிப்.24) மாலை 5 மணிக்கு கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இயக்கங்களும், தலித் இயக்கங்களும் இணைந்து மாபெரும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
Labels:
THEEKATHIR