SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Showing posts with label CUBA. Show all posts
Showing posts with label CUBA. Show all posts

Thursday, March 9, 2017

RAUL CASTRO: நாங்கள் மெக்சிகோ அல்ல! டொனால்டு டிரம்புக்கு ரால் காஸ்ட்ரோ எச்சரிக்கை காரகஸ், மார்ச் 9- லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆல்பா’ உச்சி மாநாடு வெனிசுலாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடந்த மார்ச் 5 அன்று வெனிசுலா தலைநகர் காரகஸில் நடைபெற்றது. இந்த ஆல்பா கூட்டமைப்பில் லத்தீன் அமெரிக்க நாடுகள் பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன.ஆல்பா உச்சி மாநாட்டில் பேசிய கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பகுத்தறிவற்ற வெளியுறவு கொள்கைக்கு எதிராக கடும் விமர்சனங்களை தெரிவித்தார்.டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பின், பிடல் காஸ்ட்ரோவின் மரணத்தின்போது மிக மோசமான, இழிவான கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியாக பொறுப்பேற்றதற்கு பின்பு அவரது முதல் நடவடிக்கையாக அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பெரும் மதில் சுவரை எழுப்பிட உத்தரவிட்டார். மெக்சிகோ மீதான இத்தாக்குதலையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட செயல் என்று ரால் காஸ்ட்ரோ சாடினார். அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பனிப்போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சின்னஞ்சிறு கியூப நாட்டை தனது ஆளுமைக்குள் வைத்து கொள்வதற்கு வரலாற்று நெடுகிலும் பல்வேறு சதிகளையும் தாக்குதல்களையும் இடையூறுகளையும் மேற்கொண்டது.அமெரிக்காவின் பொருளாதாரத் தடைஉள்பட அனைத்து சவால்களையும் எதிர்த்து ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு முறியடித்தது.இந்நிலையில், கடந்த 2014 டிசம்பரில் உலக அரசியலில் திடீர் திருப்பமாக கியூபா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக் கிடையேயும் ராஜீய ரீதியிலான ஒத்து ழைப்பை பேணுவது என அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும், கியூப ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ரீதியிலான சில ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின.இந்நிலையில் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் கியூபா மீதான அமெரிக்காவின் கொள்கையைக் குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் தற்போது ஒரு தீவிர தற்பெருமை வர்த்தக கொள்கையைக் கொண்டிருக்கும் நிலையில் கியூபாவை அச்சுறுத்தும் வகையிலான பல திட்டங்களை மேற்கொள்வது எனத் திட்டமிட்டுள்ளது. வர்த்தக ரீதியிலான போட்டியை, தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதற்கான திட்டங்கள் அனைத்தும் ஏற்கெனவே அமெரிக்கா வோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறக்கூடியதாகும் என்றும் ரால் காஸ்ட்ரோ கூறியுள்ளார். அதற்கு ஒருபோதும் கியூபா இடம் தராது என்றும் குறிப்பிட்டார்.வளர்ந்து வரும் சமத்துவமின்மை மற்றும் வறுமை போன்றவைகளால் ஒரு நியாயமற்ற, சர்வதேச பொருளாதார முறையே இடம் பெயர்வுக்கும், புலம் பெயர்வுக்கும், அடிப்படையான காரணிகளாக உள்ளன. மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் அகதிகளை அமெரிக்கா தடை செய்துள்ளது. இதை தடுப்பதற்காகவே அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் மிக நீண்ட சுவரை எழுப்ப திட்டமிட்டுள்ளது. இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீது இதுபோன்ற நோக்கத்தை அது கொண்டிருந்தால் அதற்கான விளைவுகளை அது எதிர்கொள்ள நேரிடும். லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றும் மெக்சிகோ அல்ல’’ என்றும் ரால் காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.வறுமை, சமத்துவமின்மை, பேரழிவுகள் மற்றும் புலப் பெயர்வுகளை பெரும் மதில் சுவர்களை எழுப்பித் தீர்த்துவிட முடியாது.மாறாக, பரஸ்பர ஒத்துழைப்பு, புரிதல்,அமைதிப் பேச்சுவார்த்தை போன்றவற்றால் தான் தீர்வை ஏற்படுத்த முடியும்’’ என்றும் ரால் காஸ்ட்ரோ கூறினார். http://epaper.theekkathir.org/