This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Showing posts with label TAMILNADU CPI (M). Show all posts
Showing posts with label TAMILNADU CPI (M). Show all posts
Wednesday, April 26, 2017
Monday, March 20, 2017
Friday, March 17, 2017
கடந்த சில வருடங்களாக தமிழக அரசு கடைப்பிடித்து வந்த தவறான கொள்கைகளாலும், மத்திய அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையினாலும் தமிழக அரசின் முன்யோசனையற்ற நிதிநிர்வாகத்தாலும் கடுமையான நிதி நெருக்கடியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது என்பதை தமிழக அரசின் 2017-18க்கான நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதுவரை மூடிவைத்திருந்து சிகிச்சை செய்யப்படாத புண்ணைப் போல தமிழகத்தின் நிதிநிலை காட்சியளிக்கிறது. - ஜி.ராமகிருஷ்ணன்சிபிஎம் மாநிலச் செயலாளர்
Thursday, March 9, 2017
அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கோரி சிபிஎம் பொதுக்கூட்டம் எட்டயபுரம், மார்ச் 8-விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும் பாகுபாடின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் சிபிஎம் சார்பில் எட்டயபுரத்தில் பொதுக்கூட்டம்நடந்தது.எட்டயபுரம் சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ். திருநாவுக்கரசு, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா ஆகியோர் பேசினர். நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் பயிரிட்ட நிலங்கள் எல்லாம் வறட்சியால் வறண்டு போயின. இந்நிலையில் தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 3ஆயிரம்நிவாரணம் அறிவித்தது. தற்போதுவிவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 5 ஏக்கருக்குமட்டுமே வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் வரும் காலங்களில் விவசாயத்தை முற்றிலும் கைவிடும் நிலைக்கு அரசே தள்ளி உள்ளது. எனவே விவசாயிகளுக்கு நஷ்டத்திலிருந்து ஓரளவு விடுபடுவதற்காகவாவது விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நிலங்களுக்கும்நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் , கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாய் திருநகரி ஒன்றியம் சார்பில் சிபிஎம் பிரச்சார கூட்டம் 6ஆம் தேதி தேவாரம் தலைமையில் நடைபெற்றது. எஸ்.திருநாவுக்கரசு (விதொச அகில இந்திய தலைவர்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மாரியப்பன் மாவட்டக்குழு உறுப்பினர் கே.பொன்ராஜ், ஒன்றியச் செயலாளர் செ.ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tuesday, March 7, 2017
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் மார்ச் 6 அன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக 7 மீனவர்கள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் தனுஷ் கோடிக்கும், கச்சத் தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எவ்வித முன் எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியினால் அவர்களை நோக்கிச் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில்தங்கச்சிமடத்தைச் சார்ந்த பி.கே.பிரிட்ஜோ என்பவர் படுகாயமுற்று அதே இடத்திலேயே மரணமடைந்துள்ளார். ஜெரோன் என்னும் மீனவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிராயுதபாணியான தமிழக மீனவர்களை எவ்வித காரணமும் இன்றி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த இலங்கை கடற் படையின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை தடுக்க மத்திய அரசு உருப்படியான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இத்தகைய தாக்குதல்களுக்குக் காரணம் ஆகும். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடிவரும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மீனவர்கள் போராடி வரும் நிலையில் இத்தகைய கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தற் போது இப்படுகொலையையும், தாக்குதலையும் கண்டித்து மீனவர்கள் தங்கச்சி மடம் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகொலை செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும், படுகாயமடைந்த மீனவருக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிற போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக உள் ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுத்திட மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. http://epaper.theekkathir.org/
Monday, March 6, 2017
கேரளம் போல் தமிழகம் முன்னேற மாற்று அரசியலை ஆதரிப்பீர் சென்னை பொதுக்கூட்டத்தில் டி.கே. ரங்கராஜன் வேண்டுகோள் சென்னை, மார்ச் 6- “அதிமுக செத்துவிட்டது, திமுக செத்துக்கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பொன்.ராதா கிருஷ்ணன் பேசுகிறார். ஆனால் இவர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.மக்களுக்கான மாற்று அரசியல் களம் காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில், மயிலை மாங்கொல்லை பகுதியில் ஞாயிறன்று (மார்ச் 5) நடைபெற்ற பொதுக்கூட் டித்தில் பேசிய, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் இவ்வாறு கேட்டார். “மத்திய பாஜக அரசை எதிர்த்து நீங்கள் (திமுக) போராட்டம் நடத்தத் தயாராக இல்லை. அதற்குக் காரணம், உங்கள் குடும்பத்தின் மீது வழக்கு இருப்பதுதான் என்பது எங்களுக்குத் தெரியும்.” என்றார் அவர்.தமிழக மக்கள் பிரச்சனைகளைப் பேசும் ஏற்பாடு எடப்பாடி பழனிசாமி அரசில் இல்லை. திமுகவுக்குத் தனது ஆட்சியை அமைக்கக் காத்திருக்கப் பொறுமை இல்லை. அதுதான் சட்டமன்ற அமளிக்குக் காரணம் என்று டி.கே. ரங்கராஜன் கூறினார்.திமுக தலைவர் அண்ணா அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். சிறையில் அவரது எண் 6342. அவரது பெயரைச் சூட்டியுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரது எண் 9234. அவருக்கு உதவியாக உடன் சென்றிருப் வர்களின் எண்கள் 35, 36ல் முடிகின்றன.அவருக்கு சிறையில் அளிக்கப்படும் வசதிகள் பற்றிப் பேசப்படுகிறது. இன்று கிடைக்கிற வசதிகளுக்குக் காரணமே கம்யூனிஸ்ட்டுகள்தான். சிறைகளுக்குள் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களால்தான் கைதிகளுக்கு சில அடிப்படை வசதிகள் கிடைத்தன என்றார் அவர்.தமிழகம் கடுமையான வறட்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காது. ஆந் திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. ஆனால் இதைப்பற்றியெல்லாம் நரேந்திர மோடி அரசு கவலைப்படவில்லை. உலக சுகாதார நிறுவன அறிக் கைப்படி அமெரிக்காவில் சிசு மரண விகிதம் 6. அதாவது பிறக்கிற ஒவ்வொரு 1,000 குழந்தைகளிலும் 6 குழந்தைகள் மரணமடைகின்றன. இந்தியாவில் கேரளம் மட்டும்தாம் அந்த சாதனையை எட்டியிருக்கிறது. பாஜக ஆளும் ராஜஸ்தானில் 60 குழந்தைகள், மத்தியப் பிரதேசத்தில் 40 குழந்தைகள் மரணமடைகின்றன.கேரள நிலை தமிழகத்திற்கு வரவேண்டும், தமிழகம் முதலிடத்தைப் பெற வேண்டும். இடதுசாரிகள் வந்தால்தான் அது நடக்கும். சந்தைப் பொருளாதாரத்தை எதிர்த்துப் போராடும் கொள்கை மார்க்சிஸ்ட் கட்சியிடம் மட்டுமே இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.“தன்னலம் கருதாத, மாற்று ஆலோசனைகள் வெளியிலிருந்து வருமானாலும் அவற்றை ஆராய்ந்து ஏற்கத் தயாராக இருக்கிற கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. எளிய மக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தை ஆதரிக்க முன்வர வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மக்களின் ஏமாற்ற உணர்வு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் பேசுகையில், “ஜெயலலிதா தன்னை ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெறுகிற முதல்வர் என்று சொல்லிக்கொண்டதையும், தனக்கென்று குடும்பம் எதுவும் இல்லை என்று சொன்னதையும், தன்னை மக்களின் தாய் என்று கூறிக்கொண்டதையும் மக்களில் ஒரு கணிசமான பகுதியினர் நம்பினார்கள். அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப்பெரிய அதிர்ச்சியாக வந்தது. சசிகலாவுடன் ஜெயலலிதாவுக்குக் கூட்டு ஏன், 32 கம்பெனிகளில் அவர் பங்காளியானது ஏன் என்றெல்லாம் யோசிக்கிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கருதுகிறார்கள்,” என்று கூறினார்.திமுக-வும் கூட அலைக்கற்றை விவகாரத்தில் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இக்கட்சிகளை நம்பினால் தமிழகம் நன்றாக இருக்கும் என்று உண்மையாக நினைத்தவர்கள் பலர் இக்கட்சிகளின் பின்னால் இருக்கிறார்கள். அவர்களும் ஏமாற்ற உணர்வோடு இருக்கிறார்கள் என்றார் அவர்.தமிழகத்தின் வறட்சி நிலைமையால் 200 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியிலும் மரணமடைந்துவிட்டார்கள. தமிழக விவசாயிகளை மீட்க மத்திய பாஜக அரசு இதுவரையில் ஒரு ரூபாய் கூட தரவில்லை.நெடுவாசலின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறது பாஜக. ஆனால் சேலத்தில் பலருக்கும் வேலைவாய்ப்பளிக்கும் உருக்காலையை மூட முயல்கிறது பாஜக அரசு.கேரளத்தில் ஆற்று மணலை எடுக்க முடியாது. அத்தகைய நிலை தமிழகத்திலும் உருவாக, மாற்று அரசியல் வலுப்பெற வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பிரச்சார இயக்கம் என்றும் கனகராஜ் கூறினார். நம்பிக்கை இழப்பு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், “சென்னையின் பல குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் முன்பாகக் கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கிறது. காவல்துறையால் சட்டம் - ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க முடியவில்லை,” என்றார். காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை, கவுரவமான ஊதியம், மனித உரிமைகள் பயிற்சி ஆகியவற்றை வலியுறுத்துவது மார்க்சிஸ்ட் கட்சிதான். மக்கள் அரசின் மீதும் காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்து வருவது நல்லதல்ல,” என்று கூறினார்.வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராசன் பேசுகையில், “மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று என்னென்னவோ சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால் வேலை வாய்ப்புள்ள இந்தியா எங்கே? காலில் விழும் அரசியலா, பகட்டுப் பேச்சு அரசியலா, மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் அரசியலா - எது தேவை என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்,” என்றார்.காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ. சங்கர், “தமிழ் தமிழ் என்று பேசி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தமிழும் வளரவில்லை, தமிழகமும் வளரவில்லை. பேசியவர்களின் குடும்பம் தான் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்தது. கழகங்கள் ஆண் டது போதும். மக்கள் மாண்டது போதும். மாற்று அரசியலுக்குத் தமிழகம் ஒரு வாய்ப்பைத் தர வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி. பன்னீர் செல்வம், “வறட்சியால் தமிழகம் முழுவதுமே பாதிக்கப் பட்டிருக்கிறது. நீர்நிலைகள் நிறைய உள்ள திருவள்ளூர் மாவட்டத்திலேயே கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. ஆனால் இப்பிரச்சனைகளில் மாநில அரசுக்கும் அக்கறையில்லை, மத்திய அரசுக்கும் அக்கறையில்லை,” என்று விமர்சித்தார்.மயிலாப்பூர் பகுதிக்குழு செயலாளர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரச்சாரக் குழுவின் எம். செந்தில், காஞ்சி மாவட்டத் தலைவர்களில் ஒருவரான பிரமிளா ஆகியோரும் உரையாற்றினர். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நிறைவுரையாற்றினார். அவரது ஆங்கில உரையைப் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழில் மொழிபெயர்த்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே. கிருஷ்ணன், ஏ. ஆறுமுக நயினார், ஆர். வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் வீராங்கனை ஆகஸ்ட் பெபல் எழுதி, பேராசிரியர் ஹேமா தமிழாக்கம் செய்து, பாரதி புத்தகாலயம் தயாரித்துள்ள ‘பெண்களும் சோசலிசமும்’ புத்தகத்தை பிருந்தா காரத் வெளியிட்டார். முதல் படியை டி.கே. ரங்கராஜன் பெற்றுக்கொண்டார். தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம். சரஸ்வதி வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் பா. நீலகண்டன் நன்றி கூறினார்.முன்னதாக வடசென்னை பாரதி கலைக்குழுவின் அரசியல் நையாண்டி, தென் சென்னை தமிழ் ஒளி குழுவினரின் முற்போக்குப் பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. http://epaper.theekkathir.org/
Friday, March 3, 2017
Subscribe to:
Posts (Atom)










