This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Showing posts with label TH. Show all posts
Showing posts with label TH. Show all posts
Friday, March 17, 2017
நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி,மார்ச் 16-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் சிஐடியு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நெல்லை மண்டலத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,பருப்பு பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை 100சதவீதம் வழங்கிடுக, காலி பணியிடங்களை நிரப்பிடுக,கொள்முதல் ஊழியர்களை நிரந்தரப்படுத்திடுக, சுமை பணி தொழிலாளர்களுக்கு நியாயமான கூலியை வழங்கிடுக,பொது விநியோகத்தை சீரழிக்க கூடாது, கறுப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் மக்களை சீரழிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பாளை.யில் சிஐடியு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் சி.பீட்டர் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். சங்க மாநில துணைத் தலைவர் ஏ.சின்னத்துரை,சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.வண்ணமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மண்டல பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Labels:
TH
Monday, March 6, 2017
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் புதுதில்லி, மார்ச் 6 - வாக்குறுதி அளித்தபடி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர ரிசர்வ் வங்கி மறுப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுமாறும் அவர் கூறினார். இந்த வகையில் 93 சதவிகிதமான பழைய ரூபாய்நோட்டுகள் வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்டு விட்டன. சுமார் 7 சதவிகிதம் நோட்டுகள் மட்டும் மாற்றப்பட முடியாமல் போயின.இந்த 7 சதவிகித ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்போர், மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியை அணுகி, தங்கள் வசம்உள்ள பழைய ரூபாய் நோட்டுக் களை கொடுத்து விட்டு, புதிய ரூபாய் நோட்டுக்களை பெறலாம் என்றும், இதன்பிறகும் பழைய நோட்டுக்களை மாற்றாமல் வைத்திருந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தோர் அவற்றை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்தனர். ஆனால், அவர்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின், வங்கிக்கு உள்ளே அனுமதிப்பதற்கே ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.இந்நிலையில், சுமார் 71 லட்சம் ரூபாய் அளவுக்கு மதிப்பிழந்த நோட்டுக்களை வைத்திருந்த ஒருவர், உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு ஏற்கெனவே உறுதியளித்தபடி மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளில் பணத்தைமாற்றிக் கொள்ளலாம் எனும்போது,தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களை ஏன் மாற்றித்தர மறுக்கிறீர்கள்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Labels:
TH
Subscribe to:
Posts (Atom)

