This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Showing posts with label TAMILNADU FISHERMEN. Show all posts
Showing posts with label TAMILNADU FISHERMEN. Show all posts
Thursday, March 9, 2017
மீனவர் போராட்டம் 2வது நாளாக நீடிப்பு இராமேஸ்வரம், மார்ச் 8- இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி - உயிரிழந்த மீனவர் உடலை வாங்க மறுத்து - தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பிரிட்ஜோ என்ற இளம் மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து பலியானார்.இலங்கைக் கடற்படையின் இந்த நடவடிக்கைக்கு தமிழக மீனவ சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனையடுத்து மீனவர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவரின் உயிரைப் பறித்த இலங்கைகடற்படையினர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர்கள் அச்சுறுத்தல் இன்றி மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக புதனன்றும் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், மீனவர் களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் மற்றும் மீனவ கிராமங்களில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதுடன் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். புதனன்று நடைபெற்ற போராட்டத்தின் போது திருநாவுக்கரசர், ஐ.பெரியசாமி, வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.முழு விசாரணைக்கு இலங்கை உறுதி: அன்சாரி தகவல்இதனிடையே, தமிழகமீனவர் சுட்டுக் கொல்லப்பட் டது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்றுசிறிசேனா உறுதியளித்துள்ளதாக இந்திய குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் ஹமீது அன்சாரி கலந்து கொண்டுள்ளார். இதில் இலங்கை ஜனாதிபதிசிறிசேனாவும் பங்கேற்றுள் ளார்.இந்த நிலையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஹமீது அன்சாரி, சிறிசேனாவை சந்தித்து பேசியுள்ளார்.புதனன்று ஜகார்த்தா பயணத்தை முடித்து திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹமீது அன்சாரி, "இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை கடற்படை தளபதியிடம் பேசினேன். இலங்கை கடற்படை அம்மாதிரி எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. மேலும்தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து முழுவிசாரணை நடத்தப்படும் என்று இலங்கை ஜனாதிபதி சிறிசேனா உறுதியளித் துள்ளார்" என்று கூறினார். மேலும் மீனவர்கள் தொடர்பாக அடிக்கடி எழும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹமீது அன்சாரி கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வியாழ னன்று தமிழக சட்டமன்றமும், நாடாளுமன்றமும் கூடவுள் ளன. இங்கு இப்பிரச்சனை எதிரொலிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. (ந.நி) http://epaper.theekkathir.org/
Subscribe to:
Posts (Atom)
