This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Showing posts with label Pudukottai. Show all posts
Showing posts with label Pudukottai. Show all posts
Monday, March 13, 2017
விவசாயிகள் சேறுபூசி போராட்டம் வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் காவல்துறை நெருக்கடி புதுக்கோட்டை, மார்ச்13-மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காத மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, நல்லாண்டார்கொல்லை பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.நல்லாண்டார்கொல்லையில் 26-வது நாளாக திங்களன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் உடல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொண்டு, எங்கள் வாழ்வை நாசமாக்க வந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என முழக்கமிட்டபடி எரிவாயுவிற்காக அமைக்கப்பட்ட குழாயைச் சுற்றிநின்று போராட்டம் நடத்தினர். மேலும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.வடகாட்டில் 9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல காய்கறிகளுடனும், மரக்கன்றுகளுடனும் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் உயிருக்கு உயிராக நேசித்த மண்ணையும், மரம் செடிகொடிகளையும் இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவர்களின் முகத்தில் தெரிகிறது. இந்த அச்சமே தங்களது சொந்த வேலைகளை விட்டு தினந்தோறும் அவர்களை போராட்டக்களத்திற்கு இழுத்து வருகிறது.இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் சற்றும் இறங்கிவராத மத்திய அரசு மீது அவர்களுக்கு மேலும் மேலும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. எது நடந்தாலும் ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்படாதுஎன மத்திய அரசு அறிவிக்கும்வரை தங்களது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதிபடத் தெரிவித்து வருகின்றனர். நெருக்கடி கொடுக்கும் போலீசார் இந்தப் போராட்டம் தொடர்வது மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் உளவுத்துறை ஈடுபட்டு வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஒரு கட்டத்தில் தடியடி நடத்தப் போவதாகவும் போலீசார் தகவல்களை உலவவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், நல்லாண்டார்கொல்லை, நெடுவாசல் பகுதிகளில் ஒருவிதமான பதற்றமான சூழல் நிலவிவருகிறது. (ந.நி) http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Saturday, March 11, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு வடகாட்டில் தொடரும் போராட்டம் அறிவியல் இயக்கம் ஆய்வு புதுக்கோட்டை, மார்ச் 11- ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என அறிவித்து வடகாட்டில் 7-வது நாளாக சனிக்கிழமையன்றும் தொடர்ந்து போராட் டம் நடைபெற்றது.வழக்கம்போல தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பயிர்களைச் சுமந்தும் கருப்புக் கொடிகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சங்கு ஊதியும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கவனகன், மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மூத்த நிர்வாகி கருணாகரன், மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து ஆகியோர் கொண்ட குழு எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்டுள்ள வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வானக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது. மேலும், அந்தக் குழுவினர் வடகாட்டில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினையும் தெரிவித்துப் பேசினர். எஸ்.டி.பாலகிருஷ்ணன் பேசும்போது, அனைத்துவிதமான விவசாயத்திற்கும் ஏற்ற மண் வளத்தைக் கொண்ட இந்தப் பகுதியில் இதுபோன்ற திட்டத்தை கொண்டுவருவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளே இதுபோன்ற வளமான பூமியை பாலைவனமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும். இத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப் பட்டு தகுந்த ஆதாரத்தோடு நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அறிக்கைகள் முன்வைக்கப்படும் என்றார்.போராட்டத்தில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், நாசாவில் பணியாற்றிய எஸ்.பார்த்திபன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நவீன், தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் மற்றும் வடகாடு கிளை நிர்வாகிகள் தங்க.திருப்பதி, ராஜாராம், கோ.முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன் உள்ளிட்ட பலர் பேசினர். பாடகர்கள் குப்புச்சாமி, செல்வி ஆகியோர் விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினர். http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Thursday, March 9, 2017
நெடுவாசலில் ஒப்பாரி புதுக்கோட்டை, மார்ச் 8- ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி வைத்துப் போராட்டம் நடத்தினர்.21-வது நாளான புதனன்றும் போராட்டம் அனல் பறந்தது. வழக்கம் போல பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தங்களது முழக்கங் களை எழுப்பி வருகின்றனர்.போராட்டத்தில் தீபா பேரவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், முன்னாள் எம்பி ராஜாபரமசிவம் ஆகியோர் தலைமையில் 30 மாவட்டங்களைச் சேர்ந்தநிர்வாகிகள் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளுக்கு வந்தனர்.அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களைச் சந்தித்து தங்கள் அமைப்பின் ஆதரவினைத் தெரிவித்தனர். இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். பெண்கள் ஒப்பாரி வைத்துப் போராட்டம்உலக மகளிர் தினமான புதனன்று நெடுவாசலில் இருந்து பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலம் நல்லாண்டார்கொல்லையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எரிவாயு எடுப்பதற்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் நிறைவடைந்தது. அங்கு வந்த பெண்கள் அனைவரும் எரிவாயுக் குழாயைச் சுற்றி அமர்ந்துகொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஒப் பாரி வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மரணம்இந்தப் போராட்டத்தில் நெடுவாசல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தஅரவான் மனைவி பொன்னம்மாளும்(65) கலந்து கொண்டார். ஒப்பாரிவைத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போதே பொன்னம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக நெடுவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்குமுதலுதவி அளிக்கப்பட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நடுவழியிலேயே பொன்னம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார்.களைகட்டும் வடகாடுஎரிவாயுவிற்காக குழாய் பதிக்கப்பட்டுள்ள வடகாடு கிராமத்திலும் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் வீரியமடைந்து வருகிறது. அங்கு பெண்களின் கும்மி, ஆண்களின் கோலாட்டம் மற்றும் கிராமியப் பாடல்கள், பேச்சாளர்களின் உரைவீச்சுகள் என நாள் முழுவதும் போராட்டக்காரர்களை உற்சாகமடையச் செய்கின்றன. மேலும், நாள்தோறும்பல்வேறு கலை வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எனவும் போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 21 நாள் போராட்டத்திற்குப் பிறகும் ஹைட்ரோகார்பன் திட் டத்தை கைவிடுவதாக மத்திய பாஜகஅரசு அறிவிக்காததால் பாஜக மீதுபல்வேறு தரப்பினர் மத்தியில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. மத்திய அரசு அறிவிக்காத வரை போராட்டத்தை நிறுத்த முடியாது என்பதில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் உறுதியாக இருப்பதால் 22-வது நாளான வியாழனன்றும் போராட்டம் தொடரும் என்றே தெரிகிறது. (ந.நி) http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Monday, March 6, 2017
Sunday, March 5, 2017
வடகாட்டிலும் போராட்டம் வெடித்தது ****************** புதுக்கோட்டை, மார்ச் 5- ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. மேலும், நெடுவாசல் அருகில் முக்கிய ஊரான வடகாட்டிலும் ஞாயிறு முதல் போராட்டம் வெடித்தது.திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளிவராமல் போராட்டத்தை ஒருபோதும்கைவிட முடியாது என போராட்டக் காரர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுவாசல் போராட்டக்களத்தை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் சனிக்கிழமை கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருபிரிவினரிடம் மாவட்ட நிர்வாகம் பெயருக்கு ஒருஒப்பந்தத்தைப் போட்டு போராட் டத்தை கைவிடச் செய்தது.இதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் வரும்9-ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. அதுவரை போராட்டத்தைகைவிடும்படி போராட்டக்குழுவினரிடம் கெஞ்சினார். போராட்டக்குழுவினரோ மத்திய அரசு திட்டத் தைக் கைவிடுவதாக உறுதியாக தெரிவிக்காதவரை எங்களின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் முக்கிய ஊரான வடகாட்டிலும் ஞாயிறன்று போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்திலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் த.புஷ்பராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத் தலைவர் எம்.அசோகன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் தமிழரசன் உள்ளிட்ட பலர் போராட் டத்தை ஆதரித்துப் பேசினர். நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணுவின் கிராமியப் பாடல் களும் போராட்டக்காரர்களை உற் தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Friday, March 3, 2017
Thursday, March 2, 2017
நெடுவாசலில் ஏர், கலப்பை, காய்கறிகளுடன் சாரைசரையாக மக்கள் திரண்டனர் விழிபிதுங்கியது அரசு எந்திரம்************************************** புதுக்கோட்டை, மார்ச்.2- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 15-வது நாளானநேற்று நடைபெற்ற போராட்டத் தில் ஏர், கலப்பை, மாட்டு வண்டி,காய்கறிகளுடன் பல்லாயிரக்கண க்கானோர் திரண்டனர். முடிவு எடுக்க முடியாமல் திணறியது மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும். ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு முனைகளில் இருந்தும் ஏராளமானோர் நெடுவாசலை நோக்கிப் படையெடுத்து வரு கின்றனர். 15-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங் களில் இருந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களுமாக பல்லா யிரக்கணக்கில் திரண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஏராளமான மாட்டு வண்டி, டிராக்டர்களில் ஏர், கலப்பை மற்றும் தாங்கள் விளைவித்த காய்கறிகள், செடி, கொடிகளைச் சுமந்து வந்து போராட்டத்தில் குவிந்தனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடியை விமர்சித்தும், தொலைக்காட்சி விவாதங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவாக பேசுபவர்களை எதிர்த்தும் ஆயிரக் கணக்கான பெண்கள் முழக்க மிட்டது அனைவரையும் ஆச்சர்ய த்துக்கு உள்ளாக்கியது. மாவட்ட நிர்வாகம் திணறல்நேற்று முன்தினம் போராட்டக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினர். அப்போது திட்டதை நடைமுறைப்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என உறுதியளித் துள்ளார். இதனால், போராட்டம் வாபஸ்பெறப்படும் என மாவட்ட நிர்வாகம் நம்பி இருந்தது. ஆனால்,கள நிலவரம் இதற்கு நேர்மாறாக இருந்தது. மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த பிறகுதான் போராட்டத்தை கைவிடு வோம் என உறுதிபடத் தெரிவித் தனர்.பேச்சுவார்த்தைக் குழுவினரைமாவட்ட ஆட்சியர் அழைத்துபோராட்டத்தை முடித்துக்கொள்வ தாக அறிவிக்கும்படி தொடர்ந்து நெறுக்குதல் கொடுத்து வந்த தாகக் கூறப்படுகிறது. போராட்டக்குழுவினரோ போராட்டக் களத்தின் நிலைமையைக் கணக்கில் எடுத்தே முடிவெடுக்க முடியும் என தொடர்ந்து ஆட்சியரி டம் தெரிவித்து வந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர், ஆலங் குடித் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் சிவ.வீ.மெய்யநாதன், நாகைசட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகங்கை குண சேகரன், எஸ்.ராஜசேகரன், சிபிஎம்மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐமாவட்டச் செயலாளர் த.செங்கோ டன், நடிகர் விக்னேஷ் உள்ளிட் டோர் பேசினர். பாடகர்கள் செந்தில் கணேஷ்-ராஜலெட் சுமி உள்ளிட்ட பல்வேறு குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும் போராட் டக்களத்தை உற்சாகப்படுத்தியது.விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச்செயலாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம். மாவட்ட நிர்வாகிகள் எம்.முத்துராமலிங்கம், எம்.உடையப்பன், ஏ.ஸ்ரீதர், எம்.பாலசுந்தரமூர்த்தி, சி.ஜீவானந்தம், துரை.நாராயணன், விக்கி உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Wednesday, March 1, 2017
‘தமிழகத்தின் விரோதி பாஜக’ நெடுவாசல் போராட்டத்தில் கடையடைப்பு; கருப்புக் கொடி *********************புதுக்கோட்டை, மார்ச்.1- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரானபோராட்டம் நெடுவாசலைத் தாண்டி கடை யடைப்பு, கறுப்புக்கொடி என மாவட்டம் தழுவிய போராட்டமாக வெடித்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கியது. வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது. 14-வது நாளாக நடைபெற்ற போராட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களுமாக பல்லாயிரக்கணக்கில் திரண்டு தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர். இதனால், போராட்ட மைதானம் ஆட்கள் நிற்பதற்கும், வாகனங் களை நிறுத்துவதற்கும் இடமின்றி நெடுவாசல் கிராமமே ஸ்தம்பித்தது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள்கள், இயற்கை ஆர்வலர்கள் என காலைமுதல் மாலைவரை நெடுவாசலை நோக்கி சாரைசாரையாகத் திரண்டுவந்து புதன்கிழமை யன்றும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இதில் நடிகர் மன்சூர்அலிகான், டிராபிக் ராமசாமி, பச்சைத் தமிழகம் நிறுவனர் சுப.உதயகுமார், பேரறிவாள னின் தாயார் அற்புதத்தம்மாள், திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டை மான், ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோர் அடங்குவர். கடையடைப்புப் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி வர்த்தகர் கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டு நெடுவாசலுக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டக்காரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து தப்பாட்டம், கிராமியப்பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. நீதிமன்றம் புறக்கணிப்பு புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர் உள்ளிட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும் புதன்கிழமையன்று நீதி மன்றத்தை புறக்கணித்து ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித் தனர். மேலும், ஏராளமான வழங்கறிஞர்கள் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டம் 15-வது நாளாக வியாழ னன்று தொடருமா? அல்லது தமிழக அரசின்வேண்டுகோளை ஏற்று போராட்டம் கைவிடப்படுமா என்பது வியாழனன்று தெரியவரும்.http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Tuesday, February 28, 2017
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுக! மக்கள் நலக் கூட்டியக்கம் ஆவேச ஆர்ப்பாட்டம் ********************************* புதுக்கோட்டை, பிப்.28- மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலக் கூட்டு இயக்கத் தலைவர்கள் முழக்கமிட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் வகையில் கர் நாடகாவைச் சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் கம்பெனிக்கு கடந்த 15-ஆம் தேதி மத்திய அரசுஅனுமதி அளித்து, அன்று முதல் திட்டத்தைக் கைவிடக்கோரி நெடுவாசல் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பல வடிவங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டம் நாளுக்கு நாள் உச்சகட்டம்அடைந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமையன்று ஆலங்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நலக்கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கவிவர்மன்(சிபிஎம்), த.செங்கோடன்(சிபிஐ), ப.சசிகலைவேந்தன், செ.ம.விடுதலைக்கனல்(விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், சொர்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.போராட்டத்தில் சிபிஎம் சார்பில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், எம்.முத்துராமலிங்கம், எம்.உடையப்பன், எஸ்.சங்கர்,எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ராமையன், கே.சண்முகம், சிபிஐ சார்பில் டாக்டர் வே.துரைமாணிக்கம், சிவஞானம், மு.மாதவன், கே.ஆர்.தர்மராஜன், எம்.என்.ராமச்சந்திரன், ராஜேந்திரன், ஏ.எல்.ராசு, விசிக சார்பில் கலைமுரசு, சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசு அனுமதித்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அது மாநில அளவிலான போராட்டமாக வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நெடுவாசலில் தலைவர்கள் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நெடுவாசல் கிராமத்திற்கு ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர் சென்று போராடும் மக்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர். தலைவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.நெடுவாசலில் தமிழகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் பெருமளவில் குவிந்து தொடர்ந்து போராடி வருகின்றனர். http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Saturday, February 25, 2017
நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதல்வருடன் இன்று சந்திப்பு? ********************************புதுக்கோட்டை, பிப். 25 - நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஞாயிறன்று முதல்வரை சந்திக்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இது விவசாயத்தை நாசமாக்கி, 5 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கை என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்கள் கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நெடுவாசல் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நெடுவாசலை நோக்கி வரும் அவர்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட உள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. சனிக்கிழமையன்று நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இத்திட்டத்தை எதிர்த்து இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். நெடுவாசல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, ஆவணம், வடகாடு, கருக்காகுறிச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றது. பேரணி சென்ற இடமெல்லாம், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தை பாலைவனமாக்கும் என்று விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் நெடுவாசல் கிராம மக்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “மீத்தேன் திட்டத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா; கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டபோதும் ஜெயலலிதா எதிர்த்தார்; அந்த வகையில், விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட எங்களது அரசு, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் விஷயத்திலும் விவசாயிகள் நலனை காப்போம்” என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.நெடுவாசல் பிரச்சனை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் எடுத்து சொல்லியிருப்பதாகவும், நெடுவாசல் போராட்டக்குழு பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமையன்று முதல்வரை சந்திப்பார்கள் என்று கூறிய விஜயபாஸ்கர், விவசாயிகளின் கருத்துக்களை கேட்டுக்கொள்ளும் முதல்வர், பிரதமரைச் சந்திக்கும் போது, நெடுவாசல் பிரச்சனை பற்றி பேசுவார் என்றும் தெரிவித்தார். http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
Subscribe to:
Posts (Atom)









