This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Showing posts with label THEEKATHIR. Show all posts
Showing posts with label THEEKATHIR. Show all posts
Wednesday, March 11, 2020
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தொடர்ந்து மண்ணைக் கவ்வி வருகிறது. மராட்டியத்தில் அந்தக் கட்சியால் ஆட்சியமைக்க முடிய வில்லை. தலைநகர் தில்லி சட்டப் பேரவைத் தேர்த லில் மோடியும், அமித்ஷாவும் கற்ற வித்தை அத்தனையையும் காட்டியபிறகும் பாஜக படு பாதாளத்தில் விழுந்தது. இந்த ஆத்திரத்தில் தில்லியில் ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர். இப்போது அவர்களது பார்வை மத்திய பிரதே சத்தை நோக்கி திரும்பியுள்ளது. மக்கள் ஆதரவு டன் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படுமா னால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி யமைப்பது பாஜகவின் வழக்கம். அந்த பாணியில் தற்போது மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது பாஜக. 230 உறுப்பினர்களை கொண்ட ம.பி. சட்டப் பேரவையில் காங்கிரஸ் 114 இடங்களை பெற்று ஆட்சியமைத்தது. கமல்நாத் முதல்வராக பொறுப் பேற்றார். முதல்வர் பதவி கிடைக்காத ஆத்தி ரத்தில் ஜோதிராதித்ய சிந்தியா அவ்வப்போது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இந்த உரசல் போதாதா பாஜகவிற்கு. சிந்தியா வுக்கு வலை விரித்தது பாஜக. அவருடன் ஆறு அமைச்சர்கள் உட்பட 20 எம்எல்ஏக்கள் கட்சித் தாவ முடிவு செய்தனர். இவர்களை கடத்திச் சென்று பெங்களூருவில் வைத்து பராமரிக்கும் வேலையை பாஜகவினர் செய்தனர். ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை யும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து அளவளாவியுள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தயாராகி வருகிறார். ஆனால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற பாணியில் சிவராஜ் சிங் சௌகான் இது காங்கிரஸ் கட்சியின் உள் விவகா ரம் என்றும், ஆட்சியை கவிழ்ப்பதில் தங்களுக்கு துளியும் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து கொல்லைப் புற வழியாக பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகி யுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தேர்தலில் மக்கள் ஆதரவை பெற வக்கில்லாத பாஜக பல மாநிலங்களில் இப்படித்தான் ஆட்சியை பிடித்து வருகிறது. இதுகுறித்து அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. இது மோடி,அமித்ஷாவின் ராஜதந்திரம் என்று பாராட்டுரை வாசிக்கவும் சில ஊடகங்கள் தயாராக உள்ளன. ஆள் கடத்தல் மூலம் ஆட்சியமைக்கும் பாஜக ஜனநாயகத்தையும் ஒரு சேர கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மத்திய ஆட்சியதிகா ரத்தை கையில் வைத்துக் கொண்டு மாநில ஆட்சி களை கவிழ்ப்பதன் மூலம் இழிவானதொரு அர சியல் அத்தியாயத்தை பாஜக நடத்தி வருகிறது. இதன் மூலம் ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி என பீற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்காக அவர்கள் பின்பற்றிய வழிமுறை பெருமைப்படத்தக்கதாக இல்லை.
Labels:
THEEKATHIR
Friday, February 21, 2020
"வெறுப்பை நிறுத்து " இப்போது எங்கும் எல்லோருக்கும் இடைவிடாது சொல்லவேண்டிய முக்கியச் செய்தி.
"வெறுப்பை நிறுத்து " இப்போது எங்கும் எல்லோருக்கும் இடைவிடாது சொல்லவேண்டிய முக்கியச் செய்தி.
24 பக்கங்களில் நெஞ்சை கனல வைக்கும் இப்பிரசுரத்தை "வாசல் "வெளியிட்டிருக்கிறது. விலை. ரூ.20/ தான். The wire, caravanmagazine இணைய இதழ்களில் வெளிவந்த மூன்று கட்டுரைகளின் தொகுப்பு.
"என்னவிலை கொடுத்தேனும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நாம் இப்போது போராடியாக வேண்டும்.போராடுவது மிகக்கடினமாகத் தோன்றினாலும் அவர்களுடனான கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்கான ஆரம்பம் இது. "
"ஒருங்கிணைந்த, வன்முறையற்ற சட்டமீறலே இப்போது நமக்குத் தேவை.நாட்டின் பல இடங்களிலும் இத்தகைய சட்டமீறல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகள் புலப்படுகின்றன."
வாசல், 91 98421 02133, vasalviji@gmmail.com
சுபொஅ.http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/stop-hate-book-review
24 பக்கங்களில் நெஞ்சை கனல வைக்கும் இப்பிரசுரத்தை "வாசல் "வெளியிட்டிருக்கிறது. விலை. ரூ.20/ தான். The wire, caravanmagazine இணைய இதழ்களில் வெளிவந்த மூன்று கட்டுரைகளின் தொகுப்பு.
"என்னவிலை கொடுத்தேனும் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நாம் இப்போது போராடியாக வேண்டும்.போராடுவது மிகக்கடினமாகத் தோன்றினாலும் அவர்களுடனான கணக்கைத் தீர்த்துக் கொள்வதற்கான ஆரம்பம் இது. "
"ஒருங்கிணைந்த, வன்முறையற்ற சட்டமீறலே இப்போது நமக்குத் தேவை.நாட்டின் பல இடங்களிலும் இத்தகைய சட்டமீறல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகள் புலப்படுகின்றன."
வாசல், 91 98421 02133, vasalviji@gmmail.com
சுபொஅ.http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/stop-hate-book-review
Labels:
THEEKATHIR
Wednesday, March 22, 2017
பழைய நம்பிக்கைகள் தவிடுபொடியாகும் (மார்ச் 23 - பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்) கடந்த மாதம் மத்தியப் பிரதேசம், இந்தூரில்ஒரு துப்பாக்கி காட்சிக்கு முதல் முறையாக வைக்கப்பட்டது.சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான சாண்டர்சனை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அது. சிறைச்சாலையின் கிடங்கில் எதேச்சையாக தூசிதட்டி பார்த்தபோது இந்த துப்பாக்கி தான்பகத்சிங் உபயோகித்த துப்பாக்கி என்று அறிந்துஅது உடனடியாக மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பயன்படுத்திய துப்பாக்கி இது. ஆனால் "ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பையோ அல்லதுஅரசியல் நிறுவனத்தையோ, அவற்றை உயர்த்திப்பிடிக்கும் தனிநபர்களை படுகொலை செய்வதால் எந்த காலத்திலும் தூக்கி எறிந்து விட முடியாது" என்பதை பகத்சிங்கும் அவர்தம்தோழர்களும் தங்களது புரட்சிகர செயல்பாட்டில் கிடைத்த அனுபவம் மற்றும் புரட்சிகர தத்துவ நூல்கள் மூலம் உணர்ந்தனர். காந்தி- இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில் தான் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. காந்தியாரிடம் தூக்குத் தண்டனையை நிறுத்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட வேண்டும் என்று பலர் கோரினர். ஆனால் காந்தி பயங்கரவாதத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் அதை நிராகரித்து, தூக்குத் தண்டனை குறித்து அமைதி காத்தார். மதபயங்கரவாதம் காந்தி குறிப்பிட்ட இந்த "பயங்கரவாதம்" பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தே போராடியது. ஆனால் காந்தி போற்றிப் புகழ்ந்த கீதையை பின்பற்றுவதாகச் சொன்ன கோட்சேயின் மத பயங்கரவாத துப்பாக்கி தான் இறுதியில், வெள்ளையனை எதிர்த்து போராடிய காந்தியை கொன்றது. வெகுமக்களை விடுதலை போராட்டத்தில்பங்கேற்க செய்ததில் காந்தியின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதே போல் மத சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மையை வலியுறுத்தியவர் காந்தி. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது கலவரம்ஏற்பட்ட பகுதிக்கு (நவகாளி) நேரில்சென்றவர்அவர். பாகிஸ்தானுக்கு சாதகமாக காந்தி நடந்து கொள்கிறார் என்ற வாதமே அவரை இந்து மத அடிப்படைவாதிகள் கொல்வதற்கான காரணமாகும். " பாகிஸ்தானின் உருவாக்கத்தில் முடிவடைந்த பயங்கர நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பானவரும், பதில் சொல்லவேண்டியவரும் காந்திஜிதான்". "உண்ணாவிரதத்தை அவர் (காந்தி) கைவிட விதித்த நிபந்தனை ஒவ்வொன்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு எதிராகவும் இருந்தது" இது தான் நாதுராம் கோட்சேயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.இன்று காந்தி மீண்டும் மீண்டும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, சிறுபான்மை மக்கள், தலித்துகள் இன்று குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். காந்தியை கொன்ற மதவாதிகளை எதிர்கொள்ள, காந்தியாரால் வன்முறையாளர்கள் என்று சொல்லப்பட்ட பகத்சிங்கின் சிந்தனைகளே இன்று அதிகம் தேவை.மதச்சார்பின்மை லாலா லஜபதி ராயை தனது மானசீக தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தவர் பகத்சிங், ஆனால் லஜபதிராய் மத அடிப்படைவாத சக்திகளோடு இணைந்து பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதை அவர் விமர்சித்தார். பகத்சிங் உள்ளிட்டவர்கள் உருவாக்கிய "நவஜவான் பாரத் சபா" வின் ஆறு அமைப்பு விதிகளில், கீழ்க்கண்ட இரண்டு விதிகள் மதச்சார்பின்னை குறித்ததாகும்.ர மதவாத அமைப்புகளுடனோ அல்லதுமதவாத கருத்துக்களை பரப்பும் அமைப்புகளுடனோ எவ்வித தொடர்பும் நவஜவான் பாரத் சபா ஏற்படுத்திக் கொள்ளாது.ர மதம் என்பது மனிதனின் தனிப்பட்ட நம்பிக்கை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் மக்களிடையே சகிப்புத்தன்மையை உருவாக்குவது. மதம், சார்ந்த பற்றாளர்களாகவே துவக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்த தீவிர செயல்பாட்டாளர்கள் இருந்தனர். இதுகாலப்போக்கில், அனுபவம், வாசிப்பு மற்றும்பரந்த உலக ஞானம் ஆகிவற்றாலே தான்முதிர்ச்சி பெற்றது. இந்த புரட்சிகர தத்துவவளர்ச்சி பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் காலத்தில் தான் ஒரு இறுதி வடிவம் பெற்றது என்று சொல்லலாம்.புரட்சிகர சிந்தனைப் போக்கின் வளர்ச்சி 1894 இல் பூனாவில் துவக்கப்பட்ட முதல் தீவிர செயல்பாட்டாளர்களின் அமைப்பின் பெயர்" இந்து மதத்திற்கு தடையாக உள்ளவர்களை நீக்குவதற்கான சங்கம் ( ளுடிஉநைவல கடிச வாந சநஅடிஎயட டிக டிளெவயஉடநள வடி வாந ழiனேர சுநடபைiடிn). சிவாஜிஸ்லோகம், கணபதி ஸ்லோகம் சொல்லிக்கொண்டு நமது பசுக்களை அவர்கள் (பிரிட்டிஷார்) கொல்கிறார்களே இதையே எதிர்க்க வேண்டாமா என்ற தொனியில் தான் இயக்கங்கள் கட்டப்பட்டன. மக்களை வதைத்த ராண்ட்மற்றும் அவர்ஸ்ட் ஆகிய வெள்ளை அதிகாரிகளை சுட்டுக் கொன்ற சபேகார் சகோதரர்கள் இந்த இயக்கத்தில் தான் இருந்தனர்.இதைத் தொடர்ந்து உருவான அமைப்புகள் ஒவ்வொன்றும் தத்துவரீதியாக முற்போக்குப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவந்தன. 1913 ல் துவக்கப்பட்ட கதார் கட்சி"மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. இந்து, முஸ்லிம், சீக்கியர் ஒற்றுமைக்காக உறுதிபட நிற்கிறது. அதே போல் தீண்டப் படுவோர், தீண்டத்தகாதோர் என்ற பிரிவினையையும் அது ஏற்கவில்லை" என்று பிரகடனப்படுத்தியது. இந்தியாவில் இருந்த புரட்சி இயக்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து " இந்துஸ்தான் குடியரசு சங்கம்" என்ற அமைப்பை சசீந்திரநாத் சன்யால் அமைத்தார். இதன் தொடர்ச்சியாகவே பகத்சிங்கின் பங்களிப்போடு இந்த இயக்கம் "இந்துஸ்தான் சோசியலிஸ்ட் குடியரசுசங்கம்" என 1928 ல் மாற்றம் கண்டது. இதுவே தெளிவான தத்துவ பார்வையை புரட்சி இயக்கத்திற்கு கட்டமைத்து.தனிநபர் பழிவாங்கலால் சமூக அமைப்பைமாற்றமுடியாது, மக்கள் திரளை சேர்க்காமல், குறிப்பாக உழைக்கும் மக்களை, கிராமப்புற ஏழைகளை, ஒடுக்கப்படுபவர்களை அணிதிரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதைஇவர்கள் பிரகடனப்படுத்தினர். தங்கள் வாழ்க்கையின் சுகபோகங்கள் அனைத்தையும் தியாகம் செய்து, தன்னுடைய உயிரையும் கொடுக்கும் அளவிற்கு ஒரு உந்துசக்தி தீவிர செயல் பாட்டாளர்களுக்கு தேவைப்பட்டது. பகத்சிங்கிற்கு முன்பு வரை இருந்ததீவிர செயல்பட்டாளர்கள் இந்த உந்து சக்தியைகடவுள், மதம் என்பதின் மூலம் பெற்றார்கள். புரட்சியாளர்களுக்கு இருந்த தத்துவத் தெளிவால், இதுபோன்ற செயற்கையான ஆன்மீக ஊன்றுகோல் எதுவும் அவசியப்படவில்லை. "தன் சொந்தக் காலில் நிற்க முயற்சிக்கும்ஒருவன், யதார்த்தவாதியாக இருக்க வேண்டும்என்று நினைக்கும் ஒருவன், சந்தர்ப்பசூழல்கள்தன்மீது சுமத்தும் அத்தனை துன்பங்களையும், துயரங்களையும், மூடநம்பிக்கைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு, நேரிடையாகவே எதிர்கொள்ள வேண்டும்" என்று சொன்னதோடல்லாமல் செய்தும் காட்டினார். கருத்துக்களை கொல்லமுடியாது " நான் ஏன் நாத்திகன்" என்று தனது புத்தகத்தில் "தான் உண்மையை நாடுபவன் என்று உரிமை பாராட்டிக்கொள்ளும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கை முழுவதையும் போட்டிக்கு அழைக்க வேண்டும். பழைய நம்பிக்கையால் ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாவிட்டால் நொறுங்கி தவிடுபொடியாகிவிடும்." என்கிறார் பகத்சிங். இதை சிரத்தையோடு செய்தவர்கள் தான் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்றவர்கள். கருத்தை எதிர்கொள்ள முடியாத மதவாதக் கூட்டம் அவர்களை கொலைசெய்தது. பகத்சிங் தன்னை தூக்கிலிடுவது குறித்து சொல்லும்போது "என் சிந்தனைகள் பிரிட்டிஷாரை பேய் போல் வட்டமிடும். அவர்கள் இங்கிருந்து ஓடும்வரை அதுஅவர்களை விரட்டும்" என்றார். அதைத்தான்நாம் நினைவில் வைத்து தொடர்ந்து களமாடவேண்டியுள்ளது. தனி மனிதர்களைகொல்லலாம், கருத்துக்களைக் கொல்லமுடியாது. அந்தகருத்துக்கள் தான் இன்று நாடு முழுவதும் பலபல்கலைக்கழகங்களிலும், இளம் தலைமுறையினரிடமும் எழுச்சியுற்று வருகிறது. மதவாதிகளின் பழைய நம்பிக்கைகள், நவீன ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாமல் நொறுங்கி தவிடுபொடியாவதைக் கண்டு அஞ்சி நடுங்கி வன்முறையை ஏவுகின்றனர். "வீண் நம்பிக்கையும், குருட்டு நம்பிக்கையும் ஆபத்தை விளைவிக்கும். அது மூளையை மந்தப்படுத்தி, மனிதனை பிற்போக்காளனாக மாற்றிவிடுகிறது." இது போன்ற பிற்போக்கு, மந்த புத்தி ஆட்சிதான் இன்றைய இளம் தலைமுறையை சிந்திக்க விடாமல் முடக்க துணிகிறது. பொய்களை குத்திக் கிழித்து உண்மை முன்னேறியதுதானே வரலாறு.பகத்சிங்கின் வழியில் பொய்களை குத்திக் கிழித்து உண்மையை முன்னேற்ற நினைப்பவர்கள் ஏன் பகத்சிங்கை தொடரவேண்டும் என்பற்கான பதிலை தோழர் பி.டி.ரணதிவேயின் வார்த்தைகளில் சொல்வதானால், ர சாதி ஒழிப்புக்கு , மத வெறி ஒழிப்புக்கு ஆழமான முக்கியத்துவம் தந்தார் பகத்சிங். தான்ஒரு கடவுள் மறுப்பாளன் என்பதை பறைசாற்றிடதயங்கவில்லை.ர தனதுசிந்தனைகளை தொடர்ந்து செழுமையாக்கிக்கொண்டே இருந்தார். குறிப்பாக தனது கோட்பாடு அல்லது கருத்து தவறு எனில் அதனை தூக்கியெறிந்து சரியான கருத்தை தழுவிக்கொள்வதில் பகத்சிங் தயங்கியது கிடையாது.இத்தகைய தெளிவான கருத்துக்களை கொண்ட பகத்சிங்கின் சிந்தனை மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் அவர் வழி நின்று பிற்போக்கு மதவாத சக்திகளை உறுதியாக எதிர்ப்போம்.கட்டுரையாளர் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
Monday, March 20, 2017
புறந்தள்ள முடியாத கேள்விகள்... இளவரசன் மரணம் தொடர்பான டாக்டர் சம்பத் குமாரின் நேர்காணலைப் படித்தேன். அவர் எழுப்பும் கேள்விகள் அனைத்தும் மிக மிகநுணுக்கமானவை. வலப்புற தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளவரசனுக்கு உடலின் இடதுபுறத்தில் எப்படி காயம் ஏற்பட முடியும்?என்ற கேள்வி துவங்கி, எந்த ஒரு கேள்வியையும் புறந்தள்ள முடியாது. சம்பத்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தபோது,இளவரசனின் உடலில் ரயிலின் கிரீஸ் இல்லை. ஆனால், எய்ம்ஸ் மருத்துவர்களின் பரிசோதனையின்போது அது வருகிறது. இளவரசனின் வெள்ளைச் சட்டை திடீரென காணாமல் போகிறது. கழுத்துப் பகுதியில் அடிபடும்போது, முதுகெலும்பில் காயமோ, எலும்பு முறிவோ ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இளவரசனுக்கு அது இல்லை. ரயிலில் அடிபட்டால் நீண்ட தூரம் தூக்கி வீசப்பட வேண்டும். அது நடக்கவில்லை.குறைந்த தூரத்தில் தூக்கி வீசப்பட்டாலும், உடலில் காயங்கள் ஏற்பட வேண்டும். அதுவும் ஏற்படவில்லை என்று வரிசையாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. முக்கியமாக இடதுகையில் பின்புறத்தில் ஏற்பட்ட காயம், தாக்குதலைத் தடுக்கும்போது ஏற்படக் கூடியது என்பதை வைத்துப் பார்த்தால் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கே வர முடியும் என்று சம்பத்குமார் கூறியுள்ளார். இதையெல்லாம் பார்க்கையில், மிக முக்கியமான வழக்கிலும் கூட, சிலரால் அதிகாரம் செலுத்த முடிந்திருக்கிறது என்பதுதான். இச்செய்தியை முழுமையாக வெளியிட்டதீக்கதிருக்கு நன்றிகள். - தரு.சீவகன், பண்ருட்டி
Labels:
THEEKATHIR
Saturday, March 18, 2017
திருப்பூர் ரேசன் கடைகளில் பொருள் விநியோகம் சீரழிவு கள ஆய்வு விபரத்தை முன்வைத்து உ.வாசுகி குற்றச்சாட்டு திருப்பூர், மார்ச் 18 - திருப்பூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் மக்களுக்கு வழங்கும் அரிசி, துவரை, உளுந்தம் பருப்பு வகைகள் விநியோகம் செய்வது கடந்த மூன்று மாதங்களில் படுமோசமாக சீர்குலைந்துள்ளது என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத்துணைத் தலைவர் உ.வாசுகி சாடினார்.திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் சனியன்று செய்தி யாளர்களிடம் பேசிய உ.வாசுகி கூறியதாவது:தமிழகத்தில் ரேசன் கடைகளில் தட்டுப்பாடில்லாமல் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக மாநில உணவுத்துறை அமைச்சர் காமராஜும், கூட்டுறவுத் துறை அமைச்சர்செல்லூர் ராஜூவும் கூறிவருகின்ற னர். ஆனால் உண்மை நிலை என்ன என்பதை தமிழகம் முழுவதும் கள ஆய்வு செய்ய மாதர் சங்கம் முடிவு செய்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 16 கடைகளில் கள ஆய்வுசெய்யப்பட்டது. இதில் 250 ரேசன் கார்டுகளுக்கு ஒரு கடை என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் 10 கடைகளில் 1000 முதல் 1500 ரேசன் கார்டுகள் உள்ளன. 6 கடைகளில் 500 முதல் 1000 கார்டுகள் வரை உள்ளன. எல்லா கடைகளிலும் பொருட்கள் முழுமையாகக் கிடைப்பதாக அமைச்சர்கள் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எதார்த்தத்தில் நிலைமை அப்படி இல்லை. கோதுமை இலவசமாகத் தருவதாகச் சொல்கிறார்கள்; ஆனால் பச்சரிசி, புழுங்கலரிசியைக் குறைத்து கோது மை தருவதால் தமிழக மக்களுக்கு உதவாது. மேலும் கோதுமை மாவு அரைக்கவும் தனியாக செலவு செய்ய வேண்டியிருக்கும். துவரம் பருப்பு,உளுந்தம் பருப்பு ஒரு மாதம் மாற்றி ஒரு மாதம் என ரேசன் கார்டுகளுக்கு வழங்கி வந்தனர். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக ஒன்றுமே கிடைக்கவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. அதேபோல் 3 லிட்டர் மண்ணெண் ணெய் ஊற்றிவிட்டு 5 லிட்டர் எனவும்,2 லிட்டர் ஊற்றிவிட்டு 3 லிட்டர்எனவும் குறுஞ்செய்தி அனுப்பு கின்றனர். கேஸ் சிலிண்டர் இல்லாத வர்களும் சிலிண்டர் வைத்திருப்பதாக தவறாக குறிப்பிடுகின்றனர். அத்துடன் ரேசன் கார்டுகளுடன் ஆதார் பதிவை இணைப்பதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திரும்பத் திரும்ப கூறியபோதும் எல்லா பக்கமும் கட்டாயப்படுத்து கின்றனர். 8 கடைகளில் 813 பேர் ஆதார் அட்டை இணைக்கவில்லை என்று பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உணவுப் பாது காப்புச் சட்டத்தில் இணைந்த பிறகு தமிழகத்தில் ரேசன் முறை மிகமோசமான முறையில் சீர்குலைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உ.வாசுகி கூறினார்.பேட்டியின்போது மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈ.அங்குலட்சுமி, மாவட்டச் செய லாளர் ஜி.சாவித்திரி, பொருளாளர் அ.ஷகிலா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
கவித்துவ நடையில் கம்யூனிஸ்ட் அறிக்கை தி.வரதராசன் "உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுத்த கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்து 168 ஆண்டுகள் ஆகின்றன. 1848 மார்ச் 18 அன்றுதான் கம்யூனிஸ்ட் அறிக்கை முதன்முதலாக வெளியிடப்பட்டது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகிய இருவரின் கூட்டுச் சிந்தனை வெளிப்பாடே கம்யூனிஸ்ட் அறிக்கையென்றாலும் இந்தப் படைப்பின் மூத்த பங்காளி மார்க்ஸ்தான் என்று கூறுவார் இளைய பங்காளி ஏங்கெல்ஸ். அப்போது மார்க்ஸுக்கு வயது 30: ஏங்கெல்ஸுக்கு வயது 28. விசாலமான உலகக் கண்ணோட்டமும், நுட்பமான தெளிந்த அறிவுத் தேடலும், ஆழ்ந்த தத்துவ ஞானமும் பெற்ற உத்வேகமான இளைஞர்களாக அவர்கள் இருந்தனர். ஆட்சியதிகாரம் என்பது என்ன? 1. முதலாளிகளும் பாட்டாளிகளும், 2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும் 3. சோசலிச, கம்யூனிச இலக்கியம் 4. தற்போதுள்ள பற்பல எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகளின் நிலை - இவ்வாறு நான்கு தலைப்புகளிலான நான்கு அத்தியாயங்களில் அறிக்கை அன்றைய நிலைமைகளையும் குறிக்கோள்களையும் விவரித்துக் கூறுகிறது. மற்றும் பிற்போக்கு சோசலிசம், பிரபுத்துவ சோசலிசம், குட்டி முதலாளித்துவ சோசலிசம், ஜெர்மானிய, அல்லது "மெய்யான" சோசலிசம், பழைமைவாத அல்லது முதலாளித்துவ சோசலிசம், விமர்சன- கற்பனாவாத சோசலிசமும் கம்யூனிசமும் என, நான்காவது அத்தியாயத்தில் பல பிரிவுகளிலான துணைத் தலைப்புகளிலும் கம்யூனிஸ்ட் அறிக்கை பல விஷயங்களைப் பேசுகிறது."நவீனகால அரசின் ஆட்சியதிகாரம் என்பது முதலாளி வர்க்கம் அனைத்துக்குமான பொது விவகாரங்களை நிர்வகிக்கும் குழுவேயன்றி வேறில்லை" எனக் கூறும் அறிக்கை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முதல்கடமையாக,"பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவதுதான் - ஜனநாயகத்திற்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான்" என்கிறது."தொழிலாளர்களின் சர்வதேச அமைப்பாகிய கம்யூனிஸ்ட் கழகம் அந்தக் காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் இந்தக் கழகத்தின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத் திட்டத்தை வெளியீட்டுக்காக வகுத்துத் தருமாறு அடியில் கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. அவ்வாறு உருவானதே பின்வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெழுத்துப் பிரதி பிப்ரவரி (பிரெஞ்சு) புரட்சிக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டன் போய்ச் சேர்ந்தது." - 1872-ஆம் ஆண்டு, கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஜெர்மன் பதிப்புக்குக் கையெழுத்திட்டு வழங்கிய தங்களின் முன்னுரையில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.அந்தப் புரட்சிகர அறிக்கை அந்தக் காலத்திலேயே எத்தனை நாடுகளில், எத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டு எத்தனைப் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதற்கான விவரத்தை அறிக்கையின் படைப்பாளிகளான அவர்கள் அதே முன்னுரையிலேயே தெரிவித்துள்ளனர் :"முதன்முதலில் அறிக்கை ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. பிறகு ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேறான பன்னிரண்டு பதிப்புகளுக்குக் குறையாமல் இம்மொழியில் அறிக்கை வெளிவந்திருக்கிறது.முதன்முறையாய் ஆங்கிலத்தில் இது 1850-இல் லண்டன் ரெட் ரிபப்ளிக்கன் பத்திரிகையில் வெளியாயிற்று. இந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மாக்ஃபர்லென்.1871-இல் அமெரிக்காவில் மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. பிரெஞ்சு மொழிபெயர்ப்பு 1848-ஆம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் சிறிது காலத்துக்கு முன் முதன்முதலில் பாரீசில் வெளியாயிற்று. நியூயார்க்கில் சோசலிஸ்ட் பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது... புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளிவந்த பின்னர் சிறிது காலத்திற்குள் போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. 1860-ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பதிப்பு ஒன்று ஜெனீவாவில் வெளிவந்தது. சிறிது காலத்திற்குள் டேனிஷிலும் மொழிபெயர்க்கப்பட்டது."1888-ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கையின் ஆங்கிலப் பதிப்புக்கு அளித்த முன்னுரையில் ஏங்கெல்ஸ் கூறும்போது, " தற்போது சோசலிச இலக்கியங்கள் யாவற்றிலும் இது மிகவும் பல்கிப் பரவி அதிக அளவுக்கு உலகம் தழுவிய வெளியீடாக இருக்கிறது என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானுகோடி தொழிலாளி மக்களால் பொது வேலைத்திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை" என்கின்றார் மிகுந்த பெருமிதத்துடன்.1917 ரஷ்ய சோசலிசப் புரட்சிக்கு முந்தைய காலத்திலேயே கம்யூனிஸ்ட் அறிக்கை 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 544 பதிப்புகள் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்தவை. கனவுகளிடத்தில் விஞ்ஞானம் உலகிற்கே ஓர் புதுமையாக சோசலிசப் புரட்சியை அரங்கேற்றிய மாமேதை லெனின் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் பற்றிக் கூறுகையில், "ஒரு மேதைமைக்குரிய தெளிவுடனும், மதிநுட்பத்துடனும் உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை அறிக்கை வழங்குகிறது. சமூக வாழ்க்கைக் களத்தை உள்ளடக்கிய ஒரு முரண்பாடற்ற பொருள்முதல்வாதத் தத்துவமாகவும், வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிகச் சிறந்த கோட்பாடாகிய இயக்கவியல் தத்துவமாகவும், வர்க்கப் போராட்டத் தத்துவமாகவும், ஒரு புதிய பொதுவுடைமைச் சமூகத்தின் படைப்பாளியாகிய உழைப்பாளி வர்க்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் புரட்சிகரப் பங்களிப்பை விளக்கும் தத்துவமாகவும் கம்யூனிஸ்ட் அறிக்கை அமைந்துள்ளது."மேலும் லெனின் கூறுகிறார் : "தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆற்றிய பணியைப் பற்றி ஒரு சில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம் : தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறும், தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறும் அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள். " உழைப்போரை ஒடுக்கி, அவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவத்தை ஒழித்திடத் தோன்றிய கம்யூனிசம் என்பது முதலாளிகளின் - அவர்களது ஆட்சி அதிகார வர்க்கங்களின் பார்வையில் ஒரு பூதம்தான்! கம்யூனிசத்தின் மகா சக்தியைக் கண்டு அஞ்சிய அவர்களின் மிரட்சியிலிருந்தே மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் தங்களின் அறிக்கையை - அந்தப் பிரகடனத்தை உத்வேகத்தோடு இப்படி ஆரம்பிக்கிறார்கள்: " ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம் - கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜார் அரசனும், மெட்டர்னிஹும், கிஸோவும், பிரெஞ்சு தீவிரவாதிகளும், ஜெர்மன் உளவாளிகளுமாக - பழைய ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். "இந்தப் ‘பூதத்தை’ச் சொல்லி முதலாளிகளும் அவர்களின் அதிகார வர்க்கமும் கம்யூனிசம் குறித்து உலகத்திற்குப் பூச்சாண்டி காட்டினர்.அந்த ஐரோப்பிய சக்திகளைக் குறித்து இவ்வாறான எள்ளல் சித்தரிப்புடன் அறிமுகம் செய்கிறது அறிக்கை. ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசத்தின் மீது வெறுப்பு உண்டாவதற்காகப் புனையப்பட்ட பூச்சாண்டிக் கதை இது என்பதை உணர்த்துகிறது அறிக்கை. அந்தப் பூச்சாண்டிக் கதையை முறியடிப்பதற்கு அன்றே அந்த ஞானிகள் தயாராகியிருக்கிறார்கள் :" பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் கருத்துக்களையும் தங்கள் நோக்கங்களையும் தங்கள் போக்குகளையும் வெளியிட்டு ,நேரடியாய்க் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.""இந்த நோக்கத்துடன் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் லண்டனில் கூடி, அடியிற் கண்ட அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஃபிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதற்காக வகுத்திட்டனர்."-என்கிறது அறிக்கை. திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்கு பதிலாய்... ‘மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை கவித்துவ நடையில் எழுதப்பட்டுள்ளது’ என்று பெருமிதப் பாராட்டுதலோடு கூறினார் கவியரசு கண்ணதாசன். இதோ, அதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையிலிருந்து சில எடுத்துக்காட்டுகள் :"எங்கெல்லாம் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமந்தரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவுகட்டியது. மனிதனை இயற்கையாகவே மேலானோருக்குக் கீழ்ப்படுத்திக் கட்டிப்போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவுஇரக்கமின்றி அறுத்தெறிந்துவிட்டு, மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லாப் பணப் பட்டுவாடாவைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிவிட்டது. சமயத்துறைப் பக்திப் பரவசம் , பேராண்மையின் வீராவேசம், சிறுமதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புதிய பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர்நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட, விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில், சமயத்துறை பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற, நிர்வாணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது." முதலாளித்துவ வர்க்கம் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்குள் அது தோற்றுவித்த பிரம்மாண்டங்களைப் பற்றி அறிக்கை வர்ணிக்கிறது. அத்துடன் "முதலாளித்துவ வர்க்கம் தன்னை அழித்தொழிக்கப்போகும் ஆயுதங்களை வார்த்தெடுத்திருப்பது மட்டுமல்லாமல் அதை பிரயோகிப்பதற்குரிய ஆட்களையும் - பாட்டாளிகளாகிய நவீன தொழிலாளி வர்க்கத்தையும் தோன்றியெழச் செய்திருக்கிறது" என்றும் சுட்டிக்காட்டுகிறது."பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டிவிடவில்லை. பழையனவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும் புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை" என்றும் கூறுகிறது.வெகுகாலமாக - இன்றுவரை - மக்களை ஏமாற்றுவதற்காக சோசலிசம், சமத்துவம் என்கிற சொற்களை உச்சரிக்காத முதலாளித்துவக் கட்சிகள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அப்படி உச்சரிக்கிற அந்தக் கட்சிகளிடம் முதலாளித்துவ எதிர்ப்பு மட்டும் இருக்காது! இதை 168 ஆண்டுகளுக்கு முன்னரே - 1848-லேயே கம்யூனிஸ்ட் அறிக்கை நையாண்டி தொனிக்க இடித்துரைத்துவிட்டது."முதலாளித்துவ சோசலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம்: முதலாளி முதலாளியாய் இருப்பது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே." ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் உலகின் மற்ற மொழிகளிலும் வெளிவந்துள்ளது. தமிழ் முதலான இந்திய மொழிகளில் கம்யூனிஸ்ட் அறிக்கை பல பதிப்புகள் வெளிவந்துள்ளது. உலகில் மற்ற நூல்களைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் பதிப்பிக்கப்பட்டதும், உலகெங்கும் மிக விரிந்த அளவில் அறியப்பட்டதும், வேறு எந்த அரசியல் நூலையும்விடக் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியதும் கம்யூனிஸ்ட் அறிக்கை மட்டும்தான்."உலகில் கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?" என்ற கேள்வியை 1999-இல் லண்டன் பி.பி.சி.செய்தி நிறுவனம் எழுப்பி, தனது நேயர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் பங்கேற்றவர்களில் மிகமிகப் பெரும்பான்மையோர் அளித்த பதில், "கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் காரல்மார்க்ஸ்" என்பதாகும்! "கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் கருத்துக்களையும் குறிக்கோள்களையும் மூடிமறைக்க மனம் விரும்பாதவர்கள். இன்றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தங்களின் இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்ட்டுகள் ஒளிவுமறைவின்றி பறைசாற்றுகிறார்கள். அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று. பாட்டாளிகள் அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே,ஒன்றுசேருங்கள்!"- என்கிற கம்பீரமான நம்பிக்கை அறைகூவலுடன் தங்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிறைவு செய்துள்ளனர் மார்க்ஸும் ஏங்கெல்ஸும்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையின் 150 ஆண்டு நிறைவு விழா 1998 பிப்ரவரி முதல் உலகெங்கும் ஆய்வரங்கச் சிறப்பு உரைகளோடும், அறிக்கை குறித்த ஆய்வு நூல் வெளியிடுதலோடும் கொண்டாடப்பட்டது."கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றிய விளக்கக் கட்டுரைகள்" எனும் நூலின் பதிப்பாசிரியர் பிரகாஷ் காரத் தமது அறிமுக உரையில் கூறுகிறார்-"புரட்சிகர இயக்கத்தின் அடிப்படையான இலக்குத் திட்டமும் அறிவியல் ரீதியான தத்துவத்தின் வலிமையும் இணைந்து உருவாக்கப்பட்ட ஆவணமாகக் கம்யூனிஸ்ட் பிரகடனம் அமைந்துள்ளதால்தான் ஓர் உயிரோட்டமுள்ள ஆவணமாக அது தொடர்ந்து நீடிக்கிறது. எளிய நடையில் - ஆனால் ஆழமான பொருளுடன் எழுதப்பட்டிருப்பதால், புரிவதற்குக் கடினமான தத்துவம்கூட சாதாரண தொழிலாளியும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாக, கச்சிதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்கம் உருவாக்கியுள்ள நூல்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த நூலாக கம்யூனிஸ்ட் பிரகடனம் இன்றளவும் நீடிக்கிறது." இந்தியாவில்... 1920களின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே இந்தியாவில் பல மையங்களிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டுவந்தன. அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் பிரச்சாரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆங்கிலப் பிரதிகள் பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாகக் கடத்திக் கொண்டுவரப்பட்டு - முக்கியமாக இந்தியப் புரட்சியாளர்களிடம் சேர்க்கப்பட்டன.1922-இல் லிபர்ட்டி பப்ளிகேஷன்ஸ் ஆங்கில மொழியில் ஆறு அணா விலையில் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டது. இதுதான் இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையாகும். வெளியீட்டாளர் பெயர் ராஞ்சோத் தாஸ் புவன் வோட்வாலா. இவர் தேசபக்திமிக்க தொழிலதிபர்.முதன்முறையாக கம்யூனிஸ்ட் அறிக்கையை இந்திய மொழியில் வெளியிட்ட பெருமை இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகிய முசாபர் அகமதுவையே சேரும். இவர், தாம் ஆசிரியராக இருந்த "ஞானவாணி" இதழில் 1926 ஆகஸ்ட் 12 முதல் 1927 ஜூலை 21 வரை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தார். கம்யூனிஸ்ட் அறிக்கையை வங்க மொழியில் மொழிபெயர்த்து வழங்கியவர் மகாகவி இரவீந்திரநாத் தாகூரின் பேரன் சௌமியேந்திரநாத் தாகூர்.அடுத்து, 1927-இல் உருது மொழியில் அல்ஹிலால் என்ற வாரப் பத்திரிகையில் அறிக்கையின் முக்கியப் பகுதிகள் வெளியிடப்பட்டன. இந்த இதழின் ஆசிரியர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகிய அபுல்கலாம் ஆசாத். உருதுவில் மொழியாக்கம் செய்தவர் சுதந்திரப் போராட்ட வீரரான அப்துற் ரசாக் மலிஹாபாடி.1931-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை மராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர், பின்னாளில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கிய ஜி.எம்.அதிகாரி. தமிழில்... அதே 1931-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, ஈரோட்டிலிருந்து வெளிவந்த ஈ.வெ.ரா. பெரியாரின் "குடிஅரசு" இதழில் தொடராக வெளிவந்தது. சமதர்ம அறிக்கை என்ற பெயரில் தொடர்ந்து ஐந்து வாரங்கள் வெளிவந்தது.1932-ஆம் ஆண்டு மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் இடப்பள்ளி கருணாகர மேனனின் மொழிபெயர்ப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.இவர் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் யுத்தமும் சமாதானமும், குற்றமும் தண்டனையும் என்ற நூல்களை மொழிபெயர்த்தவர்.1933-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை தெலுங்கில் வெளியிடப்பட்டது. தட்டச்சு செய்து சைக்ளோ ஸ்டைல் இயந்திரத்தில் பிரதிகள் எடுத்து கட்சி ஊழியர்களுக்குச் சுற்றுக்கு விடப்பட்டது. தெலுங்கில் மொழிபெயர்த்தவர் பெரும் புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவரும் வீரத் தெலுங்கானா போராட்ட தளபதியுமான பி.சுந்தரய்யா.அடுத்து குஜராத்தி, இந்தி மொழிகளில் 1934-லும், ஒரியா மொழியில் 1936-லும், பஞ்சாபி மொழியில் 1944-லும் அறிக்கை வெளியிடப்பட்டது.அதற்குப் பிறகு 1948-இல் தமிழில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்தது. தமிழாக்கியவர் எம்.இஸ்மத் பாட்சா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி வெளியீட்டகம் இதை வெளியிட்டது.1975-இல் கம்யூனிஸ்ட் அறிக்கை ரா.கிருஷ்ணையாவின் தமிழாக்கத்தில் மார்க்ஸின் இரண்டு முன்னுரைகளுடனும் ஏங்கெல்ஸின் ஐந்து முன்னுரைகளுடனும், பல விளக்கக் குறிப்புகளுடனும் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது.இன்று, எஸ்.வி. ராஜதுரையின் தமிழாக்கத்தில் அறிமுகவுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸின் புரட்சிகர கம்யூனிஸ்ட் அறிக்கை உலகின், இந்தியாவின் எல்லா மொழிகளிலும் உள்ளன. உலகெங்கும் இந்த அறிக்கை வாசிக்கப்படுகிறது. இன்றும் இந்த அறிக்கை தெளிவான, உத்வேகமிக்க, புதியதொரு சமுதாய நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஞானவிளக்காகத் திகழ்கிறது http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
Friday, March 17, 2017
பாதுகாப்பற்ற ரயில் பயண பட்டியலில் முந்தப் போட்டியா? இந்தியாவில் தொடர் வண்டிகள் சம்பந்தப்படும் விபத்துகளும் கூட தொடர் நிகழ்வுகளாகியிருக்கின்றன. கடந்த எட்டாண்டுகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை 2 பேர் ரயில் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். இதில் 4.7 விழுக்காடுவிபத்துகள் நாசவேலைகளால் ஏற்படுவதாகவும் 44 விழுக்காடு விபத்துக்கள் மனிதத் தவறுகளால் ஏற்படுவதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.2000ல் அமைக்கப்பட்ட எச்.ஆர்.கண்ணா குழு விரிவாக ஆய்வு செய்து, விபத்துகளைத் தடுக்க ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.17,000 ஆயிரம்கோடி தேவை என்று கூறியது. இதில் ரூ.12,000 கோடியை மத்திய அரசு தந்தது. மீதமுள்ள ரூ. 5,000 கோடி செஸ் வரி மூலமாக திரட்டப்பட்டு, சிலகுறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால் விபத்துகளும் கணிசமாகக் குறைந்து பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. ஆனால் தொடர்ந்து ரயில் பாதைகள் விரிவாக்கம், நகர்மயமாக்கல் போன்ற காரணங்களால் ரயில் பயணத்தை நாடும்மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பெரும் விபத்துகளின்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்த பின்னணியில் 2012ல் அனில் ககோட்கர் தலைமையில் மற்றொரு குழுஅமைக்கப்பட்டது. அக்குழு ரயில் பாதுகாப்புக்கு 5 ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதிதேவை என்று பரிந்துரைத்தது. அரசோ, 75விழுக்காடு நிதியை ரயில்வே தானே திரட்டிக்கொள்ள வேண்டும் என்கிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும்போது பணம் கிடைத்தால் ரூ.5,000 கோடியை தனது பங்காகத்தருவதாக கூறுகிறது. அப்போதே பாதுகாப்புகேள்விக்குறியாக வளையத் தொடங்கிவிட்டது.இதில் ஊழியர் பற்றாக்குறை என்ற பெரும் பிரச்சனையும் இருப்பதை ரயில்வே தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருபுறம் ரயில்வே கேட்கும் நிதியை ஒதுக்க மறுக்கும் மத்திய அரசு, மறுபுறம் காலிப் பணியிடங்களை நிரப்பவும் மறுக்கிறது. விபத்து ஏற்பட்டால் மனிதத் தவறு என்று ஊழியர்கள் மீது பழிபோடுகிறது. அண்மைக்காலமாக, தீவிரவாதிகள் சதி என்றும் எடுத்த எடுப்பிலேயே சொல்லப்படுகிறது. ரயில் சேவைகளும் புதிய வழித்தடங்களும் அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் ரயில்வேயில், கொஞ்சநஞ்சமல்ல, சுமார் 1,27,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில்70 விழுக்காடு பணியிடங்கள் தடப்பராமரிப்போடு தொடர்புள்ளவை. இருக்கும் ஊழியர்கள்இரட்டிப்புப் பணிச்சுமையோடு பணிபுரிகிறார்கள்.ரயில்வே நிர்வாகமும், அதை இயக்கிடும் மத்திய அரசும் ஆட்குறைப்புக் கொள்கையில் பிடிவாதமாக இருக்க, அதற்கு பாதுகாப்பு பலியாகிறது, பயணிகள் தங்களது விலைமதிப்பற்ற உயிரை இழக்க நேரிடுகிறது, பலர் ஊனமடையவேண்டியதாகிறது. அதிவேக ரயில்கள் பற்றியெல்லாம் பேசுகிற மத்திய ஆட்சியாளர்கள், இனியேனும் பாதுகாப்பான பயணம் பற்றி அக்கறைப்படட்டும். தனியார்மயமாக்கல் நோக்கங்களைக் கைவிட்டு காலிப்பணியிடங்களை நிரப்பட்டும். இல்லையேல் ரயில் பயணங்களையும் பயணிகளையும் பாதுகாக்கத் தவறிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
இரட்டை இலை: களமிறங்கும் தேர்தல் ஆணையம்இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, அதிமுகவின் சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இரு அணியினரையும் மார்ச் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு தில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆஜராக, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.உத்தரகண்ட் முதல்வராக ஆர்எஸ்எஸ்காரர் தேர்வுஉத்தரகண்ட் மாநில முதல்வராக, ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் திரிவேந்திர சிங் ராவத் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் சனிக்கிழமையன்று பதவியேற்கிறார். அதன்படி, உத்தரகண்ட் மாநிலத்தின் 9-ஆவது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்கிறார். 56 வயதாகும் திரிவேந்திர சிங் ராவத், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர்களில் ஒருவர் ஆவார்.அருண் ஜெட்லியுடன், ஜெயக்குமார் சந்திப்புதில்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை, தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். பின் அவர் செய்தியாளர்களிடம், ‘வர்தா புயல் பாதிப்பை சீர்செய்ய ரூ.22,573 கோடியை ஒதுக்கவும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரணப் பணிக்காக ரூ.39,665 கோடி ஒதுக்கவும் அருண்ஜெட்லியிடம் வலியுற http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
தொடர் வேலைநிறுத்தம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் எச்சரிக்கை சென்னை, மார்ச் 17- ஏப்ரல் மாதத்தில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துக் கழகதொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளியன்று (மார்ச் 17) நடைபெற்றது. கூட்டத்திற்குபின்னர் தொமுச பொருளாளர் நடராசன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் உள்ளிட்ட தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியைப் போக்க அரசு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதியை ஒதுக்கி ஈடுசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்கவும், தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் தீவிரமான தொடர்வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.மார்ச் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் ஏப்ரல் மாதத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்தத் தேதியில் இருந்து என்பதை மார்ச் இறுதியில் அறிவிப்போம். மார்ச் 21 முதல்மார்ச் 30 வரை அனைத்து கழகங்களிலும் வேலை நிறுத்த ஆயத்த மாநாடுநடைபெறும். ஏப்ரல் முதல் வாரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தவுள்ளோம். போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்தும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கக் கோரியும் சனிக்கிழமை காலை தமிழகம் முழுவதும் அனைத்துப் பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு, சட்டப்பேரவையில் திருத்தமதிப்பீடாகவோ, துணை மதிப்பீடாகவோ நிதியை ஒதுக்கும் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.இச்சந்திப்பின் போது அனைத்துசங்க நிர்வாகிகளும் உடனிருந்தனர். தொழிலாளர்களிடம் பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட 5,200 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றும் அதனை பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும் என்றும் முதலமைச்சர், நிதியமைச்சர், நிதித்துறை செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். 13வது ஒப்பந்தப் பேச்சுவார்த்தை துவங்கும் போதும் கூறியிருந்தோம். ஆனால் அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை. இயங்கிக் கொண்டிருக்கின்ற 23 ஆயிரம் பேருந்துகளில் 17 ஆயிரம் பேருந்துகள் இயக்குவதற்கு லாயக்கற்ற பழைய பேருந்துகள். அவற்றை மாற்ற வேண்டும். கடந்த ஆண்டு 2 ஆயிரம் புதிய பேருந்துகளும், 100 மினி பேருந்துகளும் வாங்க 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணத்தை செலவு செய்யாமல், இந்த ஆண்டு 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டிற்கும் சேர்த்து மொத்தமே 2,100 பேருந்துகள் மட்டும் என்பது தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இது போக்குவரத்துக் கழகத்தை சீரழிக்கும் ஏற்பாடாகும். தினசரி 94 லட்சம் கி.மீ வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் 12,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக சராசரியாக ஒரு கிலோ மீட்டருக்கு 7 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. நாளொன்றுக்கு 6 கோடியே 58 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படும். வருடத்திற்கு 2400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதனை ஈடு செய்ய எந்த நிதியும் அரசு ஒதுக்கவில்லை. 203 பணிமனைகளை அடமானம் வைத்து வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளனர். கடன்களை அடைக்கவோ, வட்டி செலவினத்தைக் குறைக்கவோ நிதி ஒதுக்கவில்லை. டீசல் விலை 41 ரூபாய்க்கு மேல் உயரும் தொகை முழுவதையும் ஈடு செய்ய அரசு நிதியளிக்க வேண்டும்; ஆனால் 1400 கோடி ரூபாய் தேவைக்கு வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேர், ஓய்வுகால பலன்களைப் பெறவும், ஓய்வூதியம் கேட்டும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்து, அவர்களுக்காக போராடுவது என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
மகத்தான தேசபக்தப் போர் 1939ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், இரண்டாம் உலகப்போர் மூண்டது. ஏகாதிபத்தியத்தின் இயல்பில் உள்ள முரண்பாடுகளும் ஏகாதிபத்தியங்களிடையே, கூர்மைப்பட்ட போட்டிகளும் இவ்வழிவிற்குக் காரணங்கள் ஆகும். இத்தகைய பெரிய, திட்டமிட்ட, கொலைகார நடவடிக்கைகளுக்கு, மேற்கத்திய அரசுகள், தங்களுடைய ‘சோவியத் எதிர்ப்பு’க் கொள்கையின் பொருட்டு, துணை நின்றன. அந்த உலகப் போருக்கு முந்தைய காலத்தில், ஆங்கிலேய, பிரெஞ்சு, அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சின்னஞ்சிறிய ஐரோப்பிய அரசுகளின் நலன்களைப் பலியிட்டு, இட்லரின் ஜெர்மனியை சமாதானப்படுத்த முயன்றார்கள்.இட்லரின் ஆதிக்கத்தில் சிக்கிய ஜெர்மனி, உலகப் போரைக் கட்டவிழ்த்துவிட்டதும் தொடக்கத்தில், மளமளவென்று, அது வெற்றிபெற்றது. கொலை, நாசவேலைகளை மேற்கொண்டு புறப்பட்ட, ஜெர்மன் படைகள், ஒரு நாடு, அடுத்த நாடு எனப் பிடித்து வெற்றிநடைபோட்டன. உலகம், அதற்குமுன் அவ்வளவு பெரிய போரைக் கண்டதில்லை. அவ்வளவு கோரமான கொடுமைகளையும் கண்டதில்லை. அப்போரில், முன்னர் நேரிடாத அளவு பெருமளவில் சாவுகள் ஏற்பட்டன; இரத்தம் ஆறாகப் பெருகியது. அது உலகில் மனித நாகரிகத்தையே அழித்துவிடும் வகையில் அச்சுறுத்தியது.ஏகாதிபத்தியங்களும் மேற்கத்திய நாடுகளும் தாலாட்ட, வளர்ந்த, ஜெர்மானிய நாசிச சக்தி, தொடக்கத்தில் மளமளவென்று பெற்ற வெற்றிகளால் வெறிகொண்டு, இருபத்தியொன்று திங்களுக்குப் பிறகு, கிழக்கு திசைக்குத் திரும்பி, சோவியத் நாட்டைத் தாக்கிற்று.1941ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22ஆம் நாள் புலரவும் இட்லரின் படைகள், சோவியத் நாட்டின் மேல் முன்னறிவிப்பின்றி படையெடுத்தன. ஒன்றை ஒன்று தாக்குவதில்லை என்ற தோர் உடன்படிக்கை அப்போது சோவியத் ஒன்றியத்திற்கும் ஜெர்மனிக்கும் இடையில் இருந்தது. அதையும் உதறிவிட்டு, ஐம்பது லட்சம் ஜெர்மானியப் படைகள், ஆயிரக்கணக்கான விமானங்கள், டாங்கிகள், பீரங்கிகள், பிற போர்க் கருவிகளோடு, சோவியத் நாட்டை பெரிய அளவில் தாக்கும்படி அனுப்பப்பட்டன. சோவியத் மேல் படையெடுக்க வந்த இட்லரின் அதிகாரிகளும் படைவீரர்களும் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் போரில் திறமைமிக்கவர்கள்.ஆதிக்கவெறி பிடித்த இட்லரின் நப்பாசை என்ன? சில வாரங்களில் சோவியத் நாடு முழுவதையும் பிடித்துக் கொள்ளலாமென்று மனக்கோட்டை கட்டினான். நாசிசப் படை சோவியத் நாட்டை வென்ற பிறகு, தொடர்ந்து முன்னேறி இந்தியாவையும் பிடிப்பதற்கு இட்லர் திட்டம் தீட்டி ஆயத்தமாக வைத்திருந்தான்.ஆத்திரமூட்டல் எதுவும் நடவாதபோது, துரோக சிந்தனையோடு, ஜெர்மானியர், பெரும்படை கொண்டு தாக்கியதும் சோவியத் மக்கள் வியப்பில் வீழ்ந்தனர்; இட்லரின் தாக்குதலுக்கும் இந்தியாவைப் பிடிக்கும் கனவிற்கும் வழிவிடாத, உடையாத, பெருஞ்சுவராக, சோவியத் மக்களும் படைகளும் இணைந்து நின்றனர். சாவையும் மோதி மிதித்துவிடும் வகையில் சோவியத் மக்கள் போராடியது இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவே, பாசிச முறியடிப்பை உறுதிப்படுத்தியது. ஜெர்மானிய நாசிசத்தை முறியடிப்பதில் பல நாடுகளுக்குப் பங்கு உண்டு என்றாலும் ஒவ்வொரு நாடும் சம பங்கு எடுத்துக் கொண்டது என்று கூற இயலாது; சோவியத் நாட்டின் பங்களவு பிற எந்த நாட்டின் பங்கும் இல்லை. இரண்டாம் உலகப்போரின் முடிவுகளை நிர்ணயித்த போராட்டங்கள், சோவியத் ஜெர்மன் களங்களிலேயே நடந்தன; வெற்றி பெற்றன. சோவியத் மக்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாது, மனித இனத்தின் எதிர்காலத்தையும் மிக நீண்ட சோவியத் படைகள், ஜெர்மானியப் படைகளைப் படுதோல்வியடையச் செய்தன; பெர்லின் நகர்வரை விரட்டிச் சென்று, அங்கு செங்கொடியை ஏற்றி வைத்து, வெற்றி முழக்கஞ் செய்தன.அமைதியை விழையும் சோவியத் மக்கள் மேல் திணிக்கப்பட்ட, மகத்தான தேசபக்தப் போர் எதைக் காட்டிற்று? சோவியத் நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களிடையே, சிதைக்க முடியாத ஒற்றுமை, உருவாகியிருந்ததையும் சமதர்மக் கோட்பாட்டின் மேல் சோவியத் மக்கள் ஆழமான பற்றுக் கொண்டிருந்ததையும் துலாம்பரமாகக் காட்டிற்று.சோவியத் படைகளுக்கும் பிரிட்டிஷ் அரசின் ஆணைப்படி இயங்கிய இந்தியப் படைகளுக்குமிடையே இருசார், நல்லெண்ணம் வளர்வதற்கு வாய்ப்பளித்த ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வோம். ஆயிரக்கணக்கான இந்திய சிப்பாய்கள், பொறியாளர்கள், வாகனமோட்டிகள் ஆகியோர் இராக், ஈரான் வழியாக, சோவியத் படைகளுக்கு வேண்டிய பொருள்களை இருபத்திநான்கு மணி நேரமும் மிக சோதனையான சூழலிலும் கொண்டு சென்றபடியே இருந்தனர். அவர்கள், தங்கள் சோவியத் சகாக்களோடு தொடர்பு கொள்ளவும் பழகவும் புரிந்து கொள்ளவும் அவர்களுடைய வாழ்வு, போராட்டம் பற்றி நேரடியாகவே அறிந்து கொள்ளவும் அப்போரினால் வாய்ப்பு ஏற்பட்டது. - இந்திய சோவியத் நட்புறவுபயன்மிகு பத்தாண்டுகள் சோவியத் செஞ்சேனையில் ஸ்டாலின் உருவாக்கிய ‘‘எளிய பச்சை மனிதர்கள்’’ என்ற பெயரிலான படைப்பிரிவினர். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
இதற்குத்தான் காத்திருந்தார்கள் இந்த பாலகுமாரர்கள்! ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களிலும், பேரங்களின் அடிப்படையில் கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆட்சியமைத்துவிட்டது பாஜக. உ.பி., உத்தரகண்ட் மாநிலங்களிலேயே கூடஅனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் அந்தக்கட்சி பெற்றுவிடவில்லை. சுமார் 39 சதவீத வாக்குகளோடும், தற்போதைய தேர்தல் முறையின் வசதியோடும்தான் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த முடிவுகளைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளும் மத்தியஅரசின் ஒரு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கேட்டுக்கொண்டிருக்கிறார். எந்த நடவடிக்கைக்கு அவர் இப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோருகிறார்? தொழிலாளர் துறை சீர்திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் இனிமேல் வேகம் கொடுக்கப்படும்; அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்கிறார். 245உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது பாஜக-வினர் 74 பேர்இருக்கிறார்கள்.இத்தேர்தல் முடிவுகளால் மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் அதிகரிக்கும் என்ற பின்னணியில் அமைச்சர் இப்படிக்கூறியிருக்கிறார். சீர்திருத்தங்கள் என தொழிலாளர்களுக்கு இணக்கமான பணிச்சூழல்கள், தங்கள் தேவைகளுக்காக வாதாடுவதற்கான ஜனநாயக உரிமைகள், எத்தகைய பணியானாலும் மரியாதையாக நடத்தப்படுதல், ஊதிய இடைவெளிகள் குறைப்பு, பணி நிரந்தரம் போன்றவற்றைஅவர் குறிப்பிடவில்லை.தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்கள் ஆட்குறைப்புச் செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத்தான் அவர் ‘சீர்திருத்தங்கள்’ என்கிறார். ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியிருப்பது ஒருகருத்தாக அல்ல; அடுத்த வாரம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் ஒன்று கூடவிருக்கிறது. அதில், புதிய தொழிலாளர் சட்டம் இறுதிப்படுத்தப்பட உள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கட்டாயமாக்குவது குறித்து ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட போராட்டத்தின் பலனாக இம்முடிவு எட்டப்பட்டிருப்பதைத் தொழிலாளர்கள் கொண்டாடுவதற்கு முன்பாகவே, ஆட்குறைப்பை எளிதாக்குவதற்கான ஏற்பாட்டை, நிர்வாகங்களுக்கு செய்துகொடுக்க முன்வருகிறது மோடி அரசு.பெரும்பாலான நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை புகுத்தப்பட்டு, அவர்களது பல உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இருக்கிற நிரந்தரத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்குத் தற்போதைய சட்டங்கள் குறுக்கே நிற்பதாக கார்ப்பரேட் கனவான்கள்புலம்புகிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பைநிறைவேற்றுவது உட்பட பல்வேறு மக்கள்விரோத நடவடிக்கைகளைத் தற்போதுமாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளால் தடுக்க முடிந்திருக்கிறது. அந்தத் தடை இனி இருக்காது என்ற களிப்பில் பாஜக அரசும் கார்ப்பரேட் இல்லங்களும் இருப்பது வெளிப்படை. உழைப்பாளி மக்களும் தொழிற்சங்கங்களும் இந்தத் தாக்குதலை முறியடிக்கத் தயாராக வேண்டும். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
அம்பாசமுத்திரத்தில் சிஐடியு பீடித் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி,மார்ச் 16-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிஐடியு பீடி தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.கணேஷ் பீடி கம்பெனி நிர்வாகம்பீடி தொழிலாளர்களின் சம்பளத்தை பீடிதொழிலாளர்களின் கைகளில் நேரிடையாக வழங்க வேண்டும்,சட்டவிரோத கதவடைப்புக்கான சம்பளத்தை நீதிமன்ற தீர்ப்பின் படி வழங்கிடுக,மட்டமான மற்றும் கழிவு இலைகளை வழங்காமல் 1000 பீடி சுற்ற 700கிராம் தரமான இலைகளை வழங்கிட வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தப்படி முதல் அரியர்ஸூடன் ஒரு தொழிலாளிக்கு ரூ.6,400 தொகையை வழங்கிட வேண்டும்போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டாரதுணை தலைவர் பூங்கொடி தலைமைதாங்கினார் ,நிர்வாகிகள் முத்துமாரி,லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை சிஐடியு பீடிதொழிலாளர் சங்க நிர்வாகி கே.மாரிச்செல்வம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல்முருகன் நிறைவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் சுடலைமணி, சுரேஷ்,ஜெகதீஸ் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Labels:
THEEKATHIR
டெங்கு, பன்றிக்காய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை தேவை: மாநகராட்சி அலுவலகம் முன் வாலிபர் சங்கம் ஆர்ப்பாடடம் தூத்துக்குடி,மார்ச் 16-தூத்துக்குடியில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூறுக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிலருக்கு பன்றிக் காய்ச்சல்அறிகுறி உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. புதனன்று மட்டும்40க்கும் மேற்பட்டோர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 10க்கும் மேற்பட்டகுழந்தைகள்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு டெங்கு, பன்றிக் காய்ச்சலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகர செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அகற்றிடவும், கொசு மருந்துகளை அனைத்து தெருக்களிலும் அடித்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தூத்துக்குடி அண்ணாநகர், பிரையண்ட் நகர், லெவிஞ்சிபுரம், லோகியாநகர், பி அன் டி காலனி, கோக்கூர், முத்தம்மாள் காலனி, அம்பேத்கர் நகர் பகுதியில் கூடுதலாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. உடனடியாக தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாநகர தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாநகரக்குழு, கிளை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
Wednesday, March 15, 2017
மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணி கோரி ஆர்ப்பாட்டம் சென்னை, மார்ச் 15- மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு நிரந்தர மாற்றுப் பணி வழங்கக் கோரி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று (மார்ச் 15) அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதுகுறித்து தலைவர் எஸ்.அப்புனு செய்தியாளர்களிடம் கூறியதாவது:டாஸ்மாக் நிர்வாகம் அரசின் முடிவின்படி 1000 கடைகளை மூடியது. அங்கு பணியாற்றிய ஊழியர்களுக்கு மற்ற கடைகளில் பணியமர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தாலும், மாவட்ட நிர்வாக மேலாளர்கள் அதை செயல்படுத்துவதில்லை. தன்னிச்சையாக விருப்பு வெறுப்பு அடிப்படையில் இடமாற்றம், கடை மாற்றம் செய்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.1000 கடைகளில் பணியாற்றிய ஊழியர்களின் பணியை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். 11 வருடங்களாக பணியாற்றி வந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. டான்சி நிர்வாகம் மூடப்பட்ட போது முதன்மை அடிப்படையில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது. அதுபோல் டாஸ்மாக் நிர்வாகம் தொழிற்சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி மற்ற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை இந்த ஊழியர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பணிவரன்முறை, காலமுறை ஊதியம், தொழிலாளர் நலச் சட்டங்களை அமலாக்க வேண்டும், சர்வீஸ் ரெக்கார்டுகளை உருவாக்க வேண்டும், சம்பளம் உள்ளிட்ட அனைத்திற்கும் ரசீது வழங்க வேண்டும், கடைகளின் அளவுக்கேற்ப சரக்குகளை அனுப்ப வேண்டும், பணிமூப்பு பட்டியலை இடஒதுக்கீடு அடிப்படையில் உருவாக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.பொதுச் செயலாளர் மா.அ.சரவணன், தென்சென்னை சிஐடியு தலைவர் இ.பொன்முடி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் இ.அன்பு, என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Labels:
THEEKATHIR
நல்முத்தை இழந்துவிட்டோம்! இந்திய உயர் கல்வி நிலையங்களில் நிலவிவந்த பாரபட்சமான அணுகுமுறை மீண்டும் தலைவிரித்தாட துவங்கியிருக்கிறது. சமத்துவம், சமநீதிகோரியதற்காக ரோஹித் வெமுலாவை தொடர்ந்து, தற்போது சேலம் தலித் மாணவர் முத்துகிருஷ்ணனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கிறது. இது உயர் கல்வி நிலையங்களா? சமத்துவம் பேசும்சாமானியர்களின் உயிர் பறிப்பு நிலையங்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மத்தியில் மோடி தலைமையிலான பாஜகஆட்சி பொறுப்பேற்ற பின்னர், மத்திய பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு திட்டமிட்டு விரிவுபடுத்தப்படுகிறது. குறிப்பாக ஏபிவிபி என்ற பாஜகவின் மாணவர் அமைப்பு மூலம் கல்வி நிலையங்களை காவி நிலையங்களாக்கும் முயற்சி தொடர்கிறது. இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் மோடி அரசு திட்டமிட்டு மநுநீதியை போதிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்களையே துணைவேந்தர்களாக நியமித்துவருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்போது துணைவேந்தராக இருக்கும் ஜகதீஸ்குமார் ஆர்எஸ்எஸ் அமைப்பால்பயிற்று விக்கப்பட்டவரே. ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் மதவெறிக்கெதிராக குரல் கொடுத்து வந்த நஜீப் என்ற மாணவர் காணாமல் போயிருக்கிறார். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்த பின்னரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதே போல் தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த திருப்பூர் மாணவர் சரவணன்மர்மமான முறையில் மரணித்தார். அதனை தற்கொலை என்று காவல்துறை அடித்து கூறியது.எய்ம்ஸ் நிர்வாகமும், சரவணனின் மரணத்தை தொடர்ந்து அந்த காலியிடத்தை உயர் வகுப்பை சேர்ந்த ஒரு மாணவிக்கு ஒதுக்கியது. ஆனால் சரவணனின் மருத்துவ உடற்கூறாய்வில் ஊசிமூலம் நச்சு மருந்து ஏற்றப்பட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. எனினும் இதுவரைசரவணனின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. மத்திய அரசின் இது போன்ற அக்கறையற்ற போக்கு உயர் கல்வி நிறுவனங்களில் அடித்தட்டுமாணவர்களுக்கு இடம் கிடையாது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறதோ என்ற சந்தேகம்தான் எழுகிறது. காரணம் ஜேஎன்யுவின் சமீபத்திய மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பாதகமாக பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்கிற்கு ஒரு மதிப்பு என்கிற என்ற இலக்கை அடைந்து விட்டோம். சமூகத்தில் பொருளாதாரத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்ற இலக்கை நாம் அடையவில்லை. இந்த முரண்பாடை களைந்தால் தான் இந்தியாவிற்கு நன்மை என்று 1949ல் டாக்டர் அம்பேத்கர் தெரிவித்தார். ஆனால் இன்றுவரை ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்பது மறுக்கப்பட்டு வருகிறது. இதன் வெளிப்பாடுதான் உயர்கல்வி நிலையங்களில் இன்று நடைபெறும் வன்கொடுமைகளுக்கும், மாணவர்களின் தற்கொலைகளுக்கும் அடிப்படைக் காரணம். முத்துகிருஷ்ணனின் மரண பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு மத்தியஅரசு உத்தரவிட வேண்டும். மரணத்திற்கு காரணமாக இருந்த தனி நபர் மற்றும் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னணியில் இருக்கும் சாதியத்தின் சல்லிவேரையும் அகற்றியாக வேண்டும். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
Tuesday, March 14, 2017
சோவியத்தில் டாக்சி டிரைவரைக் கவர்ந்த திருக்குறள் ட தி.வரதராசன் ரஷ்ய நவம்பர் புரட்சியை ஓராண்டுக் காலம் கொண்டாடும் இவ்வேளையில், உலகில் ஆறிலொரு பகுதியாய்த் திகழ்ந்த அந்த மிகப் பிரம்மாண்டமான ஐக்கிய சோவியத் சோஷலிச குடியரசு (ருளுளுசு) தேசத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம். ஐரோப்பா கண்டத்தின் ஒரு பகுதியும் ஆசியா கண்டத்தின் ஒரு பகுதியுமாக இணைந்து ஒரே தேசமாக விளங்கி வாழ்வாங்கு வாழ்ந்த - புதிய ருஷ்யா என மகாகவிகள் பாரதியும் ரவீந்திரநாத் தாகூரும் போற்றிய சோவியத் நாடெனும் திருநாட்டை மீண்டும் ஒருமுறை நம் மனபீடத்தில் ஏற்றி நினைத்துப் பார்க்கிறோம்... உலகில் மனிதகுல வரலாற்றில் உழைப்பவர் அரசு முதல் துவக்கமாக அமைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ஆளுகை புரிந்த ஒப்புமையில்லா ஒரு வரலாற்றை மறக்க முடியுமா? இன்று அங்கே சோவியத் அரசு இல்லை தான். ஆனால், அந்த 75 ஆண்டுகள் என்பது எதிர்வரும் ஒருகாலத்தில் உலகமே சோஷலிச பூமியாக மலர்ந்திட காலம் நடத்திப்பார்த்த ஓர் ஒத்திகை என்பதை மறுக்க முடியுமா?போரற்ற - அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலற்ற உலக சமாதானத்தின் தூதுவனாகவும், இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் உற்ற நண்பனாகவும் விளங்கியதையும், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம், தேசப் பாதுகாப்பு எனப் பன்முக ஒத்துழைப்பும் பரிமாற்றமும் இந்திய - சோவியத் நாடுகளுக்கிடையே ஆத்மார்த்தமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்ததையும் - அந்த இனிய நாட்களை - இன்று மறக்க முடியுமா? இவற்றைப் போல இலக்கியத்துறையிலும் நாம் காணமுடியும்.பழங்கால இலக்கியங்கள் தொட்டு அண்மைக்கால இலக்கியங்கள் வரையிலும் உள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய இலக்கியங்கள் பலவும் பெரும் பதிப்புகளாக சோவியத் நாட்டில் வெளியிடப்பட்டதைப் போல உலகில் வேறு எந்த நாட்டிலும் வெளியிடப்பட்டது உண்டா?புஷ்கின், லியோ டால்ஸ்டாய், அலெக்ஸி டால்ஸ்டாய், மக்சிம் கார்க்கி, ஷோலக்கோவ், ஆன்டன் செக்காவ், மாயாகோவ்ஸ்கி முதலான இலக்கிய மேதைகளைப் பெற்ற ரஷ்ய தேசம் நம் இந்திய தேசத்தோடு கொண்டிருந்த கல்வி-கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தின் காரணமாக நமது பழங்காலத் தமிழ் இலக்கியங்களும், பிற இந்திய மொழிகளின் இலக்கியங்களும் சோவியத் ரஷ்யாவில் ஏராளமாய் வெளியிட்டுப் பிரபலப்படுத்தப்பட்டன. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’ என மகாகவி பாரதி உரைத்த அந்தப் பெரும் புலவர்களின் படைப்புகள் ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து சோவியத் மக்களுக்கு வழங்கப்பட்டன. திருக்குறள் ரஷ்ய மொழியில் வசனநடையில் வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு மூலவடிவத்திலேயே - ஈரடி குறள் வெண்பா வடிவத்திலேயே திருக்குறள் வெளியிடப்பட்டது. இப்ராகிமோவ் என்ற சோவியத் அறிஞர் திருக்குறளை செய்யுள் நடையில் மொழிபெயர்த்தார். சோவியத் மக்களைத் திருக்குறள் மிகவும் கவர்ந்தது. திருக்குறள் நூலை ஆர்வத்துடன் படித்த ஒரு டாக்சி டிரைவர் தம்முடன் அதுபற்றிப் பேசியதைத் தமிழறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் தமது சோவியத் பயணக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.குற்றம்புரிந்த மன்னனை எதிர்த்து நேருக்குநேர் நின்று நீதியுரைத்த வீரப்பெண்மணி கண்ணகியின் காவியமாக இளங்கோவடிகள் படைத்த நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும் சோவியத் நாட்டில் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. அறிஞர் கிளாஷோவ் இக்காப்பியத்தை உரைநடையில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.1917 நவம்பரில் வெடித்த ரஷ்யப் புரட்சியை “ஆஹாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி” என்று உலகிலேயே முதன்முறையாக வாழ்த்தி வரவேற்றுப் பாடிய முதல்கவிஞன் என்ற முறையில் சோவியத் அறிஞர்களிடமும் மக்களிடமும் பாரதிக்குத் தனி மரியாதை உண்டு. டாக்டர் செம்பியன் ஜி. ரூதின் சோவியத் பல்கலைக் கழகங்களில் பாரதியின் படைப்புகள் பற்றிய விரிவுரைகளை நடைமுறைப்படுத்தினார். பாரதியின் பாடல்களை வெளியிடுவதிலும் அவர் முக்கிய பங்காற்றினார். ரூதின் என்ற அந்த அறிஞர் தம் பெயரை செம்பியன் என்று தமிழில் வைத்துக்கொண்டு ஆற்றிய தமிழ்ப் பணி - தமிழ்த் தொண்டு தமிழ் அறிஞர்களாலும் கல்வியாளர்களாலும் இலக்கியவாதிகளாலும் மறக்க இயலாதது. செம்பியன் லெனின் கிராடு பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரது கூட்டு உழைப்பில் 38 ஆயிரம் சொற்கள் கொண்ட தமிழ் - ரஷ்ய அகராதி உருவானது.சிமிர்நோவா என்ற அறிஞர் பாரதியின் தேசியப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, சக்திப் பாடல்கள் ஆகியவற்றை ரஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். பாரதி பாடல்கள் தொகுப்பு வெளிவந்த சில நாட்களிலேயே அத்தனைப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்ட முதல் கவிதைநூல் பாரதியின் கவிதை நூலே. டாக்டர் எம்.எஸ்.ஆந்திரனோவ், டாக்டர் வி.ஏ.மகரெங்கோ, டாக்டர் வி.பி. பூர்னிகா முதலான 12 சோவியத் அறிஞர்கள் மகாகவி பாரதியைப் பாராட்டி எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு 1982-இல் பாரதியின் பிறந்த தின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சோவியத் தமிழறிஞர்களின் காணிக்கையாக வெளிவந்தது.பியாதிகோர்ஸ்கி என்ற சோவியத் அறிஞர் தமிழ்நாட்டுப் பழங்கதைகள் என்ற பெயரில் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் திருவிளையாடல் புராணம், சுந்தரர், மாணிக்கவாசகர், மணிமேகலை, கோவலன்-கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆகியோரைப் பற்றி எழுதியிருந்தார். ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்ற நூலும் ரஷ்ய மொழியில் வெளிவந்தது. லெனின் கிராடு, மாஸ்கோ பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்கும் ரஷ்ய மாணவர்கள் பத்துப்பாட்டு, பெரியாழ்வார், மாணிக்கவாசகர், பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மு.வரதராசனார், புகழ்பெற்ற எழுத்தாளர்களான கல்கி, அகிலன் ஆகியோரின் படைப்புக்களைத் தங்கள் ஆய்வுக்கென எடுத்துக் கொண்டனர்.மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ரஷ்ய மாணவர்களுக்குத் தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் கற்றுத்தந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் அல்ல; தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி! இவர் “ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட கவிதைகள்” என்ற ஒரு தொகுப்பை எழுதி வெளியிட்டார். இதில் மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணைப் பாடல்கள் இடம்பெற்றன. பழங்கால, இடைக்காலத் தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல, அண்மைக்காலத் தமிழ் இலக்கியங்களும் சோவியத் மக்களிடம் புகழ்பெற்று விளங்கின.புதுமைப்பித்தன். கு.அழகிரிசாமி, கி.வா.ஜகந்நாதன், ஜெயகாந்தன், தொ.மு.சி.ரகுநாதன், பி.எஸ்.ராமையா, லட்சுமி ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. புதுமைப்பித்தனின் 23 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ஒன்று ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. சோவியத் நாட்டில் வெளியிடப்பட்ட “நண்பர்களின் குரல்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் பாரதியார், ச.து.சு.யோகியார், ப.ஜீவானந்தம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.டாக்டர் ஆந்திரனோவ் எனும் சோவியத் அறிஞர் இந்திய மொழிகளைப் பற்றி 140 நூல்களும், ஆய்வுரைகளும் எழுதியுள்ளார். தற்கால, பழங்காலத் தமிழ்மொழி இலக்கணம் என்ற இவரது ஆய்வு நூலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1973-இல் முதல்பரிசு வழங்கிக் கௌரவித்தது. ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாயுடன் நமது மகாகவி ரவீந்திரநாத் தாகூரை ஒப்பிட்டு “இந்தியாவின் டால்ஸ்டாய்” என்று புகழ்ந்துரைத்தனர் ரஷ்ய மக்கள். 1919-ஆம் ஆண்டு வெஸ்ட்னிக் ஜிழ்னி என்ற ரஷ்யப் பத்திரிகையில் ட்ரோயனோவ்ஸ்கி என்ற அறிஞர் இந்தியாவின் டால்ஸ்டாய் என்ற தலைப்பில் தாகூரின் மனிதநேயம் குறித்து கட்டுரையொன்று எழுதியிருந்தார்.(இந்த இரு வெண்தாடி வேந்தர்களின் முகத்தோற்றத்தைப் பார்த்தால்கூட அப்படித்தான் சொல்லத் தோன்றும்!) சோவியத் எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுவந்த “சோவியத் லிட்டரேச்சர்” என்ற ஆங்கிலக் கட்டுரைகள் ஏட்டின் 1961 வது ஆண்டின் 5-வது தொகுப்பில் “ரவீந்திரநாத் தாகூரும் ரஷ்ய வாசகரும்” என்ற தலைப்பில் லியோனிட் காமாயுனோவ் எழுதிய கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. அதில் தாகூரின் வாழ்க்கையும் அவரது படைப்புகளும் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது.தாகூரின் நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி நூல் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டதுடன் அவரது புகழ் சோவியத் நாடெங்கும் பரவியது. தாகூரின் படைப்புகள் ஆங்கில மூலத்திலிருந்து மட்டுமல்ல, வங்காளி மூலத்திலிருந்தும் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டன. கிட்டத்தட்ட சோவியத் நாட்டின் அனைத்து மொழிகளிலும் தாகூரின் படைப்புகள் வெளியிடப்பட்டன. 1955 - 57 ஆம் ஆண்டுகளில் தாகூரின் படைப்புகள் எட்டுத் தொகுப்புகளும், அடுத்து 12 தொகுப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. சோவியத் நாட்டில் தாகூரின் நூல்கள் பல லட்சம் பிரதிகள் வெளியிடப்பட்டன. http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
Subscribe to:
Posts (Atom)















