SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Showing posts with label TARIGAMI. Show all posts
Showing posts with label TARIGAMI. Show all posts

Monday, March 6, 2017

தொழிலாளர் துயரங்களை உணராத காஷ்மீர் அரசு சிபிஎம் கண்டனம் ஸ்ரீநகர், மார்ச் 6- தொழிலாளர்களின் துயரங்களை உணராத ஜம்மு - காஷ்மீர் அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த சில நாட்களாக தேசிய சுகாதாரத் திட்ட ஊழியர்கள் (சூழஆ) போராடி வருகின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்கள் பெருமளவில் தேசிய சுகாதாரத்திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.தொழிலாளர்களின் பணி நிலை முறைப்படுத்தப்பட வேண்டும், முறைப்படுத்தப்படாத பணிநிலையிலும் முறையான, சட்டரீதியான ஊதியம் வழங்கப்படாத நிலையிலும் கடும் பணிச்சுமையில் இத்திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.இத்திட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிலையோடு ஒப்பிடும்போது, ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் ஊழியர்கள் முறைசாரா தொழிலாளர்கள் போன்ற நிலையில் உள்ளனர். மூன்றில் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கணிசமான தொழிலாளர்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். இதைத்தொடர்ந்து மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று போராடும் தொழிலாளர்களின் துயரங்களை அரசு உணர மறுத்து வருகிறது.இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்ரீநகரில் மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர். ஆனாலும் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் போராடும் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் குல்காம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் உச்சநீதிமன்றம் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்று நேரடி உத்தரவை வழங்கியுள்ளது. ஆனால் தேசிய சுகாதாரத்திட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச நீதி கூட வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.கிராமப்புற சுகாதாரத்திட்டப் பணிகள் மிக மோசமாக முடங்கியுள்ளன. போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்களின் உணர்வுகளை துயரங்களை உணராத அரசாகவும் முரட்டுத்தனமான அணுகுமுறையை கையாண்டு போராட்டத்தை ஒடுக்கவும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு முயற்சித்து வருவதற்கு முகமது யூசுப் தாரிகாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக போராடி வரும் தேசிய சுகாதாரத்திட்ட பணியாளர்களுக்கு நேரில் சென்று ஆதரவினையும் தெரிவித்தார். http://epaper.theekkathir.org/