SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Showing posts with label SRILANKA. Show all posts
Showing posts with label SRILANKA. Show all posts

Tuesday, March 7, 2017

இளம் மீனவர் சுட்டுக் கொலை இலங்கை கடற்படை அட்டூழியம் சென்னை, மார்ச் 7 - தமிழகத்தைச் சேர்ந்த இளம் மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையொட்டி, இராமேஸ் வரம், புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட் டத்தில் இறங்கியுள்ளனர்.குறிப்பாக, தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட்ஜோ-வின் உடலை வாங்க மறுத்து அங்குள்ள மீனவர் கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலவரையற்ற உண் ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி,மீனவர்கள் பாதுகாப்புக்கு உறுதியளித்தால் மட்டுமே உடலைப் பெறுவோம்; அதுவரை தங்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள மீனவர்கள், பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என் றும் வலியுறுத்தியுள்ளனர். வாடிவாசல் மற்றும் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவுகொடுத்த தமிழக இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது உரிமைப் போராட் டத்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, திங்கட்கிழமையன்று 442 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இரவு 10 மணியளவில் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தங்கச்சிமடத்தைச் சார்ந்த டிட்டோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பிரிட்ஜோ, ஜெரோன், அந்தோணி, கிளிண் டன், சாம் பிரிட்ஜோ, ரிமோட்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு 5 ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற் படையினர், நான்கு வாட்டர் ஸ்கூட்டர் பைக்குகள் மூலம் தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பிரிட்ஜோ (21) என்றமீனவரின் கழுத்தில் குண்டடிப் பட்டு, அவர் மயங்கி விழுந்தார்.படகின் ஓட்டுநரான ஜெரோனுக்கு தொடையில் காயம் ஏற் பட்டது. காயங்களுடன் இலங்கை படையினரிடமிருந்த தப்பிய மீனவர்கள், இந்திய கடலோரக் காவல்படையினரை உதவிக்காக தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் கடலோரக் காவல்படையின் உதவி கிடைக்கவில்லை. இதனால் காயத்துடனேயே ஜெரோன் படகை கரைக்கு கொண்டு வந்துள்ளார்.ஆனால், கரையை அடைவதற்கு முன்பே, பிரிட்ஜோவின் உயிர் பிரிந்தது. மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும், இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் இரவு 11 மணியிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கூடத் தொடங்கினர். அவர்கள், நள்ளிரவு 12 மணிக்கு வந்த, பிரிட்ஜோவின் உடலைப் பார்த்து கதறித் துடித்தனர். பின்னர் பிரிட்ஜோவின் உடல் இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. காயமடைந்த மீனவர் ஜெரோனுக்கு இராமேஸ்வரம் மருத்துவமனையில் முதலுதவிஅளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக் காக இராமநாதபுரம் தலைமைமருத்துவமனையில் சேர்க்கப்பட் டார்.இதனிடையே, செவ்வாய்க் கிழமை காலையில் பிரிட்ஜோவுக்கு உடற்கூராய்வு நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயற் சித்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்புதெரிவித்த மீனவர்கள், துப்பாக் கிச் சூடு சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் என்று கூறிவிட்டனர்.மேலும், உடனடியாக தங்கச்சிமடத்தில் அவசரக் கூட்டம் ஒன்றைநடத்திய விசைப்படகு மீனவர்கள்,மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது; அத்துடன், மார்ச் 11, 12 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பது என்றும் அறிவித்தனர்.மேலும், மத்திய அமைச்சர் கள் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகமீனவர்களின் பாதுகாப்புகளுக்கு உத்தரவாதம் அளிப்பதுடன், பிரிட்ஜோவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கும்வரை, தொடர்ச்சி 3ம் பக்கம் http://epaper.theekkathir.org/