SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Showing posts with label SIVKASI. Show all posts
Showing posts with label SIVKASI. Show all posts

Saturday, March 11, 2017

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து 5 தொழிலாளர்கள் பலி சிவகாசி, மார்ச் 11- சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசி அருகே உள்ளது வெற்றிலை யூரணி. இங்கு சிவகாசி மணிநகரைச் சேர்ந்த சக்தி சண்முகம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் சுமார் 100 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம் போல சனிக்கிழமையன்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். காலை 11 மணிக்கு பட்டாசுகளுக்கு ரசாயனக் கலவை செலுத்தும் அறையில் திடீரென உராய்வு ஏற்பட்டதில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் வெடித்துச் சிதறியது. மேலும் தீயானது கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த பட்டாசு தயார் செய்யும் அறைகளுக்கும் பரவியது. இதில் மேலும் 3 அறைகள் வெடித்துச் சிதறின. 5 பேர் உயிரிழப்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், மண் அள்ளும் எந்திரம் வரவழை க்கப்பட்டு, இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி, வெற்றலையூரணியைச் சேர்ந்த இன்னாசி முத்து மகன் பவுல்ராஜ்(45), அதேபகுதியைச் சேர்ந்த தங்கம் மகன் சண்முகவேல் (45), சங்கர்குட்டி மனைவி முருகேஸ்வரி(21), ஆபிரகாம்மனைவி கலாராணி(35), கீழக் கோதைநாச்சி யார்புரத்தைச் சேர்ந்த முனியசாமி மனைவி விஜயா(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்டு, காவல்துறையினர் உடற்கூறாய்வு சோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். படுகாயம் மேலும் இந்த விபத்தில், ஒண்டிவீரன் காலனியைச் சேர்ந்த காளிமுத்து மனைவி பார்வதி(34), பவுல்ராஜ் மனைவி இளவரசி (19), வெற்றிலையூரணியைச் சேர்ந்த கண்ணன் மகன்சங்கரமூர்த்தி(45), அய்யச்சாமி மனைவிஅனந்தம்மாள், கீழக்கோதை நாச்சியார்பு ரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி செல்வி ஆகியோர் படுகாயமடைந்தார். இதில்செல்வி, தாயில்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மற்ற 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோட்டாட்சியர் ஆய்வு விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் சிவகாசி கோட்டாட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜ ராஜன், பட்டாசு-தீப்பெட்டி தனி தாசில்தார், சல்வார்பட்டி வருவாய் ஆய்வாளர் உட்பட பலர் ஆய்வு மேற்கொண்டனர். சிஐடியு-சிபிஎம் தலைவர்கள் ஆறுதல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சிஐடியு-பட்டாசு - தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் பி.பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெம்பக் கோட்டை ஒன்றிய செயலாளர் எம்.சுந்தர பாண்டியன், முன்னாள் வாலிபர் சங்கத் தலைவர் ஜானகிராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சதுரகிரி ஆகி யோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். http://epaper.theekkathir.org/