This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Saturday, February 25, 2017
தில்லி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி குண்டர்களை ஏவி வன்முறை வெறியாட்டம் ******************புதுதில்லி, பிப். 24- தில்லி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி குண்டர்களின் கொலைவெறியாட்டத்தால் ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். தில்லி காவல்துறையின் துணையோடு நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் சமூகமும்- இலக்கியமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆங்கிலத் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் பிப்ரவரி 22ல் நடைபெற இருந்தது. ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர்களான உமர்காலித் மற்றும் ஷீலாரஷித் ஆகியோரும் இந்த கருத்தரங்க அமர்வில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். உமர்காலித், மலைவாழ் மக்களின் வாழ்வியல் குறித்ததொரு தலைப்பில் உரையாற்றுவதாக இருந்தது. இந்நிலையில் கருத்தரங்கம் துவங்குவதற்கு முன்பாக, ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இக்கருத்தரங்கத்தை நடத்தவிடமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருத்தரங்கம் நடைபெற உள்ள அரங்கத்தின் அருகே கூச்சலிட்டனர்.இந்நிலையில் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், வழக்கமாக நடத்தப்படும் இந்த கருத்தரங்க அமர்வை சீர்குலைக்கும் நோக்கோடு, ஏபிவிபியை சேர்ந்தவர்களும் மாணவர் அல்லாத ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களும் இணைந்து சீர்குலைக்கின்றனர் என்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை அலுவலகத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளனர்.இந்நிலையில் ஏபிவிபி, ஆர்எஸ்எஸ் குண்டர்கள்தேசத்துரோகிகளை தில்லி பல்கலை.யில் அனுமதிக்கமாட்டோம் என உமர்காலித், ஷீலாரஷித் மற்றும் ஜேஎன்யுவிற்கு எதிராக கூச்சலிட்டனர். ஆங்கிலத்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் புகாரை பெற்றுக்கொள்ள தயாராக இல்லாத காவல்துறையை கண்டித்து அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.இதனால் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. தானே காவல்நிலையம் அருகில் ஜனநாயகமுறைப்படி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் அகில இந்திய மாணவர் கழகம்(ஏஐஎஸ்ஏ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ)அமைப்பினர் ஆங்கிலத்துறை மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர்எஸ்எஸ் குண்டர்களின் ஜன நாயக அத்துமீறலுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்த ஜனநாயக முறையிலான எதிர்ப்புணர்வை ஏற்றுக்கொள்ள முடியாத ஆர்எஸ்எஸ், ஏபிவிபி குண்டர்கள் திடீரென தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் மிக கடுமை யாக தாக்கப்பட்டனர். இங்கு நடைபெற்ற அத்துனைவன்முறை வெறியாட்டத்தையும், தில்லி காவல் துறை வேடிக்கை பார்த்தது. ஒரு கட்டத்தில் காவல்துறையினரும் சேர்ந்துகொண்டு பேராசிரியர் மற்றும் மாணவர்கள் மீது தடியடி பிரயோகத்தை நடத்தினர். இந்த திட்டமிட்ட வன்முறையில் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஜேஎன்யு தேசவிரோத கூடாரம், உமர்காலித் தேசவிரோதி, ஏஐஎஸ்ஏ, எஸ்எப்ஐ, தேசவிரோத அமைப்புகள் என்றும், இடதுசாரிகள் தேசவிரோதி கள் என்றும் ஏபிவிபியினர் கூச்சலிட்டனர்.இந்நிலையில் திட்டமிடப்பட்ட கருத்தரங்கம் நடைபெறவில்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக காவிக்கும்பல் நடத்திய வன்முறை மீது உரியவிசாரணை நடத்தி குற்றவாளிகளான ஏபிவிபி மற்றும்ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கைது செய்யப்பட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம், பல்வேறுகல்வியாளர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
Labels:
RSS/BJP