SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Sunday, March 5, 2017

ஏழை எளிய குழந்தைகளை பரிகசிக்கும் ‘ஆதார்’ முடிவு ******************************* ஆதார் அட்டை திட்டத்தை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவந்தபோதே மக்கள் மனங்களில் ஒரு பதற்றம் குடியேறியது. உணவு, கல்வி, மருத்துவம் என அனைத்தும் அது இருந்தால்தான் உறுதியாகும் என்று பேசப்பட்ட நிலையில், இத்திட்டத்தில் பதிவு செய்துகொள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாடப் பிழைப்பைத் துறந்து வரிசைகளில் நிற்க வேண்டியதாயிற்று. அந்நிய சக்திகள், குறிப்பாக அமெரிக்க உளவுத்துறையின் நோக்க ங்களுக்கு மக்களின் தனிப்பட்ட அடையாளத் தகவல்கள் கடத்தப்படும் என்ற எச்சரிக்கையை மன்மோகன் சிங் அரசு பொருட்படுத்தவில்லை. எனினும், அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையின்படி செயல்பட உறுதியளிக்கப்பட்டது.பிரதமர் வேட்பாளராக இருந்தபோது மிகக் கடுமையாக எதிர்த்த மோடி பதவிக்கு வந்ததும் காங்கிரஸ் ஆட்சியைவிட தீவிரமாகி எல்லா முக்கிய சேவைகளுக்கும் இன்று ஆதார் வற்புறுத்தப்படு கிறது. அண்மையில்,ரயில் பயணங்களுக்கு முன் பதிவு செய்யும் மூத்த குடிமக்கள், தங்களுக்கான கட்டணச் சலுகை யைப் பெற, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சில சான்றுகள் போதுமென்பது கைவிடப்பட்டு, ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை கட்டாயமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆதார் அட்டை இன்னும் குடிமக்கள் அனை வருக்கும் 100 விழுக்காடு வழங்கப்படாத நிலையில், இப்போது குழந்தைகளை -அதுவும் ஏழை எளிய குடும்பங்களின் குழந்தைகளை -குறி வைத்துவிட்டார்கள்.நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு பெறுகிற குழந்தைகள் ஆதார் அட்டை வைத்திருப்பதைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது நாடு முழுவதும் இத்திட்டத்தால் பயனடைகிற சுமார் 12 கோடி குழந்தைகளிடமிருந்து உணவுத் தட்டுகளைப்பறிக்கிற ஏற்பாடேயாகும். மதிய உணவுத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கிற சதியுமாகும். உச்சநீதிமன்றத்தின்ஆணையை ஒரு அதிகார ஆணவத்தோடுமீறுகிறது இம்முடிவு. திட்டத்தின் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மை யையும் மேம்படுத்தவே இந்த முடிவு என்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்ச கத்தின் விளக்கம் மோசடியானது. ஊட்டக் குறைவால் வளர்ச்சி தடைப்பட்ட குழந்தைகள், உலகத்திலேயே அதிகமாக சுமார் 7.20 கோடிப் பேர் உள்ள இந்தியாவில், அவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தால் கிடைக்கிற சோற்றிலும் கை வைக்கப்படுகிறது.பள்ளிக்கு வராத குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் உணவு பெறுவதைத் தடுக்கவே இந்த முடிவு என்பதாகவும் ஒரு விளக்கத்தை அமைச்சகம் கூறியிருக்கிறது. ஏழைக் குழந்தைகளை இதைவிடவும் அவமானப்படுத்திவிட முடியாது. தேவைப்படு கிற எல்லாக் குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கி, அவர்களுக்குப் படிப்பின் மீது படிப்படியாக ஆர்வம் ஏற்படுத்துகிற நோக்கம் பரிகசிக்கப்படுகிறது. பள்ளிக்கு வருகிற, வராத குழந்தைகள் அனைவரையும் பாதுகாக்கிற கடமையையும் மோடி அரசு கைகழுவுகிறது. இதை எதிர்த்து உணவு உரிமை இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் வழக்குத் தொடர வுள்ளன. உச்சநீதிமன்றம் தனது ஆணை மீறப்படுகிற இப்பிரச்சனையைத் தானாக முன்வந்து எடுத்துக்கொண்டு இந்த மோசமான நடவடி க்கைக்கு நிரந்தரத் தடை விதித்தாக வேண்டும். http://epaper.theekkathir.org/