This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 9, 2017
ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்.12-ல் இடைத்தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுதில்லி, மார்ச் 9 - ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார். இதையொட்டி, அவர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த டாக் டர் இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்றப் பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்டு உள்ளது.இதன்படி ஆர்.கே. நகர் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை மார்ச் 16-ஆம் தேதி வெளியிடப் படுகிறது. அன்றே வேட்புமனுத் தாக்கலும் துவங்குகிறது. மார்ச்23-ஆம் தேதி வரை வேட்புமனுக் களைத் தாக்கல் செய்யலாம். மார்ச் 24 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மார்ச் 27-க்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, ஏப்ரல் 15-ம் தேதி முடிவுஅறிவிக்கப்படும்.ஆர்.கே. நகருக்கு இடைத்தேர் தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சென்னை மாவட்டம்முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் சென்னை மாவட்டத்தில் அரசு திட்டங்களை அமல்படுத்தமுடியாது. மேலும், அமைச்சர் களின் பயணம், வாகன பிரச்சாரம்,விளம்பரம், அரசு விருந்தினர் மாளிகையை பயன்படுத்துதல், அதிகாரிகள் பணியிடமாற்றம் என எதையும் மாநில அரசு செய் யக்கூடாது.எனினும் மார்ச் 16-ஆம் தேதிகூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில், 2017-18 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு தடைஎதுவும் இல்லை என்று தேர்தல்ஆணையம் தெளிவுபடுத்தியுள் ளது.இடைத்தேர்தல் என்றாலே அதை ஆளுங்கட்சி தனது கவுரவப் பிரச்சனையாக பார்ப்பதும், ஆட்சி, அதிகாரம், பணம் என அத்தனையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவதும் தமிழகத்தின் கடந்த 20 ஆண்டுகாலக் காட்சியாக உள்ளன.ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக அதன் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தலைமையிலும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலுமாக இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. சசிகலா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராகி இருக்கிறார். இவர்களுக்கு இடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா என்ற அமைப்பைத் துவங்கி, ‘வாரிசு உரிமை’ கேட்கிறார்.இப்படிப்பட்ட புதிய சூழலில், தற்போது நடக்கும் ஆர்.கே. நகர் சட்டமன்றப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மிக மிகமுக்கியமான தேர்தலாக மாறியுள்ளது.3 மக்களவை, 12 சட்டப்பேரவைதமிழகத்தில் ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி உட்பட, நாடு முழுவதும் 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவை தொகுதிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அனந்தநாக் மக்களவைத் தொகுதிஉறுப்பினராக இருந்த மெகபூபா முப்தி, அண்மையில் மாநிலமுதல்வராக பதவியேற்றதையொட்டி, அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.காஷ்மீர் போராட்டக்காரர் களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ஹமீத் கரா என்பவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியாக இருந்த நிலையில், அனந்தநாக் தொகுதிக்கு ஏப்ரல் 9-ஆம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ஆம் தேதியும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கேரளத்தில் மலப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பிரான இ. அகமது, அண்மையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போதுமாரடைப்பால் காலமானதையொட்டி, மலப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 12-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, தமிழகம் உள் ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் சட்டப்பேரவைத் தொகுதிகள் விபரம் : தேமாஜி (அசாம்),போராஞ்ச் (இமாச்சலப்பிரதேசம்), பந்தவார்க் (மத்தியப்பிரதேசம்), காந்தி தஷ்கின் (மேற்குவங்காளம்), தோல்பூர் (ராஜஸ்தான்), நாஞ்சான்குட், குண்டல் பேட் (கர்நாடகா), லிதிபாரா (ஜார்கண்ட்), அப்பர் புர்டக் (சிக்கிம்), ஆர்.கே. நகர் (தமிழ்நாடு) ராஜவுரி கார்டன் (தில்லி). http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
