SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, March 13, 2017

மனிதகுலத்தின் கலங்கரை விளக்கம் நவம்பர் புரட்சிக்குப் பிறகான 67ஆவது ஆண்டில் நாங்கள் சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்தோம். தோழர் சுர்ஜித்தும், அவரது மனைவியும் வந்திருந்தார்கள். அவர்களோடு சென்றது எனக்கு என் பெற்றோரோடு சென்றிருந்த உணர்வைக் கொடுத்தது.இந்தப் பயணம் மேற்கொண்டு 33 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நினைவுகள் பசுமையாக உள்ளன. மாஸ்கோவுடன், தாஸ்கண்ட், வோல்கா கிராட், லெனின் கிராட் நகரங்களுக்கும், கருங்கடலின் கரையில் அமைந்த சோச்சி நகரத்திற்கும் சென்றோம். சோச்சி ஒரு அழகிய நகரம். சுற்றுலாக் காலங்களில் சோவியத் குடிமக்கள் வந்து குவியும் நகரம். சோசலிச நாட்டின் பிரத்யேகத் தன்மை என்னவென்றால், நமக்கு சொந்த நாடு போன்ற உணர்வை அது இயல்பாகவே கொடுக்கும்.மனிதகுல வரலாற்றில் சோசலிசப் புரட்சி ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்திருந்தது. தேசிய, சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்டி, தீர்வுகளைக் கொடுத்திருந்தது. தேசிய இனங்களின் ஒருமித்த வாழ்வுக்கான அடிப்படைகளையும் சோசலிசம் உருவாக்கியிருந்தது. கலாச்சார, பொருளாதார அடிப்படையிலான சமமற்ற நிலைமைகளை மாற்றினால்தான் அது நடைமுறையில் பிற்போக்குச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் என்பதை லெனின் அறிந்திருந்தார்.உஸ்பெக்கிஸ்தான் மக்கள் சமூகம் சோசலிசத்திற்கு மாற்றமடைந்தது, ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். அவர்களின் வாழ்க்கை முறையில் வேகமான மாற்றங்கள் ஏற்பட்டன. 17 லட்சம் மக்கள் தொகைக்கு - 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில், 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள்/ஊழியர்களும், உயர் கல்வி கற்க 42 கல்வி மையங்களும் இருந்தன. 227 தொழிற்கல்வி மையங்களில் 2,52,000 பேர் கல்வி கற்றார்கள்.1662 தொழிற்சாலைகள் இருந்தன, 7652 சிறு கடைகளும் உற்பத்தி நிறுவனங்களும் இயங்கின. 26 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் 1049 கூட்டுப் பண்ணைகள் இயங்கின. அவற்றில் உற்பத்தி இயந்திரமயமாக்கப்பட்டிருந்தது. உழைப்பாளர்களில் 43 சதவீதம் பெண்கள். கல்வியிலும், கலாச்சாரத் துறையிலும் பெண்களில் பங்கேற்பு 55.7 சதவீதம் இருந்தது. மருத்துவத் துறையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இருந்தனர். அரசில் 27 சதவீதமான பெண்கள் இருந்தார்கள். முழுமையான விடுதலையை எட்ட, மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு முடிவுகட்டும் போராட்டம்தான் சாத்தியமாக்கும் என்றார் உஸ்பெக்கிஸ்தான் பிரதமர் எங்களிடம்.வோல்காகிராடுக்கும், லெனின்கிராடுக்கும் சென்றபோது - அந்த நகரங்கள் எப்படி உள்நாட்டு யுத்தத்திலும், எதிர்ப் புரட்சி சக்திகளை வீழ்த்தும் போராட்டத்திலும் திருப்பு முனையாக அமைந்தன என்பது நினைவுக்கு வந்தது. 1924 ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம் லெனினின் நேரடித் தலைமையில் நடைபெற்றது. அந்த நகரத்தின் ஒவ்வொரு வீதியும் வீடும் ஏன் சுவரும் கூட போராடித்தான் பாதுகாக்கப்பட்டன. போர்களின் அழிவிலிருந்து மீண்டும் எழுப்பப்பட்டதுதான் வோல்காகிராடு. வீரம் செறிந்த போராட்டங்களின் நினைவகம் அங்கே இருக்கிறது. போர் முனையில் தியாகம் செய்த 7 ஆயிரத்து 200 வீரர்களின் பெயர்களை அது தாங்கியிருந்தது.சோசலிசக் கட்டுமானத்தின் மேன்மையை உணர்த்திய நாட்கள் அவை. அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு, தொழில், விவசாயம் மற்றும் சோவியத் அரசுக் கட்டுமானம் அனைத்திலும் அது பல தனித்துவங்களைப் பெற்று விளங்கியது. பெண்களின் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்பு வாசல்களும் திறக்கப்பட்ட சூழல் அங்கே இருந்தது.சோவியத்தில் நிலவிய சூழலைக் குறித்து மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் இந்தியா திரும்பினோம். பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் எங்கள் அனுபவங்களையும், நாங்கள் பார்த்தவைகளையும் குறிப்பிட்டு உற்சாகமான கட்டுரை எழுதினோம். சோவியத் யூனியனில் பணவீக்கமும், பொருளாதார நெருக்கடியும், அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கமோ இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். சோவியத் பொருளாதாரம் சீரான வளர்ச்சியைக் கண்டது. தேசிய வருமானம் 1982 ஆம் ஆண்டு வாக்கில் 2.8 சதவீதம் உயர்ந்திருந்தது. அதே காலகட்டத்தில் ஊதிய விகிதமும் 2.8 சதவீதம் அதிகரித்தது, கூட்டுப்பண்ணை விவசாயிகளின் வருமானம் 4 சதவீதம் அதிகரித்திருந்தது. சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் 4.8 சதவீதம் அதிகரித்தன. இது அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் மிகப்பெரும் தாக்கம் செலுத்தியது.இப்போது சோவியத் யூனியன் இல்லை.சோவியத் யூனியனின் பின்னடைவைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன. சோசலிச லட்சியத்தை உயர்த்திப்பிடித்து, அதனை நடைமுறையில் சாத்தியமும் ஆக்கிக் காட்டிய அதன் சாதனை மறுக்கக்கூடிய ஒன்றல்ல.இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு சோவியத் தொழில்நுட்ப உதவியும், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட நாடுகளுக்கு ராணுவ உதவியும். பொருளாதாரத் தடைகளில் சிக்குண்ட தேசங்களுக்கு மிக அத்தியாவசியமான உதவிகளும் வழங்கி, அந்த நாடுகளில் உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுக்க சோவியத் யூனியன் பங்களித்தது.குறிப்பாக இந்தியாவுக்கு செய்த உதவிகள் மகத்தானவை. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் சோவியத் அளித்த கொடை. இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் ‘உயிரா? மானமா? திரையிசைப் பாடலில் ‘‘நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு, நாங்கள் உமக்களித்தோம் நன்றியே’’ என்று எழுதியிருப்பார்.சோவியத் பின்னடைவைச் சந்தித்ததைப் பற்றி இப்போது பேசுவோர், அது உலக மக்களுக்காக செய்த ஆகப்பெரும் தியாகங்களை மறந்துவிட்டுப் பேச முடியாது. மிகப் பின்தங்கிய நிலையில், ஜாரின் சுரண்டலுக்கு ஆட்பட்டிருந்த ஒரு ஏழை தேசம், சோசலிசப் பாதையில் உலகுக்கே வழிகாட்டிய ஒரு கதாநாயகனாக வீறுநடை போட்டது. மனித குலத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்கு, அது எப்போதும் ஒரு கலங்கரை விளக்கமாகும். http://epaper.theekkathir.org/