This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Saturday, March 18, 2017
74 நாடுகளில் பறந்த காலனி ஆதிக்கக் கொடி கீழிறக்கப்பட்டது ட ஏ.எஸ்.மூர்த்தி இரண்டாவதுஉலக யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியானது, ஏகாதிபத்தியத்திற்கும் காலனியாதிக்கத்திற்கும் கிடைத்த ஒரு பேரடியாகும்; அரசியல், சித்தாந்த ரீதியில் அவை அடைந்த ஒரு பெரும் தோல்வியாகும் அது. அந்தச் சக்திகளது உலகாதிபத்தியம் முடிவு பெற்றது. உலகை மறு கூறு போடுவதற்காக ஏகாதிபத்தியம் நடத்திய முதலாவது உலக யுத்தத்தின் இறுதியில், சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதுதான் ரஷ்யாவில் 1917ல் நடைபெற்ற அக்டோபர் சோசலிசப் புரட்சி! அன்றிருந்த உலகநிலையின் எல்லா அம்சங்களையும் மாற்றி அமைக்க முற்பட்ட அது, அன்று வரை எதிர்ப்பாரின்றிக் கோலோச்சி வந்த சுரண்டல் சக்திகள் அனைத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. வழி வழியாக, கால காலமாக, மாறாத நெறிமுறை என்று கருதப்பட்டு வந்த முதலாளித்துவ அமைப்பு பெற்றெடுத்த அத்தனை தீமைகளிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும், சமூகத்தை விடுவித்தது அது.புதியதொரு தொழிலாளர் அரசின் தோற்றம், காலனி அமைப்பையே நெருக்கடிக்குள்ளாக்கிற்று. காலனியாதிக்கத்தின் கீழ் பல்லாண்டு காலம் செய்வதறியாது உழன்று கொண்டிருந்த மக்கள், உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தனர். ஜார் மன்னனது கொடுங்கோல் ஆட்சியைச் சட சடவெனச் சரித்து, ‘அடிமைக்குத் தளையில்லை, யாருமிப்போதடிமையில்லை’ என்று முழங்கிய ரஷ்யத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிக் குரல், உலகெங்கணும் பரவிற்று. ஏகாதிபத்தியம் கட்டிக்காத்து வந்த காலனி, அரைக் காலனி நாடுகளிலுள்ள மக்களுக்குத் தாங்களும் போராடலாம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசிய எழுச்சி பற்பல நாடுகளிலும் வலுப்படத் தொடங்கிற்று.வெகு ஜனங்களின் விழிப்புணர்வு கூர்மையடைய சோஷலிசப் புரட்சி உதவிய அதே நேரத்தில், தொழிலாளர் அரசு ஒன்றின் உதயத்தையும், அது காலூன்றி நிற்பதையும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ உலகால் சகிக்க முடியவில்லை.அதன் விளைவாகவே, மத்திய ஐரோப்பாவில், பாசிசம் எனும் நச்சுப்பாம்பு படமெடுத்தாடத் தொடங்கிய 30ம் ஆண்டுகளில் ‘தமக்குள் எத்தனை முரண்பாடுகளும், போட்டிகளும் இருந்த போதும், பாசிஸ்டு ஜெர்மனியைப் பயன்படுத்தி சோவியத் யூனியனை அழித்துவிடலாம் என்ற திட்டத்தில், அவர்கள் எல்லோருமே சேர்ந்து, பாம்பிற்குப் பால் வார்க்கும் பணியில் ஈடுபட்டனர். எப்படியாவது ஹிட்லரை சோவியத் யூனியனைத் தாக்கச் செய்ய வேண்டுமென்று பிரிட்டனும், பிரான்சும் பெருமுயற்சிகள் மேற்கொண்டன; அம்முயற்சிகளுக்கு நல்லாசிகளை வழங்கியதுடன் நில்லாமல், அமெரிக்கா, கிழக்கே ஜப்பானை, சோவியத் யூனியனுக்கெதிராக படையெடுக்குமாறு தூபம் போட்டுக் கொண்டிருந்தது.அப்படி நடைபெற்ற இரண்டாவது உலக யுத்தத்தின் முடிவு என்ன என்பது அனைவரும் அறிந்ததே. ஏகாதிபத்தியவாதிகள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சோவியத் செஞ்சேனை வீரர்கள், ஹிட்லரது படைகளை அவர் தம் தலைவன் ஹிட்லரது பாதாளக் கிடங்கு வரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடினர்; யுத்தத்தில் புடம் போடப்பட்டு எழுந்த சோவியத் யூனியன், பலம் பொருந்திய ஓர் அரசாக ஜொலித்தது.முதலாவது உலக யுத்தத்திற்குப் பின்னர், மிகப்பெரும் நாடான ரஷ்யா, ஏகாதிபத்தியப் பிடிப்பிலிருந்து சோஷலிசத்திற்குச் சென்றது என்றால், அடுத்த உலக யுத்தத்தின் இறுதியில், அரைடஜன் ஐரோப்பிய நாடுகள் அவ்வாறே சென்றுவிட்டன. இரண்டாவது உலக யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியானது, ஏகாதிபத்தியத்திற்கும் காலனியாதிக்கத்திற்கும் கிடைத்த ஒரு பேரடியாகும்; அரசியல், சித்தாந்த ரீதியில் அவை அடைந்த ஒரு பெரும் தோல்வியாகும் அது. அந்தச் சக்திகளது உலகாதிபத்தியம் முடிவு பெற்றது.1917ல் நடைபெற்ற அக்டோபர் சோஷலிசப் புரட்சி, காலனியமைப்பிலேயே ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்தது என்றால், ஒரு உலக சோஷலிச அமைப்பு உதயமானது. அந்த நெருக்கடியை மேலும் ஆழப்படுத்திற்று. அஸ்தமனத்தின் ஆரம்பம் விளைவு...? காலனி, அரைக்காலனி உலகு முழுவதுமே கொந்தளிக்கத் தொடங்கின. அங்கெல்லாம் ஏகாதிபத்திய - எதிர்ப்பு உணர்வு பொங்கிப் பெருக்கெடுத்துப் பிரவாகமென ஓடத் தொடங்கிற்று.ஒவ்வொரு நாட்டிலும், பரந்த மக்கட் பகுதியினர் தேசவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்; தங்களுக்கு, தங்களது போராட்டத்தில் சக்திமிகு ஆதரவைத் தர உலக சோஷலிச அமைப்பு ஒன்று கம்பீரமாக நிற்பதையும் அவர்கள் கண்டனர். உலகில் எந்த மூலையிலும் நடைபெறும் தேசவிடுதலை இயக்கங்களுக்கு, உலக சோஷலிச அமைப்பு நேரடியான ஆதரவைத் தந்ததோடு மட்டுமன்றி, ஏகாதிபத்தியத்தின் பிரதான சக்திகளை - இராணுவ சக்தி உட்பட - உலக ரீதியில் முடக்கிவிடும் ஆற்றலையும் அது பெற்றிருந்தது.காலனி ஆதிக்க அமைப்பின் சீரழிவு தொடங்கிற்று. இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்ததிலிருந்து ஆசியாவில் 22 நாடுகள்; ஆப்பிரிக்காவில் 42 நாடுகள்; அமெரிக்கக் கண்டத்தில் 5, ஓஷியானாவில் 4, ஐரோப்பாவில் ஒன்று ஆக மொத்தம் 74 நாடுகளில் பறந்து கொண்டிருந்த காலனியாதிக்கக் கொடி கீழிறக்கப்பட்டுள்ளது. 350 ஆண்டுகளாக துப்பாக்கிகளின் உதவியுடன் கட்டி வளர்க்கப்பட்ட சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், 20 ஆண்டுகளில் நலிந்து சிதைந்துவிட்டது.இன்றோ... அதன் முன்னாள் உடமைகளில் 3 சதவிகிதம் மக்கட்தொகையினர் வசிக்கும், 7 சதவிகிதப் பிராந்தியத்தில்தான் பிரிட்டிஷ் அரசின் கொடி பறந்து கொண்டிருக்கிறது.மொத்தத்தில், 150 கோடிக்கு மேற்பட்ட மக்கள், கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்குள்ளாக காலனி, அரைக் காலனி அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு விடுதலையாகியுள்ளனர். யுத்த பிற்கால ஆண்டுகளில், காலனி சாம்ராஜ்யச் சரிவினைத் தடுப்பதற்காக ஏகாதிபத்தியவாதிகள் தங்களது ஆயுதப் படையினை எத்தனையோ முறை பயன்படுத்தியுள்ளனர்; ஆனால் அவர்களது அந்த அடாவடித்தன நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.ஆயுத பலத்தின் அடிப்படையிலும், நேரடியான அரசியல், பொருளாதார ஆதிக்கத்தின் அடிப்படையிலும் அமைந்த சுத்த சுயம்பிரகாச காலனி சாம்ராஜ்யங்கள் இன்று கடந்த காலக் கதைகள் ஆகிவிட்டன. தவிர்க்க முடியாத, தப்பிக்க முடியாத இந்த உண்மைதான், ஏகாதிபத்தியவாதிகளின் காலனிக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன. சூழ்நிலைகளின் மாற்றத்திற்கு ஏற்றாற்போல், ஏகாதிபத்தியவாதிகள் தங்களது நடைமுறைகளையும் மாற்றிக்கொண்டு, ஒரு நவீன காலனியாதிக்கக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் துவங்கிவிட்டனர். ஆனால், சில நாடுகளின் மீது தமது நேரடியான ஆட்சியை இன்னமும் நிலைத்திருக்கச் செய்யும் கொள்கையை ஏகாதிபத்தியவாதிகள் கைவிட்டுவிட்டார்கள் என்று கருதிவிடக்கூடாது. தப்பிப் பிழைக்க சூழ்ச்சி மொத்தத்தில் சாம்ராஜ்யங்களை இழந்து நிற்கும் நேரத்தில், ஏகபோகங்கள் ஓரளவிற்கேனும் காலனியாதிக்கத்தைக் காப்பதற்கு மிகத் தீவிரமாக முயன்றன. ஏனெனில், இன்று காலனிகள் என்பவை மிக முக்கியமான கச்சாப் பொருள் மூலவளக் ‘காமதேனுக்’களமாகவும், தங்கள் பொருள்களை விற்பதற்கான சந்தையாகவும், அதீத லாபத்திற்கான வேட்டைக்காடாகவும், கேந்திர இராணுவ தளங்களாகவும் மட்டுமே அவர்களுக்குத் தோற்றமளிக்கவில்லை. சோஷலிசத்தின் செல்வாக்கு மிகப்பெரும் அளவுக்கு வளர்ந்து வரும் இந்நாளில், முன்னால் காலனி நாடுகள், சார்பு நாடுகள் ஆகியவற்றின் மீது தமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் பிரச்சனை, ஏகாதிபத்தியவாதிகளுக்கு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நன்றி: நட்பின் இலக்கணம் (1976) http://epaper.theekkathir.org/
Labels:
NAZI
