SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை அமல்படுத்துக! நாகர்கோவில், மார்ச்.8- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் புதன்கிழமையன்று மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில்பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு மலர் அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் சுசீலா தலைமை தாங்கினார். கிராம முன்னேற்ற சங்க நிர்வாகி ராதா வரவேற்றார். மாதர் சங்க கூட்டுக்குழு தலைவர் டி. ஆர்.மேரி உரையாளர் அறிமுகம் செய்தார். உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.இந்திரா சிறப்புரையாற்றினார். மாதர்சங்க கூட்டுக்குழு செயலாளர் ஆக்னஸ் குளோரி நன்றிகூறினார். கூட்டத்தில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளை கண் டித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தை அமல் படுத்தி அவர்களுக்கு உரியபாதுகாப்பு வழங்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்துப் பகுதி மக்களுக் கும் பாதுகாப்பான முறையான குடிநீர் வழங்க வேண் டும், ரேஷன் பொருட்களை வழங்குவதில் முறைகேடுகளை களைந்து ரேஷன்கடைகளில் பொருட்களை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (ந.நி) http://epaper.theekkathir.org/