This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 6, 2017
முதலாளித்துவமும் பெண் தொழிலாளிகளும் லெனின் உடனடியாகக் கண்ணுக்குத் தெரியாத வறுமையையும், ஒடுக்குமுறையையும் கொண்ட எண்ணற்ற நிகழ்ச்சிகளின் மறைவிடமாய் அமைந்துள்ளது, நவீன முதலாளித்துவ சமுதாயம். நடுத்தர வர்க்க மக்கள், கைவினைத் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அலுவலர்கள், கீழ்த்தர அரசாங்க ஊழியர்கள் இவர்களின் சிதறிக் கிடக்கும் குடும்பங்கள் விவரிக்கவொண்ணாத அளவு ஏழைகளாயுள்ளன; நல்ல காலங்களிலேயே அவற்றினால் வாழ்க்கையைச் சரிக்கட்ட முடிவதில்லை. இத்தகைய குடும்பங்களில் கோடிக்கணக்கான பெண்கள்; வீட்டு வேலை செய்யும் அடிமைகளாக வாழ்கின்றனர் (எப்படியோ உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காலந் தள்ளுகின்றனர்); ஒரு சில காசுகளைக் கொண்டு தங்கள் குடும்பத்திற்கு உணவும் உடையும் அளிப்பதற்கு அன்றாடம் படாதபாடு படுகின்றனர்; தாங்கள் சொந்த உழைப்பைத் தவிர மற்ற யாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.இந்த மாதர்களிடையேயிருந்தது தான் தொழிலாளர்களை வேலைக்குத் திரட்டுவதற்கு முதலாளிகள், மிகவும் ஆவலாயுள்ளனர்; இவர்கள் வீட்டில் வேலை செய்கின்றனர்; தமக்கும், தமது குடும்பத்திற்கும் ஒரு கூடுதல் துண்டு ரொட்டியை ‘சம்பாதிப்பதற்காக’ கொடூரமான அளவு குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்குத் தயாராயிருக்கிறார்கள். இவர்களிடையிலிருந்துதான் எல்லா நாடுகளின் முதலாளிகளும் (பழங்காலத்தின் அடிமை உடைமையாளர்களும், மத்திய காலங்களின் நிலப் பிரபுக்களைப் போலவும்) மிகவும் ‘சாதகமான’ நிலையில் எண்ணற்ற காமக்கிழத்திகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். பெண்களின் உடல்களை வைத்து நடைபெறும் இந்த வர்த்தகத்தைத் தடுப்பதற்கு வேசைதனம் குறித்த ‘எந்த தார்மீக சீற்றத்தினாலும்’ (நூற்றில் 99 சம்பவங்கள் இதில் பாசாங்குத்தனமானவையே) எதுவும் செய்ய முடியாது; கூலி அடிமைத்தனம் இருக்கின்ற வரையிலும் வேசைத்தனம் தவிர்க்க முடியாமல் இருந்தே தீரும். சமுதாய வரலாறு முழுவதிலும் எல்லா ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட வர்க்கங்களும் எப்போதும் ஒடுக்குவோர்களுக்கு (அவர்களின் சுரண்டல் இதில்தான் அடங்கியுள்ளது). முதலில் தமது கூலி, கொடுபடாத உழைப்பையும், இரண்டாவதாக, ‘எஜமானர்களின்’ வைப்பாட்டிகளாக இருப்பதற்குத் தமது மகளிரையும் கைமாற்றிக் கொடுக்கும்படியான நிர்ப்பந்தத்திற்குள்ளாகி வந்துள்ளனர்.இந்த அம்சத்தில் அடிமை சமுதாயம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகியவை ஒன்று போன்றவையே. சுரண்டலின் வடிவம் தான் மாறுகிறது, சுரண்டல் அப்படியே நீடிக்கிறது.உலகத் தலைநகர், நாகரிகத்தின் மையம் ஆகிய பாரிசில் ‘தமது வீடுகளில் வேலை செய்யும் சுரண்டப்பட்ட பெண் தொழிலாளிகளின்’ வேலைகளைப் பற்றிய ஒரு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.அதிலுள்ள ஒவ்வொரு காட்சிப் பொருளும், வீட்டில் வேலை செய்யும் பெண், அதைச் செய்வதற்காக எவ்வளவு தொகை பெற்றுக் கொண்டாள் என்றும், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு அவளால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றும் குறித்துள்ள ஓர் அட்டையைக் கொண்டுள்ளது.இதன்படி என்ன கிடைக்கிறது? வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண் எந்தப் பொருளைச் செய்வதற்காகவும் ஒன்றே கால் பிராங்குக்கு அதாவது 50 கோபெக்குகளுக்கு அதிகமாகச் சம்பாதிக்க முடியாது. பெரும்பாலான வேலைகளில் கணக்கிட வொண்ணாதளவு குறைவான கூலியே கிடைக்கிறது. உதாரணமாக, விளக்கு மூடிகளை எடுத்துக் கொள்ளுங்கள் - ஒரு டஜன் செய்வதற்கு நான்கு கோபெக்குகள்; அல்லது காகிதப் பைகளை எடுத்துக் கொள்ளுங்கள் - ஓர் ஆயிரம் செய்வதற்கு 15 கோபெக்குகள்; இதில் ஒரு மணி நேரத்திற்கு ஆறு கோபெக்குகள் கூலி கிடைக்கிறது. பிறகு நடாவுடன் கூடிய சிறிய பொம்மைகள் முதலியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் - இவை செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு இரண்டரை கோபெக்குகள் கிடைக்கின்றன; செயற்கைப் பூக்கள் - இவை செய்வதில் மணிக்கு இரண்டு அல்லது மூன்று கோபெக்குகள் கிடைக்கின்றன; ஆண்கள், பெண்களின் உள்ளாடைகள் தயாரிப்பதில் - ஒரு மணி நேரத்திற்கு இரண்டு முதல் ஆறு கோபெக்குகள் வரை கிடைக்கும். இத்தியாதி, இத்தியாதி.நமது தொழிலாளர் ஸ்தாபனங்களும், தொழிற்சங்கங்களும் இத்தகைய ஒரு ‘பொருட்காட்சி’யை ஏற்பாடு செய்ய வேண்டும். பூர்ஷூவாக்களால் ஏற்பாடு செய்யப்படும் பொருட்காட்சிகளைப் போன்று அவ்வளவு அதிக லாபங்களை இவை தரா. தொழிலாளி வர்க்கப் பெண்களின் வறுமையையும் இல்லாமையையும் சித்தரிக்கும் ஒரு பொருட்காட்சி மற்றொரு வகையான அனுகூலங்களைத் தரும் - அது கூலிக்கு வேலை செய்யும் அடிமைகளுக்கு ஆண், பெண் இருவருக்கும் - தமது நிலைமையைப்புரிந்து கொள்வதற்கு, தங்களுடைய சொந்த ‘வாழ்க்கைகளை’யே உணர்ந்து அறிந்து கொள்வதற்கும், வறுமை, இல்லாமை, விபச்சாரம் என்ற இந்த நிரந்தர ஒடுக்குமுறையினின்றும் மற்றும் ஏழைகள் அனுபவிக்கும் பிற இழிவுகளினின்றும் எவ்வாறு விடுதலை பெறுவது என்று சிந்திப்பதற்கும் உதவும். - 1913 ஏப்ரல் 27 (மே 10)ல் எழுதப்பட்டது http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
