SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, March 13, 2017

உடுமலைப்பேட்டை, மார்ச் 13- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் முதலாம் ஆண்டு நினைவுதினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி உடுமலையில் உள்ள சங்கரின் இல்லத்திற்கு மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து சங்கரின் மனைவி கௌசல்யா, சங்கரின் தந்தை வேலுசாமி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்து உரையாடினர். இந்நிகழ்வில் மாதர் சங்க கோவை மாவட்டத் தலைவர் அமுதா, திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் சசிகலா, துணை செயலாளர் வசந்தி மற்றும் வடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.