This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 9, 2017
பள்ளி மாணவிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.136 கோடியை விழுங்கியதா தமிழக அரசு? சென்னை, மார்ச் 8- அவர்களில் சிலர் தற்போது தாய்மார்களாக உள்ளனர். சிலர் முதுகலைப் படிப்பை முடித்து பல்வேறு பணி நிலைகளில் உள்ளனர். ஆனால் அவர்கள் ரூ.3000 கல்வி ஊக்கத்தொகையை இன்னும் பெற முடியவில்லை.பள்ளியில் தங்கிப் பயிலும் பழங்குடி மற்றும் தலித் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் கல்வி ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் எந்த ஒரு பெண் குழந்தைக்கும் இதுவரை ஊக்கத்தொகை கிடைக்கவில்லை.தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில கல்வித்துறை அளித்துள்ள பதிலில், மத்திய அரசின் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக கடந்த 2008-09ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.22 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஒரு மாணவிக்குக் கூட ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்பதும் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப் ப்பட்ட தகவல்களின்படி அம்பலமாகியுள்ளது.இத்திட்டத்தின்படி ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த பெண் குழந்தை கள் 8ம்வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கு பின்பு தகுதிபெற்ற மாணவியின் வங்கி கணக்கில் ரூ.3000ஊக்கத்தொகை நிலையான வைப்புத்தொகை யாக செலுத்தப்படும். அந்த மாணவி பன்னி ரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கு பின்பு வட்டியுடன் அத்தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.சமூகத்தில் பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் பின்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட பழங்குடி மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தபெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப் பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய பெண்ணுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் மாநில கல்வித்துறையிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது. கடிதத்தில் அவரது புதிய வங்கிக் கணக்குஎண்ணை கொடுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. அந்த மாணவி பதினொன்றாம் வகுப்பு படித்தபோது, இந்த உதவித்தொகைக்கு விண்ணப் பித்துள்ளார். அப்போது ஐந்து இலக்க எண்களை கொண்ட வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்துள்ளார். தற்போது வங்கிக் கணக்கு 15 இலக்கத்தை கொண்ட எண்களாக மாற்றப் பட்டுவிட்டது. எனவே புதிய வங்கிக் கணக்கு எண் குறித்த விபரம் கேட்கப்பட்டிருந்தது.தற்போது அப்பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அப்போது ரூ.3000 ஊக்கத்தொகை கிடைத்திருந்தால் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கும் என்று எஸ்.மீனா என்ற அந்த பெண்மணி குறிப்பிட்டார்.இந்த கல்வி ஊக்கத்தொகைக்காக விண்ணப்பித்திருந்தும் பள்ளி நாட்களில் பெற முடியவில்லை. தற்போது அந்த பெண் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி யில் ஆங்கிலத்துறையில் பணியாற்றி வருகிறார்.இந்த சான்றுகளை பெற்றுள்ள, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் சமூக செயல்பாட்டாளர் எஸ்.கருப்பையா இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டு பல்வேறு விவரங்களை பெற்றுள்ளார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக முன்னேற்றத்துக்கான நலத்திட்டங்கள் விரைந்து மக்களைச் சென்றடையாததை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது; திட்டமிட்டே இந்த காலதாமதம் செய்யப்படுகின்றது என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.அவர் மாநில கல்வித்துறையிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பல்வேறு விவரங்களை கேட்டுள்ளார். அதன்படி எத்தனை பேர் இத்திட்டத்தின்படி பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதற்கான எந்த விபரமும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்காக மத்திய அரசின் சார்பாக தொடர்ந்து நிதி ஒதுக்கீடுகள் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளன.அதன்படி கடந்த 2008-09ஆம் கல்வியாண்டில் ரூ.128 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்மூலம் நாடு முழுவதுமுள்ள ரூ.11.72 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்காக ரூ.22.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 72,000 மாணவர்கள் பயன்பெறுவதாக கூறப்பட்டது. அதுபோன்று கடந்த 7 ஆண்டுகளாக ரூ.136 கோடி தமிழ்நாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எங்கே போனது என்ற மர்மம் தெரியவில்லை என்று கருப்பையா கூறுகிறார்.இதுகுறித்து விரிவாகப் பதிவு செய்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறுகையில், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ராம். எம்.சுந்தர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளரான சந்தோஷ் வர்மாவிடம் இத்திட்டம் குறித்த விளக்கங்களை கேட்டபோது அதுகுறித்த விளக்கங்களை அளிக்க மறுத்துவிட்டார் எனப் பதிவு செய்துள்ளார்.‘மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை’இதுகுறித்து தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியுள்ளோம். நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் ஊக்கத்தொகையை மத்திய அரசே வழங்காமல் காலதாமதப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
