SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

ஊழலில் முதலிடம் ! ஊழலில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் இந்தியாவே முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டதில் நமது பிரதமர் மோடியின் பங்கும் மகத்தானது. காரணம் கடந்த ஓராண்டில் மட்டும் 40 சதவிகித அளவிற்கு லஞ்சஊழல்கள் அதிகரித்திருக்கின்றன என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஒரு வேளை பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு இந்த வளர்ச்சியும் கூட பெருமையாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருஇந்தியனுக்கும் இந்த ஊழல் வளர்ச்சிஉலகஅரங்கில் தலைக்குனிவையே ஏற்படுத்தும். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நடத்தியிருக்கும் இந்த ஆய்வில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், காவல்துறை ஏன்நீதித்துறை என அனைத்து துறைகளிலும் லஞ்சம் புரையோடிப்போயிருக்கிறது. நீதியை பெறவே லஞ்சம் அளிக்க வேண்டிய அவலம் நிலவுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக அதிகம் லஞ்சம்பெறும் துறையாக காவல்துறையே இருக்கிறதாம். இதற்கு அடிப்படையே 1991க்கு பின் வந்த தாராளமயமாக்கல் கொள்கையே தான் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தகொள்கையைத்தான், காலத்திற்கேற்ப நவீனமாக்கி காங்கிரசும், பாஜகவும் தூக்கிப் பிடித்து வருகின்றன. அதன் விளைவுதான் இந்தியாவில் இன்று ஊழல் ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி வானளாவ வளர்ந்து நிற்கிறது.ஊழலுக்கு எதிரான போர் என நீட்டி முழங்கும் மோடி அரசு, 2013ல் நிறைவேற்றப்பட்ட லோக்பால்மசோதாவை செயல்வடிவமாக்கிட இன்று வரை ஒரு துரும்பைக் கூட நகர்த்தவில்லை. அதுமட்டுமல்ல, லோக்பால் மசோதாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்கெடுப்புடன் கூடிய ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் பொது- தனியார்- ஒத்துழைப்பு திட்டங்கள், அரசு மற்றும் பொதுத்துறைநிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களையும் லோக்பால் புலனாய்வு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால்இந்த வாக்கெடுப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டு ஊழல்களை ஆதரிக்கும் வகையிலேயே காங்கிரசும், பாஜகவும் சட்டத்திருத்தத்தை எதிர்த்து வாக்களித்தன. இதுதான் இவர்கள்ஊழலை ஒழிக்க எடுக்கும் நடவடிக்கையின் லட்சணம் ஆகும்.அதே போல் மாநில அளவில் ஊழலுக்குஎதிராக விசாரணை செய்யும் நீதி அமைப்பான லோக் ஆயுக்தாவும் தமிழகத்தில் கிடப்பில்போடப்பட்டிருக்கிறது. காரணம் தமிழகத்தை ஆண்ட, ஆளும் திமுக, அதிமுக இரண்டுகட்சிகளும் ஊழலில் ஊறித் திளைத்தவைகளாகவே இருக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம் ஊழல் குற்றவாளி என அறிவித்திருக்கிறது. இன்றும் ஜெயலலிதாவின் கொள்கை வழிதான் ஆளும்அரசின் கொள்கையாக பிரகடனப் படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே ஊழல் என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்தது என்பது மாறி இன்று பொதுமைப்படுத்தப்படுகிறது. அதன் காரணமாகவே முந்த்ரா ஊழல் துவங்கி வியாபம் ஊழல் வரை எங்கும் தங்கு தடையின்றி ஊழல் வியாபித்திருக்கிறது. ஆனால் செல்லா நோட்டு அறிவிப்பால் கறுப்புப் பணம், ஊழல் ஒழியும் என்றார் பிரதமர் மோடி. ஆனால் உண்மையில் ஊழல் ஊதி பெருகியிருக்கிறது என்பதுதான் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் ஊழல் ஒழிய வேண்டுமென்றால் ஆளும் அரசுகளின் அடிப்படை கொள்கைகள் மாற வேண்டும். http://epaper.theekkathir.org/