This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Tuesday, March 14, 2017
சமத்துவம் இல்லையேல் எதுவும் இல்லை முத்துகிருஷ்ணனின் கடைசி வார்த்தைகள் புதுதில்லி / சேலம், மார்ச் 14- மீண்டும் ஒரு தலித் மாணவர் தனது உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். மத்திய பல்கலைக் கழகமான ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் நவீன வரலாற்று ஆராய்ச்சி மாணவரான முத்துகிருஷ்ணன் எனும் ரஜனி கிருஷ் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்.முத்து கிருஷ்ணன் தமிழகத்தில் சேலம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜீவானந்தம் தனியார் துறையில் காவலராக பணியாற்றுகிறார். தாய் அலமேலு தினக்கூலித் தொழிலாளி. மூன்று சகோதரிகள் கொண்ட எளிய குடும்பத்தில் முத்துகிருஷ்ணன்தான் முதல் தலைமுறை பல்கலைக்கழக மாணவர்.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது முத்துகிருஷ்ணனின் நீண்ட கனவாகும். இதற்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார். சென்ற ஆண்டு தனது முகநூலில் முத்துகிருஷ்ணன் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:“ஜேஎன்யு பல்கலைக்கழக எம்.ஏ. படிப்புக்குமூன்று முறை நுழைவுத் தேர்வு எழுதினேன்; ஆராய்ச்சிப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு இரண்டு முறை எழுதினேன்; நேர்முகத் தேர்வில் இரண்டு முறை கலந்து கொண்டேன். “நான் தொடர்ந்து முயற்சி செய்யவே விரும்புகிறேன்; முயற்சியை கைவிட விரும்பவில்லை; கடின உழைப்பு என்றும் நம்மை கை விடுவது இல்லை.”எனினும் நமது கல்வி முறையும் ஜே.என்.யு. உட்பட பொதுவாக பல்கலைக் கழகங்களில் இந்துத்துவா ஆதரவு நடவடிக்கைகளும் முத்துகிருஷ்ணன் போன்ற தலித் மற்றும் ஒடுக்கப் பட்ட மாணவர்களை கைவிட்டு விடுகின்றன. இந்திய உயர் கல்வி நிலையங்களில் நிலவும்பாகுபாடுகளை ஆய்வு செய்யும் லண்டன் ஆராய்ச்சியாளர் கவுரவ் பாதானியா கூறுகிறார்: “அடக்குமுறைகள் மொத்தமாக உள்ளசமூகத்தில் நாம் வாழ்கிறோம்! அந்த அடக்குமுறைகள் நமது உளவியல், மனம் மற்றும் நமது நடைமுறைகள் அனைத்திலும் மறு உற்பத்தி செய்யப்படுகின்றன. நம்பிக்கைகளைத் தருவதற்கு பதிலாக நமது கல்விமுறை பயத்தையும் விரக்தியையும்தான் தருகின்றன”. ரோஹித் வெமுலாவின் நண்பர் ஜே.என்.யு.வில் சேருவதற்கு முன்பு முத்துகிருஷ்ணன், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்தார். அங்கு ரோஹித் வெமுலாவின் நண்பராக இருந்துள்ளார். வெமுலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து நடந்த போராட்டங்களில் முழுமையாக ஈடுபட்டார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது வலைப்பூவில் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலாவை சந்தித்தது குறித்து உணர்ச்சிப்பூர்வமாக கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்:“தேசவிரோதிகளே! இந்த தேசம் ஒருஅப்பாவித் தாயின் மகனைக் கொன்றுவிட்டது. பாரத மாதா தனது மகனை இழந்துவிட்டது என்று அவர்கள் கூறினர்; ஆனால் அவரதுசாதிய அடையாளம் குறித்து கேள்வி எழுப்பினர். இந்த அநீதிக்குப் பிறகு இவர்களது தேசியத்தை அந்த தாய் ஆதரிக்க முடியுமா?” என்றுஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பதிவு செய்தார்: “அருமை தேசவிரோதிகளே! நான் ஒன்றைஉங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்! இந்ததேசத்தின் தலைவர் ஒரு நாளைக்கு அனைத்தையும் விற்றுவிடுவார். ஒரு செல்ஃபிக்காகவும் வெளியில் உள்ள சிலரின் கைதட்டுதலுக் காகவும் விற்றுவிடுவார்; பல டப்பாராவ்கள் (ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பாராவை இப்படி குறிப்பிடுகிறார்)ஆயிரக்கணக்கான ரோஹித் வெமுலாக்களைகொன்றுவிடுவார்கள். பின்னர் அந்த மாணவர்தான் மிகச் சிறந்தவன் என பசப்புவர். கற்பனைகதாபாத்திரங்களை கேலி செய்ததற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவர்களும் அறிஞர்களும் சிறையில் அடைக்கப் படுவார்கள். மாட்டிறைச்சி சாப்பிடுவதாலும் உண்மையான தேசியம் எது என கருத்து கூறுவதாலும் பகுத்தறிவுடன் இருப்பதாலும் அவர்கள் ஆயிரக்கணக்கான ரோஹித்களை கொன்றுவிடுவர். ஆனால், நாங்கள்தான் இந்த தேசத்தின் உண்மையான மைந்தர்கள். எங்களைக் கொன்றுவிட்டால் இந்த தேசமே இருக்காது.” இந்தப் பதிவுகள், ரோஹித் வெமுலா மீதும் அடக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் தெளிவான கருத்துகள் முத்துகிருஷ்ணனுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கிறது. சமத்துவம் இல்லை எனில் எதுவும் இல்லை! மார்ச் மாதம் 10ம் தேதி தனது முகநூலில் இறுதிப் பதிவை முன்வைத்தார். அதில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:“எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி. பிரிவு மாணவர் சேர்ப்பில் சமத்துவம் இல்லை. ஏiஎய ஏடிஉந எனப்படும்வாய்மூலமான கேள்வி பதில் தேர்வில் சமத்துவம் இல்லை; சமத்துவம் குறித்த பேரா.சுகதேவ் துரோட் அவர்களின் பரிந்துரைகள் மறுக்கப்படுகின்றன. மாணவர்கள் வழக்கமாக போராட்டம் நடத்தும் இடத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது; அடக்கப்பட்டவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.”இவ்வாறு முத்துகிருஷ்ணன் தனது கோபத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்தார். சமீபத்தில் மாணவர் சேர்க்கையில் யு.ஜி.சி. அமைப்பு பல மாற்றங்களைச் செய்தது. இந்த மாற்றங்கள் கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பாதகமாக இருந்தன. இதனை எதிர்த்து மாணவர்கள் இயக்கங்களை நடத்தி வந்தனர். எதிர்ப்பு இயக்கங்கள் வழக்கமாக நடக்கும் நிர்வாகக் கட்டிடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தக் கூடாது என ஜே.என்.யு. நிர்வாகம் தடைவிதித்தது. இவற்றையெல்லாம் தனது முகநூல் பதிவில்கோபமாக முத்துகிருஷ்ணன் எதிர்த்தார் என்பது தெளிவாகிறது. சங்பரிவாரக் கும்பல்களால் தேசவிரோதி என கன்னய்ய குமாருடன் குற்றம் சாட்டப்பட்ட உமர்காலித் “முதலில் வெமுலா! பின்னர் நஜீப் காணாமல் போனது! இப்பொழுது ரஜனிகிருஷ்! ஏன் பல்கலைக் கழகங்களில் அடக்கப் பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்?” என கேள்வி எழுப்புகிறார்.தேசவிரோதி என சங்பரிவாரத்தால் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு மாணவரான அனிர்பன் பட்டாச்சார்யா, மாணவர் முத்துகிருஷ்ணனை அவர்களை சந்தித்தது குறித்து மிகவும் நெகிழ்வுடன் நினைவு கூர்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இங்குவந்தது குறித்து மிகவும் பெருமை கொண்டதாகவும் தன்னுடைய ஆராய்ச்சி குறித்து மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் தன்னைப்போன்றவர்கள் அவருக்கு உதவிட முன்வந்ததாகவும் குறிப்பிடுகிறார். அனிர்பென் பட்டாச்சார்யா சில கேள்விகளையும் முன்வைக்கிறார்:“எது முத்துகிருஷ்ணனை பாதித்தது? எத்தகைய பிரச்சனைகள் அவருக்கு இருந்தன? ஒரு முதல் தலைமுறை தலித் மாணவர் ஏன் பல்கலைக் கழகம் தொடர்பான இடத்தில் தனதுஉயிரை மாய்த்துக் கொள்கிறார்? நமது பல்கலைக் கழகச் சூழல் இத்தகைய ஒடுக்கப் பட்ட பிரிவு மாணவருக்கு நம்பிக்கையும் ஆதரவும் தருவதற்கு பதிலாக உயிரை மாய்த்துகொள்ள ஏன் விரட்டுகின்றன?” இவையெல்லாம் பதில் தேட வேண்டிய கேள்விகளாகும்.“சமத்துவம் மறுக்கப்பட்டால் அனைத்துமே மறுக்கப்பட்டதற்கு சமம்”.இது மார்ச் 10ம்நாள் முத்துகிருஷ்ணன் பதிவுசெய்த கடைசி வார்த்தைகள். இந்த வார்த்தைகளை எழுதிய பின்னர்,முத்துகிருஷ்ணனின் மனம் மவுனமாகிவிட்டது. மார்ச் 13 திங்கள்கிழமை மாலை அவரது நண்பர் அறையிலிருந்து முத்துகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார்.முதற்கட்ட விசாரணையின்படி, முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக தெற்கு தில்லி போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில், தில்லி வந்துள்ள முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் கூறும் போது, “எனது மகன் துணிச்சலானவர். அவர்தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையில்லை. அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. என்னிடம் தொலைபேசியில் பேசினார். விரைவில் வீட்டுக்கு வருவதாக கூறியிருந்தார். அவர் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தில்தான் தில்லிக்கு வந்தாரே தவிர தற்கொலை செய்துகொள்ள அல்ல. எனது மகனின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனது மகனின் பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிரேதப் பரிசோதனையின்போது எங்கள் தரப்பில் ஒரு மருத்துவரும் இருக்க வேண்டும்” என்றார்.முத்துகிருஷ்ணனின் சித்தப்பா கவி கூறும்போது, “முத்துகிருஷ்ணனுக்கு குடும் பத்தில் எந்த நெருக்கடியும் இல்லை. அவர் நன்றாக படிக்கக்கூடியவர். விரைவில் வீட்டுக்குவருகிறேன் என்று சொன்னவர் எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அவரதுமரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நன்றாகப் படித்து சமூகத்துக்கு ஏதாவது சேவைசெய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட முத்துகிருஷ்ணன் நிச்சயமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்” எனத் தெரிவித்தார். மாணவர் தலைவர் சந்தேகம் ஜேஎன்யு அம்பேத்கர் - புலே மாணவர் சங்கத்தின் நிர்வாகி பாலகங்காதர் கூறும்போது, “சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடனேயே நான் அங்கு சென்றுவிட்டேன். முத்துகிருஷ்ணனின் சடலத்தை நான் பார்த்தபோது, அவரதுகால்கள் தரையில் ஊன்றியிருந்தன. தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தால் கால் தரையில் ஊன்றியிருக்க வாய்ப்பில்லை. எனவே, இது நிச்சயமாக கொலையாகவே இருக்க வேண்டும். இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை நடத்தவேண்டும்” என்றார். சேலத்தில் குடும்பத்தினருடன் வாலிபர் சங்கத்தினர் மறியல் இந்நிலையில், ஜேஎன்யு மாணவர் முத்துகிருஷ்ணன் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணைகேட்டு சேலம் நான்கு ரோடு பகுதியில் மாணவரின் உறவினர்களுடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் செவ்வாயன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களிடம் சேலம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவனின் மரண மர்மம் உடைபட வேண்டும்.உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியருக்கு வட்டாட்சியர் மூலம் தரப்பட்டது. வட்டாட்சியரின் உறுதிமொழி அடிப்படையில் மறியல் தற்காலிகமாக திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. சிபிஎம் தலைவர்கள் ஆறுதல் முத்துகிருஷ்ணன் மரணத்தால் சேலம் சாமிநாதபுரம் சோகத்தில் மூழ்கியுள்ளது. சேலம் அரிசி பாலத்தில் உள்ள முத்துகிருஷ்ணன் வீட்டில் அவரது குடும்பத்தினரை சந்தித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.தங்கவேலு, மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஆர். குழந்தைவேலு, சிபிஎம் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.முருகேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் என்.பிரவின் குமார் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். கோவை இதேபோல் இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை மாவட்டத்தலைவர் தினேஷ்குமார் தலைமையில் முற்றுகையிட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர். - தொகுப்பு: அ.அன்வர் உசேன் http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
