SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 14, 2017

தலை நகரத்து ஆண் காவலர்களே... உமக்கும் நன்றி! நன்றி நவிலப்பட வேண்டியவர்களின் பட்டியலில் தில்லி காவல்துறை இடம்பெறாது போய்விடக் கூடாது. தில்லி நகரத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பு மிக்க நகரமாக ஆக்கிடுவதில் அவர்களது அனைத்துத் தொழில் திறமைகளுக்கும் நன்றி கூறிட வேண்டும். டிசம்பர் 16ம் தேதியை நினைவில் கொள்ளுங்கள், நிர்பயா எனப் பெயர் சூட்டப்பட்ட ஜோதி சிங்கிற்கு அந்த நாள் எவ்வளவு பாதுகாப்பான தினமாக இருந்தது. அது ஓர் வரலாறு எனில், ஊடகத்தைப் பின் தொடருங்கள். தில்லி நகரத்தின் ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரும் வாகனமும் பெண்களை பாலியல் தொல்லை செய்திடவும், ஏன் பாலியல் பலாத்காரம் செய்திடவும் ஆண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆம், தில்லி காவல்துறையால் நிச்சயமாக உங்களுக்குப் பாதுகாப்பளித்திட இயலும். ரம்ஜாஸ் கல்லூரி சம்பவத்தை கவனித்தீர்களா? முதலில் உங்களைத் தாக்கிடுவதன் மூலம் ஏபிவிபியிடமிருந்து உங்களை அவர்களால் பாதுகாத்திட இயலும். தேசத் தலைநகரின் காவல்துறையைச் சார்ந்தவராக இருப்பதால் பிற மாநிலங்களிலுள்ள காவல்துறையினருக்குச் சளைத்தவர்களாக இவர்கள் இருந்திட இயலாது. எனவே, இங்கும் ஆண் காவலர்கள் பெண்களைப் பிடித்திழுக்கலாம், அடிக்கலாம், அவர்களைத் தொட்டுத் தடவிடலாம். சந்தேகத்திற்கு இடமெதுவுமின்றி, அவர்களும் கூட பெண்களுக்கு டிவீஷ் செய்ய மறந்திடுவதில்லை. தில்லி காவல்துறையில் உள்ள ஆண்களே, உமக்கு நன்றிகள். மகளிர் தின வாழ்த்துக்கள். http://epaper.theekkathir.org/