This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Tuesday, March 14, 2017
முதல் நன்றி... முதன்மைச் சேவகருக்கு! பிரதமரிலிருந்தே.. மன்னிக்கவும், ‘‘முதன்மைச் சேவகரிடமிருந்தே’’ நாம் துவக்கிடுவோம். 140 எழுத்துக்களைக் கொண்ட டிவிட்டர் ஹேண்டிலைப் பயன்படுத்துவதில் தனது வலிமையைக் காட்டிட கொஞ்சமும் கூச்சம் கொள்ளாத அவர், ‘‘பெண் சக்தியின் எவருக்கும் அடிபணியாத மனநிலை, மனஉறுதி, அர்ப்பணிப்புணர்வு ஆகிய குணநலன்களை சர்வதேச மகளிர் தினத்தன்று’’ போற்றுவதாக ‘டிவீஷ்’ (அதுதாங்க டிவீட்+விஷ்) செய்தார். எவருக்கும் அடிபணியாத மனநிலை… ஆம், உண்மையிலேயே அதற்காக நமக்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்திட வேண்டும்.யாருக்கும் அடிபணியாத மனநிலை என்றால் என்ன என்பதனை மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபால் நகருக்கு அருகேயுள்ள பத்ஜிரி எனும் குக்கிராமத்தைச் சார்ந்த பெண்கள் காட்டியுள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தின் முதல் ‘ரொக்கமில்லா’ கிராமம் பத்ஜிரி ஆகும். அக்கிராமத்தைச் சார்ந்த பெண்கள் பிரதமருக்கு நன்றி சொல்வதற்கான காரணங்கள் பலவற்றில் முக்கியமான காரணம் இதுவேயாகும்.மற்ற இடங்களைப் போலவே, இக்கிராமத்தைச் சார்ந்த பெண்களும் தங்களது வேலையிலும், குடும்பத்தின் மீதும் அதிகமான பற்றும், அர்ப்பணிப்புணர்வும் கொண்டவர்களாகவே இருந்தனர். அதன் காரணமாக, எவருக்கும் அடிபணியாத மனநிலையோடு (திரும்பத் திரும்ப இந்த வார்த்தையை பயன்படுத்திடுவதற்கு மன்னித்திடுங்கள்) அவர்கள் தங்களது வேலையை செய்ததுடன் மட்டுமின்றி, தங்களது சொற்ப வருமானத்திலிருந்து கொஞ்சம் தொகையை சேமிக்கவும் செய்தனர். அக்குடும்பத்தைச் சார்ந்த ஆணுக்கும் கூட எவ்வித சந்தேகமும் எழாதவாறு இத்தகைய சேமிப்பெல்லாம் இயல்பாகவே மிகப் பாதுகாப்பான சிறு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இதனைச் சொல்கிறபோது, இப்பெண்களுக்கு வங்கிக் கணக்குகள் எதுவும் இருக்கவில்லை என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை. நமது முதன்மைச் சேவகரின் நவம்பர் 8-ம் தேதிய நடவடிக்கையால், இந்த ஆண்டு மார்ச் 8 அன்று இப்பெண்கள் இவருக்கு நன்றி தெரிவித்திட விரும்புகின்றனர். தனது ஒற்றை நடவடிக்கையால் இப்பெண்கள் அரும்பாடுபட்டுச் சேர்த்திருந்த சேமிப்புகளை எல்லாம் காணாமல் போகச் செய்துவிட்டார். இத்தகைய சேமிப்புகள் பற்றி வேறுவழியேதுமின்றி அக்குடும்பத்தின் ஆண்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு சில வீடுகளில், மிருகத்தனமான குடும்ப வன்முறைக்கும் அப்பெண்கள் ஆளாகிட நேர்ந்தது. பாராட்டத்தக்க மனவுறுதியோடு … ‘பெண்சக்தியை’ வெளிப்படுத்தி இதையெல்லாம் அப்பெண்கள் தாங்கிக் கொண்டனர். இப்படி ஒரு நடவடிக்கையைப் பிரதமர் மேற்கொள்ளாதிருந்தால், பெண்களிடையே இருக்கின்ற இத்தகைய குணநலன்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். எனவே, தனது சிறப்புமிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் வாயிலாக, பெண்களின் இத்தகைய குணநலன்களை நமது கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக, பிரதமரே, உங்களுக்கு எமது நன்றிகள். பெண்களை உண்மையிலேயே ரொக்கமில்லாதவர்களாக ஆக்கியிருக்கிறீர்கள் நீங்கள்.பத்ஜிரிகிராமமானது, ‘ரொக்கமில்லா’ கிராமம் மட்டுமல்ல. தற்போது குடிநீரில்லாத கிராமமும்கூட. நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியே எடுத்திட ஆழ்குழாய் கிணறுகளை அமைத்திடத் தேவையான பணம் இக்கிராமவாசிகளிடம் இல்லை. எனவே, இவர்கள் தண்ணீரை வாங்குவதற்காக மாதந்தோறும் 600 முதல் 800 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். தங்களது விளைநிலங்களில் ஆழ்குழாய் கிணறுகளை ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கிற சில விவசாயிகள், தற்போது மரங்களின் மீதும், கம்பங்களின் மீதும் குழாய்களைப் பொருத்தி தங்களது வயலிலிருந்து வீட்டிற்கு நீரை கொண்டு செல்கின்றனர். வீட்டு உபயோகத்திற்குத் தேவையான தண்ணீர் இருப்பதனை உத்தரவாதம் செய்திடும் பொறுப்பு அக்குடும்பத்தின் பெண்கள் மீதே விழுகின்றது. அப்பெண்கள்தான் தண்ணீரைச் சுமந்திட மிக நீண்ட தொலைவு நடக்கின்றனர். தற்போதைய நிலை இவ்வாறு இருக்கையில், வெயில் காலம் உண்மையிலேயே துவங்கிய பின்னர் நிலைமை எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். தற்போது இக்கிராமம் தேக்கநிலையில் இருக்கிறது. தண்ணீரை வாங்கிடத் தேவையான பணம் அவர்களிடம் இல்லை. தண்ணீர் இல்லாமல் அவர்களால் நல்ல விளைச்சலை எடுக்க இயலாது. எனவே, தண்ணீர் இல்லாததால் அவர்களிடம் பணமும் இருக்காது. இவை எல்லாவற்றிற்கும், எவருக்கும் அடிபணியாத குணத்துடன், அவர்கள் நன்றி கூறிட விரும்புகிறார்கள்.. யாருக்கு எனத் தெரியுமா? உங்களுக்கு.. நன்றி பிரதமர் அவர்களே… எங்களை ரொக்கமில்லாதவர்களாக, எங்களது கிராமங்களை தண்ணீர் இல்லாதவைகளாக, அதன் வாயிலாக எங்களது வீடுகளை உணவில்லாதவையாக மாற்றியதற்காக, உங்களுக்கு எங்களது நன்றிகள்.. பெண்கள் தின வாழ்த்துக்கள்… http://epaper.theekkathir.org/
Labels:
narendra modi
