SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Wednesday, March 15, 2017

முத்துகிருஷ்ணன் மரணம்: நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு பாஜக ஆட்சியில் தலித்துக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன யெச்சூரி குற்றச்சாட்டு புதுதில்லி, மார்ச் 15 - தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜேஎன்யு பல்கலைக்கழக தலித் மாணவருமான முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.உயர்கல்வி நிறுவனங்களில், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக - பொருளாதார அடிப்படையிலான அநீதி, உடனடியாக களையப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஹோலி விடுமுறையை அடுத்து புதன்கிழமையன்று மீண்டும் கூடியது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும்- மாநி லங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி, மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக அவையில் பிரச்ச னையை கிளப்பினர்.அவர் பேசுகையில், ‘தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக மனிதவளத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி னார். ‘தலித் மாணவர்கள் ஏன், தற்கொலை செய்துகொள்கிறார்கள்; அதற்கான சூழல் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார். ‘பாஜகஆட்சியில் தலித்துகளுக்கு எதிரானகுற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன’ என்று குற்றம்சாட்டிய அவர்,‘இதுதொடர்பாக முழுமையான விசார ணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்’ என்றும்வலியுறுத்தினார்.சிபிஐ தேசியச் செயலாளர் து. ராஜா, திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி மற்றும் ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் முத்துக் கிருஷ்ணன் மரணம் தொடர்பாக பேசினர்.முத்துகிருஷ்ணன் மரணம் நிகழ்ந்து மூன்று நாட்களாகி விட்ட பின்பும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்குக் வட காவல்துறை முன்வராததைச் சுட்டிக்காட்டி, அதற்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.து. ராஜா (சிபிஐ) பேசுகையில், ‘தமிழ் நாட்டைச் சேர்ந்த தலித் ஆராய்ச்சி மாணவர் மிகவும் பரிதாபமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார்; அவர் எப்படி இவ்வளவு தீவிரமான முடிவிற்குச் செல்ல முடியும்? நம் மத்திய பல்கலைக் கழகங்களில் தலித் - பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்படுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். ‘இதுகுறித்து ஒரு முழுமையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். மாணவர் சேர்க்கைக் கொள்கை உட்பட அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் ஆழமாக பரிசீலித்திட வேண்டும்’ என்றார்.அவரைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா (திமுக), ‘ரோஹித் வெமுலா தற்கொலைசெய்து கொண்டார்; முத்துகிருஷ்ணன் மின் விசிறியில் தொங்கிக் கொண்டிருக்கிறார்; தலித் மாணவர்கள் பொருளாதார இழப்பினையும், சமூக பாகுபாட்டினையும் எதிர்கொள் ள்கின்றனர்’ என்று தெரிவித்தார். தற்போது ‘முத்துகிருஷ்ணன் இறந்தது தொடர்பாக எவ்விதமான தற்கொலைக் குறிப்பும் இல்லை, இவ்வாறு அவர் அகால மரணம் அடைந்ததற்கான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.‘ஓர் இளைஞன், ஓராண்டு மிகவும் கடினமாகப் படித்து, தன் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டு இங்கே ஜேஎன்யு-வில் வந்து சேர்ந்திருக்கிறார்; அப்படிப்பட்ட நிலையில், அவர் ஏன் இவ்வாறு தன் முடிவை தேடிக்கொள்ள வேண்டும்?’ என்ற கேள்வியை கனிமொழி (திமுக) எழுப்பினர். ‘மத்திய பல்கலைக்கழகங்கள் ஒடுக்கப்பட்டோரின் கல்லறைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன’ என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினரான அலி அன்வான் அன்சாரி பேசுகையில் ‘பல்கலைக் கழகங்களில் பாகுபாடுகள் இருக்கின்றன’ என்றார். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ், முத்துகிருஷ்ணன் மரணம் குறித்து அவையில் மனிதவளத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார். அதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பாக- அரசின் சார்பில் மத்திய தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.மாணவர்களுக்கான சிறந்த இடமாகப் பல்கலைக்கழகங்களை மாற்றுவதில் மத்திய அரசுக்குப் பொறுப்பு இருக்கிறது என்று கூறிய அவர், ‘இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம்; நான் முத்து கிருஷ்ணனின் தந்தை மற்றும் அவரது பொறுப்பாளரைச் சந்தித்தேன்; மாணவர் தலைவர்களிடமும் பேசினேன்; 15-ஆம் தேதி 12 மணிக்குள் முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட்டு, நகல்கள் அனுப்பப்பட வேண்டும் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.முத்துகிருஷ்ணன் மரணம் தொடர்பான வழக்கில், எஸ்.சி.- எஸ்.டி. சட்டப் பிரிவுகளை ஏன் செயல்படுத்தக் கூடாது? என்று தன்னார்வலர்களும், மாணவர்களும் கேள்வி எழுப்பியிருப்பதை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், ‘தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளை ஏன் அறிக்கையில் சேர்க்கவில்லை என்று காவல்துறையிடம் அரசு கேட்டது; ஆனால், சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தால் ஒழிய, எதையும் சேர்க்க முடியாது என்று காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது; எனினும் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், அனைத்துப் பிரிவுகளையும் வழக்கில் சேர்க்கச் சொல்லி இருக்கிறோம்’ என்று தெரிவித்தார். ‘நடந்த சம்பவங்கள் குறித்து உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது; மாணவர்களுக்கான சிறந்த இடமாகப் பல்கலைக்கழகங் களை மாற்றுவதில் அரசுக்கு பொறுப்பு இருக்கிறது’ எனவும் குறிப்பிட்டார்.அப்போது, மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் குறுக்கிட்டு ‘பல்கலைக் கழகங்களில் தலித் மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு இருக்கிறதா? என்பதையும் அரசு கவனித்துப் பார்க்க வேண்டும்’ என்றார். ரோஹித் சட்டம் எங்கே! தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்.பில். முதலாம் ஆண்டு பயின்று வந்த, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏழை தலித் மாணவர் முத்துகிருஷ்ணன், மார்ச் 13-ஆம் தேதி மாலை மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள நிலையில், அவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.“உயர்கல்விக்கு தலித் மாணவர்கள் செல்வது மிகவும் குறைவு; ஆனால் உயர் கல்வி நிலையங்களில் நிகழும் மாணவர் மரணங்களில் தலித் மாணவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது; ஏற்கெனவே ரோஹித் வெமுலாவின் மரணம் நாடு முழுவதும் தலித் மாணவர்களின் மீதான தாக்குதல் குறித்து பெரிய அளவில் விவாதத்தைக் கிளப்பியது; இந்நிலையில், கல்வி நிலையங்களில் சாதிய ரீதியான பாகுபாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலை மேற்கொள்வோரை தண்டிக்கும் வகையில் ‘ரோஹித் வெமுலா’ சட்டத்தை இயற்ற வேண்டும்; கல்வி நிலையங்களில் தொடரும் மாணவர்களின் மரணத்தை தடுக்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலகுழுத் தலைவர் எம். செந்தில், மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்ஐஆர் பதிவு இதனிடையே, ஜேஎன்யு மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிகழ்வுக்குக் காரணமாக இருந்ததாக- அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது.முத்துகிருஷ்ணனின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை ஜீவானந்தம் அளித்த புகாரின் பேரில், தில்லி போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. http://epaper.theekkathir.org/