SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 14, 2017

முதலில் வருபவர்க்கு முன்னுரிமை? உ.பி.உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராகவே அமைந்தன. உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப் மாநிலங்களில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. கோவா மாநில மக்கள் ஆளும் கட்சியான பாஜகவை மட்டுமின்றி முதல்வரையும் தோற்கடித்து விட்டனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் பதவியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் மத்திய அமைச்சராக இருந்தமனோகர் பாரிக்கர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு உடனே மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். வெறும் 13 இடங்கள் மட்டுமே கொண்டிருக்கும்பாஜக, முன்பு தனது ஆதரவை விலக்கிக்கொண்ட கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (3), கோவா பார்வர்டு கட்சி (3), சுயேச்சைகள்(2) ஆதரவு உள்ளதாகக் கூறியதும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறி மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா உடனே முதல்வராக பாரிக்கரை நியமனம் செய்கிறார். எல்லாம் சட்டென முடிந்து விடுகிறது.அரசியல் சட்ட நெறிமுறைகள், ஜனநாயக நடைமுறைகள் எதைப்பற்றியும் கவலைப்படாத ஆளுநரின் இந்த செயலை எதிர்த்து தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நேரடியாக முறையீடு செய்தது. ஹோலி விடுமுறைக் காலமாதலால் செவ்வாயன்று சிறப்பு அமர்வு அந்த மனுவை விசாரித்தது. அது ஆளுநரின் முடிவுக்குதடைவிதிக்கவில்லை. ஆயினும் 2 நாட்களில் பாரிக்கர் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.ஆதரவளிக்கும் எட்டுப்பேரில் ஆறு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கி பெரும்பான்மையை நிரூபிக்க பாரிக்கர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகள், எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் எல்லாம் கையறு நிலையிலேயே காட்சியளிக்கின்றன. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பது கார்ப்பரேட் நிறுவன நடைமுறையாக உள்ளது. ஆனால் அது சட்டமன்ற நடைமுறையாவது ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கை அல்ல. அண்மையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க அழைக்க பொறுப்பு ஆளுநர் எடுத்துக் கொண்டகாலமும் கோவா ஆளுநர் எடுத்துக் கொண்ட காலமும் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாகவே அமைந்துள்ளன.கோவாவில் நடந்திருப்பது ஜனநாயக நெறிமுறையல்ல. அறம் சார்ந்த அரசியலும் அல்ல.ஆசை வெட்கமறியாது; பதவி வெறி நெறிமுறைகள் அறியாது என்பது பாஜகவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே உத்தரகண்ட்டில் அது நடந்து கொண்டதும் அதற்கு உச்சநீதிமன்றம் கடிவாளமிட்டதும் நாடறிந்ததே. கோவாவைப் போன்றே மணிப்பூரிலும் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரசை (28) ஆட்சியமைக்க அழைக்காமல் பாஜகவை (21) அழைக்க உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் ஆட்சி மாநிலங்களில் அமைவதை சகிக்கமுடியாத, தாங்களே ஆட்சியமைக்க வேண்டும் என்றபாஜகவின் பாசிச பாணியிலான நடவடிக்கைகள் ஜனநாயக அரசியல் நடைமுறைகளுக்கு ஆபத்தையே விளைவிக்கும். http://epaper.theekkathir.org/