SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 14, 2017

வறட்சி நிவாரணம் எங்கே? 200 மையங்களில் விவசாயிகள் மறியல் சென்னை, மார்ச் 14- வறட்சி நிவாரணத்திற்காக தமிழக அரசு கோரிய 39 ஆயிரத்து 565கோடி ரூபாய் தொகையை மத்தியஅரசு தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று தமிழகம் முழுவதும் ஆவேசமறியல் போராட்டம் நடைபெற்றது.மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இந்த சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.தருமபுரியில் விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், நாகை மாவட்டத்தில் துணைத் தலைவர் டி.ரவீந்திரன்,தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் துணைத் தலைவர் கே.முகமதலி உட்பட விவசாயிகள் சங்கமாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் தலைமையேற்றனர்.வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து நிலங்களுக்கும் நிவாரணம் வழங்குவதுடன், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வறட்சி காரணமாக தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்திற்கும் தலாரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தனியாரிடம் கடன் பெற்றுள்ளவர்களின் கடன் வசூலை முறைப் படுத்தவும், தள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முழக்கம் எழுப்பினர்.மேலும், விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரண உதவியாக தலாரூபாய் 10 ஆயிரம் வழங்குவதுடன், குடும்பத்திற்கு தலா 30 கிலோ இலவச அரிசி வழங்கவேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்கபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அரசு அறிவித்துள்ளபடி 150 நாட்கள் முழுமையாக பணி வழங்குவதுடன், வேலை கோரும் அனைவருக்கும் பணி வழங்கவும், சட்டப்பூர்வமான கூலியை பாக்கியில்லாமல் உடனுக்குடன் வழங்கவும் அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால் களை தூர்வார நடவடிக்கை எடுப்பதுடன், இத்திட்டத்தில் விவசாயதொழிலாளர்களுக்கு வேலைவழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம் பற்றாக்குறை ஏற்படாமல் மானிய விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முழங்கினர். http://epaper.theekkathir.org/