SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 17, 2017

ஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் யெச்சூரி பதிலடி புதுதில்லி, மார்ச் 17- ஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்றும், நாக்பூர் பல்கலைக் கழக நிகழ்ச்சியில் பங்கேற்பேன்என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.நாக்பூரில் ராஷ்டிரகந்த் துக்காதோஜி மகாராஜ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சனிக்கிழமையன்று (மார்ச் 18) ‘ஜனநாயகமும் அதன் மாண்புகளும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துவதாக இருந்தது. இப்பல்கலைக் கழகத்தின் அம்பேத்கர் சிந்தனைகள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தை, துணைவேந்தர் திடீரென்று காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.“நாங்கள் இது தொடர்பாக துணைவேந்தரை சந்தித்தோம். இந்தக்கூட்டம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. சில அமைப்புகள் அவரை அச்சுறுத்தியதாகத் தெரிவித்தார். ஆனால் எந்தஅமைப்பு என்று அவர் தெரிவிக்கவில்லை. எனினும் அந்த அமைப்பு ஏபிவிபி என்பது தெளிவான ஒன்று” என்று அம்பேத்கர் சிந்தனைகள் துறையின் தலைவரான பிரதீப் அக்லாவே செய்தியாளரிடம் கூறினார்.இதுகுறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது, “இந்தக் கூட்டம் ரத்துசெய்யப்படவில்லை. சில நிர்வாகக்காரணங்களுக்காக ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதற்குமேல் பேச விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிடின் ரவுத்,எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் தூதுக்குழுவினருடன் துணைவேந்தரை சந்தித்து, “நிர்ப் பந்தங்களுக்கு அடிபணியாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், “நாங்கள் துணைவேந் தரை சந்தித்த போது அவர் மிகவும் அழுத்தத்துடன் காணப்பட்டார். நிலைமையை எங்களிடம் விளக்கிக் கூறும்அளவுக்கு அவர் இல்லை. யெச்சூரியை அழைத்தால் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவர் கூறினார். ஏபிவிபியின் நிர்ப்பந்தம் இதன் பின்னே இருக்கிறது என்பது தெளிவு. யெச்சூரி ஒரு பயங்கரவாதி அல்ல. அவர் சிறந்த நாடாளுமன்றவாதியாக கடந்த 25 ஆண்டுகளாக சேவை செய்து கொண்டிருக்கிறார். அவர் ஓர் அறிவுஜீவி என்றும் அறியப்பட்டவர். அவரது பேச்சை எதிர்ப்பது என்பது நிச்சயமாக நேர்மையற்ற ஒன்று” என்றார்.இந்நிலையில், இதற்கு பதில் அளித்த சீத்தாராம் யெச்சூரி, ‘ஆர்எஸ்எஸ் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். நாளை (மார்ச் 18) நாக்பூர் பல்கலைக் கழகத்திற்கு செல்வேன்’ என்று கூறியுள்ளார்.(ந.நி.) http://epaper.theekkathir.org/