This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Saturday, March 11, 2017
பாசிச வெற்றி உலகத்துக்கு நாசம்... ட கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு ‘‘ஆளும் வர்க்கம், சாதாரண, ஜனநாயக வழியில், தொழிலாளர்களை அடக்க முடியாதபோது, பாசிச வழியைப் பின்பற்றுகிறார்கள்’’ ‘‘ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாசிசத்தையும் மக்களாட்சிக்கு எதிரான சக்திகளையும் மெய்யாகத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சக்தி, சோவியத் நாடு’’ என்று நேரு தெளிவாக உணர்த்தினார். சோவியத் நாட்டின் சிற்பி, லெனின் காட்டிய சமாதான சகவாழ்வுக் கொள்கையை அந்நாடு, வழுவாது, தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது. அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளமாக வாழும் நிலைமை கொண்ட நாடாக்கும் முயற்சியில், முனைந்து இருந்தது. அந்நிலையில், வேறுபக்கம், ஜெர்மனியில் இட்லர் ஆட்சிக்கு வந்தான்; ‘ஜெர்மன் இனமே, உலகில் சிறந்த இனம்; அவர்களே, மற்ற எல்லா மக்களையும் ஆளப் பிறந்தவர்கள்’ என்ற இனத் திமிர் கொள்கையைப் பரப்பினான். மிகத் தீங்கான இனத்திமிர் மருந்தை உண்ட, லட்சக்கணக்கான ஜெர்மனியர்கள், அந்த அடி முட்டாள்தனமான கருத்தை நம்பத் தலைப்பட்டார்கள்; கண்களை மூடிக் கொண்டு, இட்லரைப் பின்பற்ற முனைந்தார்கள்.இட்லர், தன் நாட்டை ராணுவ மயமாக்கினான். இராணுவத்திற்குக் கடுமையான பயிற்சி கொடுத்தான்; பொல்லாத போர்க் கருவிகளைத் திணித்தான்; பிற நாடுகளின் மேல், படையெடுக்கும் பொருட்டு ஆயத்தப்படுத்தினான்.மேற்கத்திய அரசுகள், ‘கம்யூனிசக் கிலி’ கொண்டு கிடந்தன. அக்கிலி, நாசிச, பாசிச எழுச்சியைப் பொறுத்துக் கொள்ளச் செய்தது. அவ்வரசுகள், கம்யூனிசம் பரவாதபடி, இட்லரால் தடுக்க இயலும் என்று மனப்பால் குடித்தன. அன்றைய மேற்கத்திய அரசுகளின் தலைவர்கள், எத்துணை சிறுபிள்ளைத்தனத்தில் வாழ்ந்தார்கள்!அங்கே, அப்படியிருக்க, இங்கே நம் தலைவர் ஜவஹர்லால்நேரு, பாசிசமும் நாசிசமும் எவ்வளவு தீய சக்திகள் என்பதை எளிதில் உணர்ந்து கொண்டார். அதோடு, அவற்றின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வேராக இருந்த, சமுதாய - பொருளியல் பின்னணியை அறிவுப்பூர்வமாக அலசிக் காட்டினார்.ஜவஹர்லால்நேரு, 1933ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 22ஆம் நாள், மகள் இந்திராவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் பாசிச இயக்கத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள், கீழ் நடுத்தர வர்க்கம் என்று அடையாளம் காட்டினார். தங்கள் ஆதாயத்திற்காக, பெரும் சுரண்டல் வர்க்கம், பாசிச இயக்கத்திற்கு, நிதி உதவி செய்வதை சுடடிக்காட்டினார்.‘‘ஆளும் வர்க்கம், சாதாரண, ஜனநாயக வழியில், தொழிலாளர்களை அடக்க முடியாதபோது, பாசிச வழியைப் பின்பற்றுகிறார்கள்’’ என்று நேரு அன்று எழுதினார். ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்குப் பிறகு, 1936 ஏப்ரலில், லக்னோ காங்கிரசின் தலைமை உரையில், நேரு, இதைப்பற்றி மீண்டும் குறிப்பிட்டார். இதோ அவரது உரை:‘‘ஐரோப்பாவில், முரட்டுத்தனமான, பாசிசமும் நாசிசமும் போரின் விளிம்பை நோக்கி நடந்தபடியே இருக்கின்றன. இவற்றின் இறுதி முடிவான போருக்காக, பெரும் பட்டாளப் பாசறைகள் முளைத்துள்ளன. சில நாடுகள் ஒன்றிணைந்து, பிற நாடுகளை தாக்க ஏற்பாடுகள் செய்கின்றன. அதேவேளை ஒவ்வொரு நாட்டிலுமுள்ள முற்போக்கு சக்திகள், பாசிசக் கொடுமையை எதிர்த்துப் போராட தோழமை கொள்கின்றன.‘‘ ஏகாதிபத்தியத்தையும் பாசிச பிற்போக்கையும் எதிர்க்கும் போராட்டத்தில் உலகத்தின் முற்போக்கு சக்திகளுக்கும், மக்களுக்கும் பூட்டப்பட்டுள்ள சமுதாய விலங்குகளை உடைத்து, மக்கள் அனைவரும் உரிமை பெறப்போராடுவோருக்கும், நாம் முழு ஒத்துழைப்பையும் நல்குகிறோம். ஏன்? நம் இரு சாராரின் போராட்டமும் ஒன்றே. மறுபடியும் 1938ல், நேரு ஐரோப்பிய கண்டத்தைச் சூழ்ந்துள்ள கரியப்போர் மேகங்களைப் பற்றி குறிப்பிட்டார். வரவிருக்கும் பெருந் தீங்கினைச் சுட்டிக்காட்டிவிட்டு, ‘‘எதிர்காலம் பற்றிய நம்பிக்கை நிறைந்திருப்பதற்குப் பெருங்காரணம், சோவியத் ரஷ்யாவும் அதன் சாதனைகளும், உலகப் பேராபத்து ஒன்று குறுக்கிடாவிடில், இந்த புதிய நாகரிகம் பிற நாடுகளுக்கும் பரவி, முதலாளித்துவத்திற்குப் பெருந்தீனியான போர்கள் இல்லாதபடி செய்துவிடும்’’ என்றார்.‘‘ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பாசிசத்தையும் மக்களாட்சிக்கு எதிரான சக்திகளையும் மெய்யாகத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சக்தி, சோவியத் நாடு’’ என்று நேரு தெளிவாக உணர்த்தினார்.மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, அனைத்துலக விவகாரங்களில் அவருடைய குரு, ஜவஹர்லால் நேரு ஆவார். அந்நிலையில், இந்திய தேசிய காங்கிரசின் பாசிச எதிர்ப்புக் கொள்கைக்கு உருவம் கொடுப்பதில், ஜவஹர்லால் நேரு, முக்கியப் பங்கு கொண்டார்.1937 ஏப்ரலில் அலகாபாத்தில் கூடிய இந்திய காங்கிரசு செயற்குழுவும் 1937 அக்டோபரில் கல்கத்தாவில் கூடிய அனைத்திந்திய காங்கிரசு குழுவும் இத்தாலி, எதியோப்பாவைப் படையெடுத்ததையும் ‘நாசி ஜெர்மனி, செக்கோஸ்லோவாகியாவின் உரிமையைப் பறிக்க முயல்வதையும் வன்மையாகக் கண்டிப்பதாக முடிவு எடுத்தன.காங்கிரசு செயற்குழு, 1939 செப்டம்பரில், வார்தாவில் கூடியபோது, ‘‘பாசிசமும், நாசிசமும் போரையும் வன்முறையையும் போற்றி, மனித உணர்வுகளை மதித்தழிப்பதால், அக்கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்’’ என்று ஒரு முடிவு எடுத்து அறிவித்தது.1939 மே திங்கள், ‘டைம்ஸ்’ பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் ஜவஹர்லால் நேரு, பின்வருமாறு கூறினார்:‘‘நாங்கள் பாசிச எதிர்ப்பாளர்கள். பாசிச வெற்றி உலகத்திற்கு நாசம் என்பது மட்டுமல்லாது, எங்கள் விடுதலைக்கும் கேடாகும்’’.மக்கள் இனத்தின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் பாசிசம் பெருங்கேடு என்பதை இந்திய தேசிய இயக்கத் தலைவர்கள், தெளிவாக உணர்ந்திருந்தார்கள் என்பதை மேற்கூறியவை காட்டுகின்றன. இந்தியர்களில் பிற பிரிவினர்களும் அத்தகைய தெளிவுபெற்று வந்தார்கள். மொத்தத்தில், பாசிசத்தின் தீமையையும் அதை எதிர்த்துப் போராடத் தவறினால், எத்தகைய கேடுகள் விளைவுமென்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். தொடரும்... இந்திய சோவியத் நட்புறவு ஒப்பந்தம்: பயன்மிகு பத்தாண்டுகள் நூலிலிருந்து http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
