This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Saturday, March 11, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு வடகாட்டில் தொடரும் போராட்டம் அறிவியல் இயக்கம் ஆய்வு புதுக்கோட்டை, மார்ச் 11- ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என அறிவித்து வடகாட்டில் 7-வது நாளாக சனிக்கிழமையன்றும் தொடர்ந்து போராட் டம் நடைபெற்றது.வழக்கம்போல தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பயிர்களைச் சுமந்தும் கருப்புக் கொடிகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சங்கு ஊதியும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் கவனகன், மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மூத்த நிர்வாகி கருணாகரன், மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து ஆகியோர் கொண்ட குழு எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்டுள்ள வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வானக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது. மேலும், அந்தக் குழுவினர் வடகாட்டில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டு தங்களது ஆதரவினையும் தெரிவித்துப் பேசினர். எஸ்.டி.பாலகிருஷ்ணன் பேசும்போது, அனைத்துவிதமான விவசாயத்திற்கும் ஏற்ற மண் வளத்தைக் கொண்ட இந்தப் பகுதியில் இதுபோன்ற திட்டத்தை கொண்டுவருவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத அரசுகளே இதுபோன்ற வளமான பூமியை பாலைவனமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும். இத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப் பட்டு தகுந்த ஆதாரத்தோடு நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அறிக்கைகள் முன்வைக்கப்படும் என்றார்.போராட்டத்தில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், நாசாவில் பணியாற்றிய எஸ்.பார்த்திபன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நவீன், தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் மற்றும் வடகாடு கிளை நிர்வாகிகள் தங்க.திருப்பதி, ராஜாராம், கோ.முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன் உள்ளிட்ட பலர் பேசினர். பாடகர்கள் குப்புச்சாமி, செல்வி ஆகியோர் விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினர். http://epaper.theekkathir.org/
Labels:
Pudukottai
