This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 6, 2017
‘‘கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் பட்ஜெட்’’ மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கேரள இடதுஜனநாயக முன்னணிஅரசு 2017-18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த மார்ச் 3 அன்று தாக்கல் செய்துள்ளது. மாநிலநிதியமைச்சரும் பொருளாதாரநிபுணருமான டி.எம். தாமஸ் ஐசக்தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கியஅம்சங்கள் வருமாறு:ட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள சேவை வழங்கும் திட்டம் செயல்வடிவம் பெறும்.’’ ட மாநில பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் 2500 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும்.ட அரசு பள்ளிகளில் 45,000 வகுப்பறைகள் இணையதள வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட கட்டிடங்களுக்கு மாற்றப்படும். ட மாநிலப் பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டிற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திட்டமிடப்படாத திட்டங்களுக்கான ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ட பள்ளிக் கல்வித்துறையின் வளர்ச்சிக்கு ரூ.863 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ட பெண்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பெண்கள் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்காக 68 கோடியும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பெண்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.8 கோடியும் புதிய பூங்காக்கள் மேம்பாட்டிற்காக ரூ.10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ட மாநிலம் முழுவதும் சிறந்த இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 10,000 இளம் கலைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படும்.ட கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு (கேஎஸ்ஆர்டிசி) ரூ.3000 கோடி ஒதுக்கீடு ட சபரி மலை சிறப்புத் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ட நீர்நிலைப் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படையில் நீர்நிலைகள் பராமரிப்புப்பணிகள் செயல்படுத்தப்படும். ட அனைத்துவிதமான வாழ்நாள் நோய்களுக்கும் முதன்மையான மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும். நீரழிவு மற்றும் கொழுப்பு மற்றும் புரதச் சத்து குறைபாடுகள் ஏற்படும் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். இலவச சுகாதார திட்டங்களை மேம்படுத்திட ரூ.2000 கோடி ஒதுக்கீடு. ட மருத்துவத்துறையில் மருத்துவர்கள் உட்பட அதிகபட்சமாக 5000 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும். ட கழிவு நீர் பராமரிப்புக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ட கையால் மலம் அள்ளும் கொடுமைகேரளாவில் முழுமையாக முடிவுக்குகொண்டு வரப்படும். ட மாநில தலைநகர் திருவனந்தபுரம் உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்.ட குழந்தைகள் நல மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.1621 கோடி ஒதுக்கீடு. ட கொடிய உயிர்கொல்லியான எண்டோ சல்பானால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.10 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் கருணா திட்டத்திற்கான ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ட வீடற்ற ஒரு லட்சம் மக்களுக்கு சொந்த வீடு கட்டித்தரப்படும்.ட கயிறு (தென்னைநார்) தொழில் மேம்பாட்டிற்காக ரூ.128 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 கோடி கயிறு தொழிலாளர் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ட மாநிலத்திலுள்ள துறைமுகங்களின் மேம்பாட்டிற்காக ரூ.39 கோடி ஒதுக்கீடு. ட தென்னை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக ரூ.45 கோடி ஒதுக்கீடு. ட மிளகு மற்றும் ஏலக்காய் விவசாயத்தின் மேம்பாட்டிற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ட குட்டநாடு மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் நெல் உற்பத்திக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.ட மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் புத்தாக்க செயல்திட்டத்திற்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு.ட ஐடி துறை மேம்பாட்டிற்காக ரூ.549 கோடி; ஐடி மிஷன்திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. ட தகவல் தொழிற்நுட்ப பூங்கா மூலம் வரும் 2020க்குள் 1லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.ட மின் உற்பத்தி திட்டங்களுக்காக ரூ.968 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கேரள மாநில தொழிற்துறை வாரியத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்நிறைவேற்றப்படும். இவ்வாறு தாமஸ் ஐசக் கூறினார். மேலும் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும் பொருளாதார சரிவு மற்றும் முடக்கம்ஏற்பட்டுள்ளது என்றும் கூறிய தாமஸ் ஐசக், அதிலிருந்து மீள்வதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார். http://epaper.theekkathir.org/
Labels:
KERALA BUDGET
