This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 6, 2017
நமது உரையாடலே நமக்கான ஊடகம் இல.சண்முகசுந்தரம் **********************************பன்னீர்செல்வத்தை அடிச்சு மிரட்டியிருப்பாங்களோ; அத்தை மாதிரியே இருக்குப்பா இந்த தீபாவும் அரசியலுக்கு வந்துருமோ; கூவத்தூர்ல இந்த எம் எல் ஏக்கள் என்னதான்பா பண்ணிக்கிட்டு இருந்தாங்க; சசிகலாவுக்கு வீட்டுச் சாப்பாடுதான் போகுதாம், ‘ஆனாஇன்னும் ஏசி ரூம் கொடுக்கலையாம்; ஸ்டாலின்சட்டையை யாரு கிழிச்சிருப்பா, அவரா, அவரு கட்சிக்காரரா இல்லே போலீஸா..?பேருந்துகளிலும், ரயில் பயணங்களிலும், தேநீர் கடைகளிலும், முடிதிருத்தும் நிலையங்களிலும், தொழிற்சாலைப் பேச்சுகளிலும் இப்படியான உரையாடல்கள்தான் சில நாட்களாய்த் தொடர்கின்றன. ஜல்லிக்கட்டு, நெடுவாசல் களங்கள் குறித்தான கருத்துரையாடல்கள் அவ்வப்போது எழுந்தாலும் அரசியல் என்றாலே மக்கள் விவாதித்துக்கொள்வது இப்படியான கருத்துக்களைத்தான். பேசப்படும் சம்பவங்களும், கருத்தும் தான் காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கிறதேயொழிய, அரசியல் குறித்தான இந்தப் புரிதல், இன்றும் அதேதான்.ஆக, நீண்ட காலமாகவே இப்படித்தான் தொடர்கின்றன என்றாலும், இதனுள்ளிருந்து அடிப்படையான கேள்விகள் மட்டும் மக்களுக்கு எழவே மாட்டேன்கிறதே, அது ஏன்? அதுதான் இன்றைய ஊடகங்களின் ‘‘மிகச்சிறந்த’’ அரசியல் பங்களிப்பாகும். இந்த சமூகத்தை தனது தேவைகளுக்காக எப்படிப் பண்படுத்துவது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த நுண்ணரசியலில் கை தேர்ந்த ஊடகங்களே லாபம் கொட்டும்ஊடகங்களாக மாறமுடியும் என்பதால், அவர்களின் லட்சியமே இந்த அரசியலில்இன்னும் இன்னும் முன்னேறிக்கொண்டிருப்பதுதான். பன்னீர்செல்வம் மண்டல வாரியாகச் சென்று கூட்டம் நடத்துகிறாராம். ஒருசெய்திக்கு குறைந்தது இரு புகைப்படங்களுடன் ஐந்தாறு பத்திகளில் செய்தி வெளியிடுகிறார்கள். வெளியிடட்டும், அது அவர்களது உரிமைதான். ஆனால், எந்த நோக்கத்திற்காக வெளியிடுகிறார்கள் எனப்பேசுவது நமது உரிமை. ஏன் எனில், இத்தகைய செய்திகளை வெளியிடுவதன் மூலமாகத்தான் மேற்கண்ட விவாதங்களை மக்களிடம் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஊடகங்களின் நோக்கமுமாகும். அந்த விவாதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டுமெனில், நாம் ஊடகங்கள் குறித்துப் பேசியே ஆகவேண்டியிருக்கிறது.தீபா வீட்டுமுன் தொண்டர்கள் கூட்டம் கூடினார்கள் என்று அநேகமாய் வாரமிரு முறை செய்திகள் வந்துவிடுகின்றன. அவரும் பேட்டிகொடுத்துக்கொண்டேயிருக்கிறார். ஆனால், கொள்கையைப் பற்றிக்கேட்டால் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார். கொள்கையே தெரியாத ஒரு கட்சியில், உறுப்பினர்களே சேர்க்கப்படாத ஒரு கட்சியில் நிர்வாகிகள்மட்டும் அறிவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இப்போது அவருக்கும் அவரின் கணவருக்கும் இருக்கும் பிரச்சனை வேறு கட்சிக்குள்நுழைந்துவிட்டதாம். சசிகலா கடிதம் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுதான் இரண்டு நாளைக்கான பெரிய செய்தி. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை அநேகமாய் இன்னும் இரண்டு வருடங்களுக்காவது எழுதவும், பேசவும் செய்வார்கள் போல் இருக்கிறது. இராமதாசும், அன்புமணியும் ஆளுக்கொரு அரைப்பக்க அறிக்கையை தினம் கொடுக்கிறார்கள். ஸ்டாலின் வீட்டுவாசலில் பேட்டிகொடுக்கிறார். பின்னர் கட்சி அலுவலக வாசலில் வைத்து பேட்டி கொடுக்கிறார். அப்புறம் எங்கெல்லாமோ வைத்து பேட்டி கொடுக்கிறார். ஆனால், என் சட்டையைக் கிழிச்சிட்டாங்க என்று மட்டும்தான் எல்லாப் பேட்டிகளிலும் சொல்லுகிறார். இது போதாதென்று ஊரில் இருப்பவர்களையெல்லாம் தீவிரவாதிகள், தேசவிரோதிகள், பயங்கரவாதிகள் எனச்சொல்லும் பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகியின் பேட்டிகள் வேறு, அன்றாடம் ஐந்தாறு வருகின்றன.மற்றொரு பக்கத்தில், நியாய விலைக்கடைகளில் பருப்பு இல்லை என்பது போலான மக்கள் பிரச்சனைகளையும், அத்தோடு அதுகுறித்த பலரின் அறிக்கைகளையும் இடையிடையே செய்திகளாக வெளியிடத்தான் செய்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் குறித்த அவ்வப்போதைய போராட்டங்களையும், முக்கியத் தகவல்களையும் வெளியிடுவதையும் மறுக்கமுடியாதுதான். ஆனாலும், ஊடகங்கள் தங்களுக்குள் ஒரு நோக்கம் கொண்டுசெயல்படுவதையும் அப்பட்டமாய் காணமுடிகிறது என்பதே உண்மையாகும். ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அதை அரசின் கஜானாவில் சேர்க்கவேண்டும் என ஒரு கோரிக்கை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் கடந்த ஐந்து நாட்களாக நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் மாநிலமெங்கும் எழுப்பப்படுகிறதே; ஏன் கண்டுகொள்ள மறுக்கின்றன ஊடகங்கள்?பன்னீர்செல்வமும், எடப்பாடியும் ஒரேகொள்கையுடைவர்கள்தான்; ஊழல்வாதிகள்தான்; பதவிக்காக மட்டுமே தங்களுக்குள் போட்டியிட்டுக்கொள்கிறார்கள், எனவேஇருவரையும் மக்கள் புறக்கணிக்கவேண்டுமென ஒரு அறைகூவலை விடுக்கிறதே மார்க்சிஸ்ட் கட்சி, அதை ஏன் மக்களிடம்சொல்ல மறுக்கின்றன இந்த ஊடகங்கள்? தீபா வீட்டு வாசல் முன் நிற்கும் கூட்டத்தை விட இந்தக்கேள்விகள் எழுப்பப்படும் வீதிகளில் நிற்கும் மக்கள் கூட்டம் அதிகம். ஆனால், பலஊடகங்களில் இந்தக்கேள்விகளை இரு பத்திச்செய்தியாக கூட வெளியிடத் தயார் இல்லையே, ஏன்?வாக்களித்த மக்கள் தவித்த வாய்க்கு தண்ணீரில்லாமல் அலைகையில், தண்ணீர் தர வக்கில்லாத இந்த அதிமுக அரசு பத்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீரை விற்கிறது என மார்க்சிஸ்ட் தலைவர்கள் சொல்லும் வார்த்தைகளை ஏன் செய்தியாகக் கூட வெளியிட மறுக்கிறார்கள்?மக்களிடம் இப்போது ஒரு கோபம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக திராவிடக் கட்சிகள் ஊழல்கட்சிகள் என நிரூபிக்கப்பட்டிருக்கும் சூழல் இது. ஆகையால், தமிழக அரசியலில் இப்போதுஒரு வெற்றிடம் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை இடதுசாரிகள் நிரப்பிவிடக்கூடாது என்பதில் ஊடகங்களுக்கு உள்ள தெளிவுதான் மக்கள் பிரச்சனைகளும், பரப்புரை இயக்கச் செய்திகளும் புறக்கணிக்கப்பட காரணமாகும்.உணவுப்பாதுகாப்புச் சட்டம் என மத்திய அரசு பேசத்துவங்கிய காலம் முதலே அதன்சூட்சுமத்தை புரிந்து கொண்டு எதிர்ப்பியக்கத்தைத் தொடர்ந்து நடத்தி புதுதில்லி வரை சென்று போராடியவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். அப்போது முதலே இதெல்லாம் செய்தியாக வந்திருந்தால் என்னாகியிருக்கும்? ரேசனுக்காக தொடர்ந்து போராடுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று மக்கள் புரிந்திருப்பார்கள் அல்லவா? எனவே போராட்டமோ, பரப்புரையோ, பொதுக்கூட்டமோ இடதுசாரிகள் எந்தப் பிரச்சனையில் எப்போது முன்னெடுத்தாலும் அதை மக்களிடம் இருந்து மறைப்பதே ஊடகங்களின் நோக்கமாகும். நியாய விலைக்கடைகளில் பருப்பு இல்லாதது குறித்து பல செய்திகளைச் சேகரித்து வெளியிடுவார்கள். ஆனால், மறந்தும் கூட இதை அன்றே பேசியது மார்க்சிஸ்ட் கட்சி தான் என்று மட்டும் சொல்லிவிடவே மாட்டார்கள். ஆனால், நான் அன்றே சொன்னேன் என சசிகலா கொடுக்கும் பேட்டியை மட்டும் ஐந்தாறு பக்கங்களுக்குப் பிரசுரிப்பார்கள். ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு முதலாளிக்குரியது என்றாலும், நோக்கம் பொதுவானதாகும். சில தலைவர்களைச் சுற்றியே தமிழக மக்களின் மொத்தக்கவனமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் இந்த ஊடக ஏற்பாடு, மக்களை பரபரப்பாகவே வைத்திருக்கும் முதலாளித்துவ அரசியல் திட்டமிடுதலின் மையப்புள்ளியாகும். ஆக, நாம் ஏன் ஊடகங்கள் குறித்துப் பேசவேண்டியிருக்கிறது எனில், இன்றைய ஊடகங்களைப் பற்றியான பொதுவான புரிதலுக்கு மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் நமது உரையாடல்கள் மூலம் ஊடகமாகவே மாறவேண்டியிருக்கிறது என்பதை அழுத்தமாய் ஆணித்தரமாய் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய தமிழக அரசியலில் மக்கள்சந்திக்கும் பிரசச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும், அவை தீர்க்கப்பட வேண்டும் என மக்கள் சந்திப்பு பரப்புரை இயக்கத்தை பிப்ரவரி 20 அன்று துவக்கி, இப்போது ஊர்தி பரப்புரை என இரண்டாவது கட்டத்தை முடித்திருக்கிறோம். தொடரட்டும் நமது மக்கள் சந்திப்பு இயக்கங்கள். மக்கள் கூடும் ஒவ்வொரு இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் நாமே ஊடகமாக மாறி உரையாடுவோம் மக்களுடன். http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR
