SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 7, 2017

உப்புக்கடலில் மீண்டும் சிந்தும் மீனவர் ரத்தம் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற 21வயதேயான மீனவ இளைஞர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மீனவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்காமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்திய கடல் எல்லையான ஆதம்பாலம் அருகில்தான் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும் எனினும்இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைதுப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தாது என்று மோடிஅரசு பொறுப்பேற்றபிறகு உடன்படிக்கைஏற்பட்டது.இது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தமிழக பாஜகவினர் வழக்கம் போல கூறி வந்தனர். ஆனால் தற்போது தமிழக இளம் மீனவர்ஒருவர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு மோடி அரசுஎன்ன பதில் சொல்லப்போகிறது என்று தெரியவில்லை. குறைந்தபட்சம்இலங்கைத்தூதரை நேரில் அழைத்து கண்டிக்கவேண்டும்.இலங்கை அரசிடம் இந்தியாவின்சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு எங்கள்நாட்டு குடிமக்களுக்கு எதிராக இத்தகைய அநீதிகளை சகித்துக் கொள்ள முடியாது என்பதை உறுதிபட தெரிவித்திட வேண்டும்.ஆனால் இலங்கை அரசு, மீனவர் பிரிட்சோ கொலைக்கும் தங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமுமில்லை என்று மறுத்துள்ளது. தங்களது நாட்டின் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வாய்ப்பேயில்லை என்று இலங்கை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.கடந்த காலங்களிலும் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது இலங்கை அரசு இத்தகைய மறுப்புகளை தெரிவித்துள்ளது. ஆனால் இதுவரை 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக மீனவர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. மீனவர்களின் படகுகளை பிடித்துச்செல்வது, வலைகளை அறுத்தெறிவது, அடித்து உதைத்து சித்ரவதை செய்வது போன்ற கண்டிக்கத்தக்க செயல்கள் நடந்து வந்தாலும் சமீப காலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திகொலை செய்வது என்பது நின்றிருந்த நிலையில்மீண்டும் துவங்கியிருப்பது மீனவர்களை மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நாங்கள் கடலுக்கு கொள்ளையடிக்கச் செல்லவில்லை. பிழைப்பதற்காகவே செல்கிறோம். எங்கள் உயிருக்கும் உடமைக்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநில அதிமுக அரசு வழக்கம் போல கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல் மோடி அரசுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தரவேண்டும். கடல் அலை ஓயாது என்பார்கள். அந்த கடலுக்கு பிழைக்கச் செல்லும் மீனவர்களின் கண்ணீரும் ஓயாமல் தொடர்வது கவலையளிக்கிறது. http://epaper.theekkathir.org/