SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 7, 2017

என்னது, மகளிர் தினமா? +++++++++++++++++++++++கோவை இராமநாதபுரம் கருணாநிதி நகரின் குறுகிய தெருக்களில் வேகவேகமாக கீழே கிடந்த கழிவுகள், குப்பை கூளங்களை பெருக்கிக் கொண்டிருந்தனர் மூன்று துப்புரவு தொழிலாளிகள். அவர்களிடம் சென்று மார்ச்-8 புதன்கிழமை மகளிர் தினம்... உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டோம்... என்னது, மகளிர் தினமா? அட போம்மா சாப்பிடக் கூட எங்களுக்கு நேரமோ, இடமோ கிடையாது என அலுத்துக்கொண்டனர். பின்னர் மெதுவாக பேச்சு கொடுத்தபோது, எங்க கஷ்ட்டத்த விடிய விடியசொன்னாலும் தீராது என்றார் துப்புரவுத் தொழிலாளி சாந்தி. அதிகாலைலஎழுந்து பள்ளிக் கூடத்துக்கு போறபிள்ளைகளுக்கு சாப்பாடு சமச்சுவச்சுட்டு 6 மணிக்கு முன்னாடி வேலைக்கு வரனும். பிள்ளைகளுக்காக இத்தனபாடு பட்டும் பிள்ளைகள் படிக்கப்போறஅழக பார்க்கத்தான் கொடுத்து வைக் கல. காலை வார்டுகள்ல இருக்கிற குப்பைகளை சுத்தம் செஞ்சுட்டு திரும்பிவீட்டுக்கு போக மணி 2 ஆகும். டெங்கு பன்றிக்காய்ச்சல், உயரதிகாரிகள் யாராவது வர்றாங்கன்னா அப்பல்லாம் 4 மணி5 மணி வரை கூட ஆகும். ஆனா மத்த வேலைகள்ல இருக்குறவங்களுக்கு மாதிரி எங்களுக்கு சாப்பாடுறதுக்கு நேரம், இடம் எதுவும் இல்ல. அத்தனை அசிங்கங்களையும் நாங்க வெறும் கையில தான் எடுக்கனும். எப்பயோ ஒருதடவ கையுறை கொடுத்தாங்க அது 2 நாளைக்கு கூட தாங்கல. பிஞ்சு போச்சு. மேல போட்டுக்கிறதுக்கு ஒரேஒரு கோட்தான் கொடுத்தாங்க. அதயேதான் நாங்க துவச்சு துவச்சு போட்டுக் கனும்.. தலைக்கு தொப்பி எல்லாம் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனா எங்களுக்கு அது எல்லாம் இல்ல.ஏன் வேலை பாக்கிறபோது ஒன்னுக்கு,ரெண்டுக்கு வந்தாகூட பொதுக்கழிப்பிடங்களுக்குத்தான் போகனும். அங்கேயும் காசு கொடுத்தாதான் போக விடுவாங்க. இவ்வளவும் சகிச்சுக்கிட்டுதான் இந்த வேலைய பார்க்கிறோம். ஆனா எங்கள ஒப்பந்த தொழிலாளியாத்தான் வைச்சிருக்கு அரசு. நிரந்தர தொழிலாளியா மாத்துறதுக்கு அரசு எந்த ஏற்பாடும் செய்யுற மாதிரி தெரியல. இப்பவரைக்கும் 6000 ரூபாய்தான் தர்றாங்க.லீவு எல்லாம் கிடையாது. வேலைக்குவரலன்னா சம்பளத்த புடுச்சுக்கிடுவாங்க.குடும்ப சூழல் காரணமா பிழைக்க வேற வழியே இல்லைங்கிறதாலதான் இங்க வேலைக்கு வருகிறோம். எங்ககூட வேலைபார்க்கும் பெரும்பான்மையான பெண்கள் விதவைகள் தான் என்றார் சாந்தி. மதுப்பழக்கத்தால் கணவரை இழந்து தனது 3 குழந்தைகளுடன் வாழ்க்கையில் இன்றும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருப்பவர் சாந்தி. வட்டிக்கு வாங்கினாத்தான் பேங்குலா இருப்பே வைக்க முடியும்... சாந்தியைத் தொடர்ந்து பேசிய ராதா நாங்க மழை வெய்யில்ன்னு பாக்காம எல்லா நாளும் வேலைக்கு வர்றோம். எங்களுக்கு எந்த ஒரு அங்கீகாரத்தையும் கொடுக்க அரசு விரும்பவில்லை என்கிறபோதுதான் கஷ்டமாகஇருக்கிறது. அதுமட்டும் இல்லாம இப்பவங்கில 5000ரூபாய் இருப்பு தொகைவைத்திருக்கனும் என்று சொல்லிருக்காங்க. எங்க சம்பளமே 5000தான். இப்ப இருப்பு தொகை வைக்க நாங்க தனியா வட்டிக்குத்தான் வாங்கனும். என்ன இழவோ புதுசு புதுசாசொல்றாங்க... எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல... என்றார். முதல்ல சாராயக்கடைய மூடுங்க... எங்க கஷ்டங்கள் எல்லாத்தையும் தாண்டி இந்த சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறோம். அதுலேயும் மண்ண அள்ளி போடுறது போல டாஸ்மாக் இருக்கு. எங்கவீட்டுல சம்பாரிக்கும்அத்தனை பணமும் மதுக்கடைக்கு தான் போகுது. கல்யாணம் ஆனதில்இருந்து கணவருக்கும் குழந்தைகளுக்கும் நான் சம்பாரித்துதான் சோறு போடுகிறேன். என் கணவர் சம்பாரித்து எல்லாத்தையும் டாஸ்மாக்குல போடுறாரு.. பெண்களுக்கு ஏதாவது உதவிசெய்றதா இருந்தால் அரசு முதலில் மதுக்கடைய மூடட்டும். அப்பரம் பாப்போம் மகளிர் தினத்த... என்று சலிப்புகலந்த பொருமலை வெளிப்படுத்தினார் அமிர்தம். கம்ப்யூட்டர் பில் கொடுத்தா கணக்கே பாக்காம காச நீட்டுவாங்க.. அதிகாலை 3 மணிக்கு மார்க்கெட் டுக்குப் போனால் தான் 6 மணிக்கு வியாபாரத்திற்கு வரமுடியும். காலைல ஒரு டீயும் பிஸ்கட்டும் மட்டும் தான் சாப்பாடு. மதியம் வீட்டுக்கு போக 2 மணி கூடஆகிடும். மழைக்காலங்களில் கீரைகிடைக்கும், ஆனா விலை குறைஞ்சிடும். வெயில் காலத்தில் கீரை கிடைக்காது, ஆனா விலை அதிகமாகும். ஒரு நாளைக்கு 1000ரூபாய்க்காவது ஓடினால்தான் செலவு எல்லாம் போக 200 ரூபாய் கிடைக்கும். பெரிய கடைகளில் கம்ப்யூட்டர் பில்ல நீட்டின உடனே காசகொடுங்கிறவங்க எங்ககிட்ட ரூ1க்கும்2க்கும் வாக்குவாதம் பண்ணுவாங்க. ஒருநாளைக்கு 12 மணி நேரம் வரைவியாபாரத்துக்காக ஓடியாடி சம்பாதித் தேன். ஆனா பாருங்க திடீர்னு ஒருநாள் 500, 1000 ரூபா நோட்டு செல்லாதுன்னு சொல்லிட்டாங்க.. எல்லாரும் ஓடி ஓடி பணத்த மாத்த போனாங்க.. ஆனா அப்பக் கூட என்கிட்ட ஒரு 500 ரூபா தாளுகூட இல்ல. அப்பத்தான் இத்தனை வருட வாழ்க்கையில நான்சம்பாதித்தது என்னாண்னு எனக்கே புரிஞ்சது. 14 வருடங்களுக்கு முன்னாடிஎன் கணவரை இழந்தேன். இந்த கீறயாவாரத்தின் மூலந்தான் 3 குழந்தைகளையும் ஆளாக்கினேன். என்னோடமூனு பிள்ளைகளும் பெரிய பசங்களா வளர்ந்துட்டாலும் இன்னும் நான்தான் அவங்க வாழ்க்கையில ஏற்படுகிற மேடுபள்ளங்களை( பணம்) சரி செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் எத் தனை நாளுக்கு தினமும் 12 மணி நேரம்ஓடி உழைக்க முடியுமோ தெரியல.. என்றார் கீரைக்கார அக்கா சிவக் குமாரி.மகளிர் தினம் பற்றி தெரியுமா என்றவுடன், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமேபடித்த எனக்கு என் கணவர்தான் எழுத்துக்களை கூட்டி வாசிக்க சொல்லிக் கொடுத்தார். அதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்மா என்றார் அவர்.மகளிர் தினக் கொண்டாட்டத்தின் முக்கியப் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய உழைக்கும் பெண்களில் பெரும்பகுதியினருக்கு இது குறித்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் இன்றைய எதார்த்தமாக இருக்கிறது. சாப்பிட நேரமும் இல்லை, இடமுமில்லை.. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைத்தாலும் ஒரு நாள் கூடஓய்வுக்கு இல்லை.. ஆனால் நாம்தான்அடுத்த வல்லரசு என்கின்றனர் ஆளும்வர்க்கத்தினர். இந்த நகைமுரணுக்கிடையேதான் பெண்கள் நம்பிக் கையுடன் சம உரிமையை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது. - எம். பாண்டீஸ்வரி http://epaper.theekkathir.org/