SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, March 6, 2017

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா? ****************************பெட்ரோல், டீசல் விலையை மோடி அரசு அடிக்கடி உயர்த்தி சாதனை நிகழ்த்துவதுண்டு. தற்போது அதற்குப் போட்டியாக தமிழக அதிமுக அரசும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரி 27 சதவிகிதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 21.43 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை ரூ.3.78 என்ற அளவிலும்,டீசல்விலை 1.78 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளன.தோட்டத்தில் பாதி கிணறு என்பது போலபெட்ரோல், டீசல் விலையில் பாதி அளவுக்குமத்திய அரசு வரியாக சுருட்டிக் கொள்கிறது. சர்வதேசச்சந்தையில் எண்ணெய் விலை குறைவால் கிடைக்கும் ஆதாயம் மக்களுக்கு கிடைக்காமல் செய்யவே இத்தகைய நயவஞ்சக வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.இச்சூழலில் மாநில அரசு மோடி மாடலில் விலைகளை உயர்த்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். விலையைக் கூட்டுவதற்காக தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தில் அரசு மார்ச் 3ம்தேதி அவசரமாக ஒருதிருத்தத்தையும் கொண்டு வந்து விலை உயர்வுக்கு வழி வகுத்தது.தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் அடுத்து சமர்ப்பிக்கப்பட உள்ளது. சட்டமன்றம் கூட உள்ள தருணத்தில் திடீர் அறிவிப்பு மூலம் விலையை உயர்த்துவது மக்களை மதிக்காத போக்காகும். பாஜக, காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு கைவந்த இந்த தந்திரத்தை அதிமுக ஆட்சியும் பின்தொடர்கிறது.விலை உயர்வுக்கான எந்தக் காரணத்தையும் மாநில அரசு தெரிவிக்காமல் ஆணவமாகச் செயல்பட்டுள்ளது. ஏற்கெனவே மாநில அரசுபெட்ரோல், டீசல் மீது கணிசமாக வரி வசூலித்து வருகிறது. திடீரென லிட்டருக்கு நான்கு ரூபாய் அளவுக்கு கூடுதலாக கொடு என்பது வழிப்பறி கொள்ளை போன்ற செயல் அல்லவா? தற்போதுஅறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு சங்கிலித் தொடர்போல விலைவாசிகளை மேலும் உயர்த்தும்.தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் ரேசன்கடைகள் முடங்கிக் கிடக்கின்றன. பருப்பு,சமையல் எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டு ள்ளது. அரிசி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் சாக்குப் போக்குச் சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார்.தமிழகம் இன்று என்றுமில்லாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வறட்சியின் கோரத்தாண்டவத்தால் விளைநிலம் பாலைவனமாகிக்கிடக்கிறது. மாநில அரசோ மக்களைப் பற்றிகவலைப்படாமல் உட்கட்சி சண்டையில் மூழ்கிக்கிடக்கிறது. விவசாயிகளின் தற்கொலை,குடிநீர் பஞ்சம், வறட்சியால் அகதிகள் போலமக்கள் இடம் பெயர்தல், தீவிரமாகி வரும் வேலையின்மை போன்ற பிரச்சனைகளால் தமிழகம்பரிதவிக்கிறது. சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைத் தாக்கிய வர்தா புயலின் பாதிப்புகளும் வறட்சியோடு சேர்ந்துள்ளன. ஆனால் உரிய வறட்சி நிவாரண உதவியைத் தராமல் மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இச்சூழலில் உதவிக்கரம் நீட்ட வேண்டிய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிகோலுவது அடாத செயலாகும். பெட்ரோல் - டீசல் விலை உயர்வை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.