This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Monday, March 6, 2017
தேச விரோதி யார்? *********************புதுதில்லி, மார்ச் 6- தில்லியில், ஏபிவிபி மாணவர் அமைப்பு மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக அனைத்துத்தரப்பு மாணவர் அமைப்புகளும் ஒன்றுபட்டு தில்லியில் மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர்.‘வன்முறையை எந்தவிதத்திலும் ஏற்க மாட்டோம்’ என்று அவர்கள் முழக்கமிட்டவாறு பேரணியில் வந்தார்கள்.‘குடிமக்கள் பேரணி’ (ஊவைணைநளே ஆயசஉh) என்னும் பெயரில், தில்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும், சுயேச்சையான அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்ற இப்பேரணி சனிக்கிழமையன்று தில்லி மண்டி ஹவுசிலிருந்து நாடாளுமன்ற வீதிநோக்கி வந்தது.பிப்ரவரி 22, 23 தேதிகளில் தில்லி வடக்கு வளாகத்தில் ரம்ஜாஸ் கல்லூரியில் ஏபிவிபியால் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து இப்பேரணி நடைபெற்றது. இதில் அகில இந்திய மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம்,அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு, தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜேஎன்யு மாணவர்தலைவர்கள் கன்னய்ய குமார்,உமர் காலித், ஷீலா ரஷீத் உள்ளிட்டோரும், எந்த மாணவர் அமைப்பிலும் சேராத மாணவர்களும் ஏபிவிபியின் நடவடிக்கையைக் கண்டித்து நடைபெற்ற இப்பேரணியில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. ‘ஆசிரியர்கள் தாக்கப்பட்டதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சில ஆசிரியர்கள் கல்லூரிக்கு வருவதற்கே அஞ்சுகின்றனர்’ என்று அபினாஷ் என்கிற மாணவர் கூறினார். இவர் ரம்ஜாஸ் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவராவார்.பேரணியில் பங்கேற்ற திரைப்படத்தயாரிப்பாளரும், முன்னாள் பேராசிரியருமான பங்கஸ் புடாலியா கூறுகையில், ‘நாடு போய்க்கொண்டிருக்கும் பாதை மிகவும் பயங்கரமாக இருக்கிறது. மாணவர்களின் சிந்தனையை கழுத்தை நெரித்துக் கொல்லும் போக்கு திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. தங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்களை தடி கொண்டு தாக்கிடும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை ஏற்க முடியாது. இது மிகவும்ஆபத்தான போக்கு’ என்றார். சீத்தாராம் யெச்சூரி இப்பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று பேசுகையில், மாணவர்களின் பிரச்சனையை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்று உறுதி அளித்தார்.காணாமல் போன மாணவர் நஜீப்பின் அன்னையும் இப்பேரணியில், பங்கேற்று உரையாற்றினார். ‘நாட்டில் மிகப்பெரிய தேசவிரோத அமைப்பு என்றால் அது ஏபிவிபிதான்’ என்று அவர் பேசும்போது மாணவர்கள் பலத்த கரவொலி எழுப்பி அதனை ஆதரித்தார்கள். உமர் காலித் மாணவர் தலைவர்களில் ஒருவரான உமர் காலித் பேசுகையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘பல்கலைக் கழகங்களில் அழிவுசக்திகள் தலைதூக்கி இருக்கின்றன’ என்று கூறியதை கிண்டலடித்தார். ‘ஆம், நாங்கள் அருண் ஜெட்லியின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறோம். நாட்டில் மதவெறியையும் சாதிவெறியையும் அழித்திடவே நாங்கள்விரும்புகிறோம்’ என்று பலத்த கரவொலிக்கிடையே முழங்கினார். மேலும், ‘நம்முடைய பல்கலைக் கழகங்களை அவர்களுடைய ஆர்எஸ்எஸ் பயிற்சி மையங்கள் என்று அவர்கள் நினைப்பார்களேயானால் அவர்கள் தவறு செய்கிறார்கள். பல்கலைக் கழகங்கள் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. அவை அனைத்துத்தரப்பு தில்லி மாணவர்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன’ என்றார். (ந.நி.) http://epaper.theekkathir.org/
Labels:
RSS/BJP
