SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

‘புத்திசாலியான பெண்ணுடன் வேலை செய்ய இயக்குநர்கள் விரும்புவதில்லை’ ‘‘இத்தனை வருடங்களாகக் கிட்டத்தட்ட தினமும் பாலியல் பாகுபாட்டை வெளிப்படுத்தும் கேலிகள், கொடுமைகளை நான் திரைத்துறையில் அனுபவித்துள்ளேன். சம்பளத்தில் ஆண், பெண்ணுக்கு இங்குப் பாகுபாடு உண்டு. பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உகந்த மரியாதை இங்குக் கிடைக்காது. கதாநாயகனுக்கு ரூ. 40 கோடி தரப்படும்போது அதில் 10ரூ கூட கதாநாயகிக்குத் தரப்படுவதில்லையே. இதில் எங்கே சம உரிமை நிலைநாட்டப்படும்? ஒரு கதாநாயகனால்தான் படம் ஓடுகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. திரைத்துறையில் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகை அட்ஜஸ்ட் செய்ததால் தான் அந்த நிலையில் உள்ளார் என நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால் இந்தப் பிரச்சனை குறித்து யாரும் பேசுவதில்லை. 2011-ல் நான் நடித்து வெளிவந்த யுத்தம் செய் படம் வெற்றியடைந்தபிறகும் நான் குறைந்த படங்களில் நடிப்பதில் ஆச்சர்யம் இருக்கமுடியுமா? புத்திசாலியான பெண்ணுடன் வேலை செய்ய இயக்குநர்கள் விரும்புவதில்லை. நியாயமான சம்பளம் கேட்கும் பெண்ணையும் யாரும் விரும்புவதில்லை. சம உரிமை கேட்கும் பெண்ணாக இருந்தால் உங்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும். பெண்களுக்கு நேரும் தொல்லைகள் குறித்து தமிழ்த்திரையுலகில் உள்ள ஆண்களும் பேசவேண்டும்.- நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் http://epaper.theekkathir.org/