SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 9, 2017

மின்னல் வேகத்தில் முன்னேறும் புரட்சித் தேர் ரஷ்யப்புரட்சி எனும் தேர் மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. புரட்சியில் போராளிகளின் குழுக்கள் எங்கெங்கும் வளர்ந்துகொண்டிருக்கின்றன; பரவிக் கொண்டிருக்கின்றன. பழைய அதிகாரத்தின் தூண்கள் தங்களின் அடித்தளங்களில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன; நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. எப்போதும் போலவே, இப்போது, பெட்ரோகிராடு முன்னணியில் நிற்கிறது. அதற்குப்பின்னால், காலத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் விதமாக எண்ணற்ற மாகாணங்கள் அணிவகுக்கின்றன.பழைய அதிகாரத்தின் சக்திகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன; ஆனால், இன்னும் அவை அழிந்துவிடவில்லை. அவை இப்போதைக்குப் பதுங்கியிருக்கின்றன; தங்களது தலையைத் தூக்கி சாதகமான தருணத்திற்காகக் காத்திருக்கின்றன; சுதந்திர ரஷ்யா பற்றி தங்களுக்குள்ளாகவே பேசிக் கொள்கின்றன. நம்மைச் சுற்றிலும் அந்த இருட்டுச் சக்திகளின் நாசகர வேலை இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம்…நம்மால் வெற்றிகொள்ளப்பட்ட உரிமைகள் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும்; அதேபோல, பழைய சக்திகள் முற்றிலும் நிர் மூலமாக்கப்பட வேண்டும். மாகாணங்களையும் இணைத்துக் கொண்டு ரஷ்யப் புரட்சி மேலும் முன்னேற வேண்டும்- இவையே, தலைநகரத்துப் புரட்சியாளர்களின் அடுத்த உடனடி இலக்காக இருக்க வேண்டும். ஆனால், எப்படி இதைச் செய்து முடிக்கப் போகிறோம்? இதைச் சாதிப்பதற்கு நமக்குத் தேவைப்படுவது என்ன?பழைய அதிகார பீடத்தை உடைத்து நொறுக்குவதற்கு, பேரெழுச்சியுடன் எழுந்து நிற்கும் தொழிலாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையில் தற்காலிகமான ஒரு கூட்டணி போதுமானது. அதே நேரத்தில், ரஷ்யப்புரட்சியின் பலம் என்பது தொழிலாளர்களுக்கும், வீரர்களின் சீருடையில் இருக்கிற விவசாயிகளுக்கும் இடையேயான கூட்டணியில் தான் அடங்கியிருக்கிறது.ஆனால், வெற்றிகொள்ளப்பட்ட உரிமைகளைப் பாதுகாத்திட, புரட்சியை மேலும் முன்னெடுத்துச் சென்றிட தொழிலாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையிலான கூட்டணி மட்டுமே போதுமானதல்ல.மிகவும் பொறுப்புணர்வுடன் இதற்காக ஒரு கூட்டணி உருவாக்கப்பட வேண்டியது அவசியம். எதிர்புரட்சியாளர்களின் ஆத்திரமூட்டல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் போதுமான அளவிற்கு உறுதியோடு நிற்கவும் உதவும் விதத்தில் அந்தக் கூட்டணி அமைய வேண்டும். ரஷ்யப் புரட்சியின் இறுதி வெற்றியை உறுதி செய்யும் விதத்தில் புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகர வீரர்களின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வது அவசியம்.இந்தக் கூட்டணியின் அங்கங்கள் என்பவை தொழிலாளர்களின் சோவியத்துக்கள் மற்றும் வீரர்களின் துணைநிலைப்படைகள். மேலும், இந்த சோவியத்துக்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக பின்னிப்பிணைந்தவையாகவும், இன்னும் வலுவாக அணி திரட்டப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இவற்றோடு, புரட்சிகர மக்களின் புரட்சிகர சக்தி மிகவும் சீரிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்; எதிர்புரட்சிக்கு எதிராக இவற்றையெல்லாம் உறுதியான முறையில், விசுவாசமான முறையில் உத்தரவாதப்படுத்த வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இந்த சோவியத்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் புரட்சிகர, சமூக ஜனநாயக சக்திகள் அவசியம் ஈடுபட வேண்டும்; மக்களின் புரட்சிகர சக்தியின் ஒரு அங்கமாக மத்திய தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் சோவியத் என்ற கட்டமைப்பின் கீழ் அவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.தொழிலாளர்களே, உங்கள் சக தோழர்கள் மற்றும் தலைவர்களோடு நெருக்கமாக இருங்கள்; ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் பதாகையின் கீழ் அணி திரளுங்கள்!விவசாயிகளே, விவசாயிகள் சங்கங்களில் அணி திரளுங்கள்; ரஷ்யப் புரட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு ஆதரவாக அணி திரளுங்கள்!வீரர்களே, உங்களது சங்கங்களில் அணி திரளுங்கள்; ரஷ்ய புரட்சிகர ராணுவத்தின் உண்மையான கூட்டாளிகளான ரஷ்ய மக்களோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்! தொழிலாளர்களும், விவசாயிகளும், வீரர்களும் எங்கெல்லாம் தொழிலாளர் மற்றும் வீரர்களது சோவியத்துக்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் ஒன்றுபடுங்கள்; ரஷ்ய புரட்சிகர சக்திகளது குவி மையக் கூட்டணியின் அங்கங்களாக ஒன்றுபடுங்கள்!பழைய ரஷ்யாவின் இருண்ட சக்திகளிடம் இருந்து முழுமையான, வெற்றியை உறுதி செய்வது இதில் தான் அடங்கியிருக்கின்றது.ரஷ்ய மக்களின் அடிப்படை கோரிக்கைகளை உத்தரவாதம் செய்வது இதில் தான் அடங்கியிருக்கிறது; விவசாயிகளுக்கு நிலம், தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு, ரஷ்யாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு ஜனநாயக குடியரசு ஆகியவையே அந்த அடிப்படை உரிமைகள்!பிராவ்தா, எண் 8- மார்ச் 14,1917ஒப்பம் கே. ஸ்டாலின்தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன் http://epaper.theekkathir.org/