SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, March 6, 2017

மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியை விடுவிக்க முடியாது உச்சநீதிமன்றம் அதிரடி புதுதில்லி, மார்ச் 6 - பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து, பாஜக தலைவர்களான அத்வானி,முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி உள்ளிட் டோரை விடுவிக்க முடியாதுஎன்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.1992-ஆம் ஆண்டு, பாஜக - ஆர்எஸ்எஸ் சங் பரிவார அமைப்புக்களால், பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதையொட்டி வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், பாபர்மசூதியை இடிப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதாக பாஜக மூத்த தலைவர்களான அத்வானி,முரளி மனோகர் ஜோஷி,உமா பாரதி மற்றும் கல் யாண் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.9 ஆண்டுகளாக இந்தவழக்கை விசாரித்த, விசாரணை நீதிமன்றம், அத் வானி உள்ளிட்டோர்தான் பாபர் மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டினர் என்பதற்கான ஆதாரம் இல்லைஎன்று கூறி அவர்களை 2001-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றமும், கடந்த2010-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. எனினும், இந்த தீர்ப்பு வெளியான 9 மாதங்கள் கழித்து, அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சிபிஐதரப்பில் உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மறுபுறம், சிபிஐ-யின்மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கக் கூடாது என்றும், தங்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண் டும் என்றும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிஉள்ளிட்ட பாஜக தலைவர்களும் உச்சநீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்தனர். சிபிஐ 9 மாதம் கழித்தேஇவ்வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதால்- இந்த தாமதத்தைக் கணக்கில் கொண்டு தங்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.ஆனால், ஒரு வழக்கைமுழுமையாக விசாரிக்காமல், இதுபோன்ற ‘டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் யாரையும் விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.