SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Monday, March 6, 2017

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் புதுதில்லி, மார்ச் 6 - வாக்குறுதி அளித்தபடி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தர ரிசர்வ் வங்கி மறுப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுமாறும் அவர் கூறினார். இந்த வகையில் 93 சதவிகிதமான பழைய ரூபாய்நோட்டுகள் வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்டு விட்டன. சுமார் 7 சதவிகிதம் நோட்டுகள் மட்டும் மாற்றப்பட முடியாமல் போயின.இந்த 7 சதவிகித ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்போர், மார்ச் 31-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியை அணுகி, தங்கள் வசம்உள்ள பழைய ரூபாய் நோட்டுக் களை கொடுத்து விட்டு, புதிய ரூபாய் நோட்டுக்களை பெறலாம் என்றும், இதன்பிறகும் பழைய நோட்டுக்களை மாற்றாமல் வைத்திருந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தோர் அவற்றை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்தனர். ஆனால், அவர்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின், வங்கிக்கு உள்ளே அனுமதிப்பதற்கே ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.இந்நிலையில், சுமார் 71 லட்சம் ரூபாய் அளவுக்கு மதிப்பிழந்த நோட்டுக்களை வைத்திருந்த ஒருவர், உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு ஏற்கெனவே உறுதியளித்தபடி மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளில் பணத்தைமாற்றிக் கொள்ளலாம் எனும்போது,தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களை ஏன் மாற்றித்தர மறுக்கிறீர்கள்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.