This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Tuesday, March 7, 2017
மோடியின் சிறந்த சீடர் என்று நிரூபித்துவிட்டார் பழனிசாமி மதுரை பொதுக்கூட்டத்தில் பிரகாஷ்காரத் கடும் சாடல் மதுரை, மார்ச் 7- தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை மிகக் கடுமையாக உயர்த்தியதன் மூலம், நரேந்திர மோடியின்சிறந்த சீடர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிட்டார் என்று பிரகாஷ்காரத் கடுமையாக சாடினார். ஊழல் அதிமுக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அக்கட்சிக்குள் நடக்கும் அதிகாரப்போட்டியையும், திமுகவின் அதிகாரவேட்கையையும், தமிழகத்தில் மதவெறி அரசியலை திணிக்க முயலும்பாஜகவையும் அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் ஒன்பது மண்டலங்களில் எழுவோம் தமிழகமே என்ற முழக்கத்துடன் மார்ச் 2 முதல் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப்பயணம் திங்களன்று இரவு மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டத்துடன் நிறைவு பெற்றது.இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி,நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் நல்லகாலம் பிறக்கும் என்று கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளும் ஏழை, எளிய மக்களும் துயரத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு நல்ல காலம் வந்துசேரவேயில்லை. வறட்சியின் பிடியில் சிக்கியதாலும் அரசின் கொள்கைகளாலும் தமிழகத்தில் 275 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சியாலும் செத்து மடிந்திருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளம் உட்பட தென் மாநிலங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. ஆனால் மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. விவசாய நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்துகிறது. அதுவே அவர்களுக்கு உடனடி தீர்வினை தருவதாக அமையும். தமிழகத்தில் ஆளும் அதிமுகஅரசு உடனடியாக சிறு,குறு, ஏழைவிவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து வற்புறுத்தி பெற வேண்டும்.ஒருபுறம் இந்திய நாட்டின் வங்கிகள் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் கடன் என்ற பெயரில் பணத்தை வாரியிறைக்கின்றன. கிட்டத்தட்ட 8 லட்சம் கோடி அளவிற்கு பெரு முதலாளிகள் வாங்கிய கடன்கள் பாக்கி இருக்கிறது. இதை வராக் கடன் என்று கூறி தள்ளுபடி செய்வதற்கு மோடி அரசு முயற்சிக்கிறது. 2015 மற்றும் 16 ஆம்ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.12 லட்சம் கோடி அளவிற்கு பெரு முதலாளிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மறுக்கிறார்கள். ஆட்சிக்கு வரும் போது, ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று பிரதமர்மோடி வாக்குறுதியளித்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு கணக்கின்படி இதுவரை வெறும் 1.5 லட்சம் புதியவேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவது, அதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கிற வேலை வாய்ப்புகளை அழித்தொழிக்கும் பணியில்தான் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதி செல்லா நோட்டு விவகாரம். மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டபோது, நாடு முழுவதும் ரூ.4.5 லட்சம் கோடி அளவிற்கு கறுப்புப்பணமும் கள்ளப்பணமும் உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, செல்லா நோட்டு அறிவிப்பால்அந்த பணமெல்லாம் சிக்கிவிடும் என்று கூறினார். ஆனால், ஒட்டுமொத்தமாக நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.15.5 லட்சம் கோடி; இதில் 98 சதவீத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் ஆகிவிட்டன. இதன்பொருள் என்ன? கறுப்புப்பணம் என்று மோடியால் குறிப்பிடப்பட்ட நோட்டுகளும் சேர்ந்து மொத்தமாக டெபாசிட் ஆகிவிட்டன.கறுப்புப்பணம் வெள்ளைப்பணமாகிவிட்டது. பெரு முதலாளிகள் மற்றும் பெரும் பணக்காரர்களின் கையில் இருந்த கறுப்பை வெள்ளையாக்கவே மோடி உதவியிருக்கிறார். மறுபுறம் இந்த அறிவிப்பால் நாடுமுழுவதும் ஏழை, எளிய மக்கள், உதிரி பாட்டாளிகள் உட்பட அனைத்துதரப்பினரும் மிகக் கடுமையானதுயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென பெட்ரோல், டீசல்விலையை கடுமையாக உயர்த்தியுள்ளார். பெட்ரோலிய பொருட்களின் மீதான வாட் வரியை உயர்த்தியதன் விளைவாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.78 மற்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.70 அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்கள் பெற்றுள்ள புதிய முதல்வர் பழனிசாமி மோடியின் சிறந்த சீடர் என்பதை நிரூபித்துவிட்டார். 2014 மே மாதம்ஆட்சிக்கு வந்தபிறகு மோடி இதுவரை11 முறை பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலை 60 சதவீதஅளவிற்கு வீழ்ச்சியடைந்த போதிலும்அதன் பலன் நாட்டு மக்களுக்கு கிடைக்கவிடாமல், வரிகளை உயர்த்தி மிகப்பெரும் கொள்ளையை பாஜக அரசு நடத்தி கொண்டிருக்கிறது.இவை ஒருபுறமிருக்க, நாடு முழுவதும் பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரம்மதரீதியாக மக்களை துண்டாடதீவிர முயற்சிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பகிரங்கமாகவே மதவெறியை தூண்டும் விதத்தில் பேசினார். உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய மக்களுக்கான இடுகாடு (கபர்ஸ்தான்) அதிகமாக உள்ளது என்றும் இந்துக்களுக்கான சுடுகாடு (சம்ஸான்) குறைவாக உள்ளது என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால்அதிகமான அளவில் சுடுகாடு உருவாக்கப்படும் என்றும் கூறினார். அதேபோல உத்தரப்பிரதேச அரசு முஸ்லிம்களின் பண்டிகைக்குத்தான் அதிகளவில் மின்சாரம் சப்ளை செய்கிறது என்றும் திட்டமிட்ட பொய்யுரையை மோடி முன்வைத்தார். இவை அனைத்தும் திட்டமிட்ட மதவெறிப் பிரச்சாரமே. தமிழகத்திலும் இதுபோன்ற முயற்சிகளை ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரம் மேற்கொண்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து தமிழகஅரசியலிலும் ஆட்சியிலும் ஏற்பட்டசூழ்நிலைமைகளை தனது மதவெறிஅரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆளும் அதிமுக இரண்டு கோஷ்டிகளின் மோதல்களில் சிக்கித் தவிக்கிறது. அவர்கள் மக்கள்பிரச்சனைகளை கவனிக்க தயாராகஇல்லை. அக்கட்சியின் தலைமைபெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியின் தலைமை சிறையிலிருந்து ஆட்டுவிக்கப்படுகிறது. அப்பட்டமான ஊழல் ஆட்சி இது. இவர்கள் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பையோ, வேலையின்மை பிரச்சனையையோ தீர்க்க தயாராகயில்லை. கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் 150 நாட்கள் வேலை தரவேண்டும்; ஆனால் 50 நாள் கூடவேலை தரவில்லை. ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் சப்ளை இல்லை. இவை உள்ளிட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பிரச்சனைகள் எதையும் தீர்ப்பதற்கான கொள்கைவழி ஏதுமின்றி கடந்த 3 மாத காலமாகஅதிமுக அரசு நிலை குலைந்து நிற்கிறது.ஒட்டுமொத்தத்தில் தமிழக அரசியல் என்பது அற நெறி பிறழ்ந்து, கொள்கை வழி தவறி, ஊழல் சேற்றில் சிக்கி சீரழிந்திருக்கிறது. அதை அங்கீகரிக்கிற மனநிலை திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது.. அதிமுகவின் பொதுச் செயலாளர் ஊழல் குற்றவழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று சிறையிலிருக்கிறார். அதை அவரது கட்சியினர் பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களும் சிறையில் இருந்த வரலாறு உண்டு.திரிபுராவின் முதலமைச்சர் மாணிக்சர்க்கார் அவசர நிலை காலத்தில் 2ஆண்டு காலம் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். கேரளத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன்பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். ஆனால்அவர்கள் ஏழை மக்களுக்காக, தொழிலாளி வர்க்கத்திற்காக, விவசாயிகளுக்காக போராட்டங்களுக்கு தலைமையேற்றதன் காரணமாக சிறைக்கொடுமை அனுபவித்தார்கள். இந்த சிறை வாசத்தை கம்யூனிஸ்ட்டாகிய நாங்கள் பெருமிதத்துடன் நெஞ்சில் ஏந்துகிறோம். ஆனால் நீங்கள் ஊழல் முடைநாற்றம் எடுத்து குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலென்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது? எனவே இன்றைக்கு தமிழகத்தில் அற நெறி சார்ந்த அரசியலை, நேர்மையான அரசியலை, கொள்கை வழிசார்ந்த அரசியலை உயர்த்திப் பிடிக்கவேண்டிய, உரத்து பேசவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அத்தகைய அரசியலை, மாற்றுக் கொள்கையுடன் கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம். இடது ஜனநாயக அணி சேர்க்கை என்ற புதிய அரசியல் பாதை தமிழகத்தில் மலரட்டும். எழுக தமிழகமே, எழுவோம் தமிழகமே. http://epaper.theekkathir.org/
Labels:
THEEKATHIR