SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 7, 2017

நெடுவாசல் திட்டத்திற்கும் ஓஎன்ஜிசி-க்கும் சம்பந்தம் இல்லை! செயல் இயக்குநர் ராஜா விளக்கம் சென்னை, மார்ச் 7 - நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும், இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்கும் (ஓஎன்ஜிசி) எந்த தொடர்பும் இல்லை என்று அதன் செயல் இயக்குநர் ராஜா கூறியுள்ளார்.மேலும், எண்ணெய் எடுப்பதால் விவசாயம் பாதிக்குமா? என்பதுகுறித்தும் அவர் நீண்ட விளக்கங்களை அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக ராஜா மேலும் கூறியிருப்பதாவது:1955-ஆம் ஆண்டு முதல் காவேரி படுகைகளில் நாங்கள் எண்ணெய் எடுப்பது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதில் 1985-ஆம்ஆண்டுதான் முதல் வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் மொத்தம் 720 எண்ணெய் கிணறுகள் உள்ளன. இவற்றிலிருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 840 டன் கச்சா எண்ணெய்யை எடுத்து வருகிறோம். நெய்வேலி முதல் இராமநாதபுரம் வரை தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நெடுவாசலில் கச்சா எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் எங்கே கிடைக்கிறதோ அங்கேதான் எரிவாயு எடுக்கமுடியும். அந்த வகையில், விவசாயிகளிடம் சம்மதம் பெற்றே குழாய்கள் பதிக்கப்பட்டன. இதுபோன்ற திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிக்காது. நிலத்தடி நீர் பாதிக்காது என்றும், நிலத்தடி நீர் பாதிக்கும் எனவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 2000 மீட்டர் ஆழ்துளை கிணறுகள் போட்டு, இரும்புகுழாய்கள் போடப்பட்டு பாதுகாப்பான முறையில் தான் எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதனால் நிலத்தடிநீருக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. எடுத்துக்காட்டாக சொன்னால், 1955-ல் இருந்து இதுவரை தமிழகத்தில் எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டதில்லை. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தான் விவசாயம் பாதித்துள்ளது தவிர, எண்ணெய் கிணறுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மக்கள் மத்தியில் நேரில் சென்று ஹைட்ரோ கார்பன் பற்றி விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்,நெடுவாசலுக்கு கொடுத்தது வெறும் 10 சதுர கிலோ மீட்டர் மட்டும் தான். நெடுவாசலில் எடுக்கதிட்டமிட்டது எண்ணெய் மட்டும்தான். மீத்தேன் திட்டம் அல்லது ஷேல் கேஸ் அங்கு இல்லை. மீத்தேன் எரிவாயுத் திட்டம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநில ஆற்றுப் படுகைகளிலும், இதுபோன்ற வேறுபல மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதேநேரம் நெடுவாசல் திட்டத்திற்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை. ஜென் லேபாரட்ரீஸ் என்கிற தனியார் நிறுவனம் தான் அங்கு திட்டம் தொடங்க உள்ளது. ஆனால் இன்னும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு ஓஎன்ஜிசி செயல் இயக்குநரர் ராஜா கூறியுள்ளார்.